For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாப் 15 அழகான பாலிவுட் அன்னையர்கள்!!!

By Super
|

குழந்தை பெற்ற பிறகு, பெண்களின் உடல் வடிவம் சீரற்றுப் போய், குண்டாகிவிடுவார்கள் என்று பயந்து;f கொண்டிருந்த காலம் போயே போய்விட்டது. பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டாலோ, அதிகமாக தாய்ப்பால் கொடுத்தாலோ, தமது கட்டுக்கோப்பான உடல் எழில் குறைந்துவிடும் என்று எண்ணி, குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குவார்கள். அப்படிக் குழந்தை பெற்றுக் கொண்டாலும், தாய்ப்பால் கொடுப்பதை விரைவிலேயே நிறுத்திவிடுவார்கள்.

ஆனால், பின்வரும் பாலிவுட் அன்னையர்கள், குழந்தை பெற்றப் பிறகும் தமது உடலைக் கட்டுக்கோப்புடன் பேணி பல இல்லத்தரசிகளுக்கும், பணிபுரியும் பெண்களுக்கும் உத்வேகத்தை அளித்து முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். கர்ப்பமும், தாய்மையும் பெண்களை குண்டாக்கிவிடாது என்று அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். உண்மையிலேயே இதற்கு முன் அவர்கள் இவ்வளவு அழகாக எப்போதும் இருந்ததில்லை. இப்போது பாலிவுட்டில் இருக்கும் கச்சிதமான உடலமைப்பைப் பேணி வரும் டாப் 15 அன்னையர்களின் பட்டியலை பார்ப்போம். இந்த வரிசையில் முதல் இடம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty)

ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty)

இவரது எடை குழந்தை பெறும் முன் இருந்ததைவிட, ஒரு கிலோ கூட அதிகரித்ததாகத் தெரியவில்லை. இந்த உடல் பராமரிப்பிற்கு இவரது உடல் கட்டுத்தகுதிப் பயிற்சிகள் தான் (fitness plan) காரணம். இவர் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். அதைப் பற்றிய டி.வி.டிக்கள் பலவும் வெளியிட்டுள்ளார். மேலும் தமது கட்டான உடலமைப்புக்குக் காரணம் யோகா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லாரா தத்தா (Lara Dutta)

லாரா தத்தா (Lara Dutta)

முன்னாள் பிரபஞ்ச அழகியான இந்த கவர்ச்சியான அன்னை, தாம் எப்போதுமே கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். இவர் தமது குழந்தை பேறுக்குமுன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்த பின்னர் இவரது எடை இன்னும் குறைந்து, இதற்கு முன்பில்லாத வகையில், வனப்புடன் திகழ்கிறார்.

மலைக்கா அரோரா கான் (Malaika Arora Khan)

மலைக்கா அரோரா கான் (Malaika Arora Khan)

பாலிவுட்டிலுள்ள கட்டுடலைக் கொண்ட அன்னையரில் இவரும் ஒருவர். கவர்ச்சிக் கன்னிகளின் ராணி என்று இவரைச் சொல்லலாம். அதுமட்டுமல்ல, சுண்டியிழுக்கும் அழகு, மயக்கும் கவர்ச்சி என்று பல விஷயங்களைத் தன்னகத்தே கொண்டவர். தினந்தோறும் மேற்கொள்ளும் யோகா பயிற்சிகளும், உடற்பயிற்சிக்கூடத்தில் செய்து வரும் உடற்பயிற்சிகளுமே தனது மேனியைக் கச்சிதமாகப் பேணுவதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

கஜோல் (Kajol)

கஜோல் (Kajol)

தனது மூத்த மகள் நியுஷா பிறந்து ஏழு ஆண்டுகள் கழித்து, யுக் என்னும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மீண்டும் தாயாகியுள்ளார் பாலிவுட் நடிகை கஜோல். இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் கஜோல் இன்னும் கச்சிதமான கட்டுடலுடன், மீண்டும் நடிக்க வரும் தகுதியுடன் இருக்கிறார்.

செலினா ஜேட்லி (Celina Jaitley)

செலினா ஜேட்லி (Celina Jaitley)

முன்னாள் பாலிவுட் நடிகையான செலினா ஜேட்லி இரட்டை ஆண் குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கிறார். இருந்தும் அவரது எடை ஒரு அவுன்சு கூட அதிகரித்ததாகத் தெரியவில்லை. அவர் திரையுலகிலிருந்து அண்மைக் காலமாக சற்று விலகியே இருந்தாலும், 'ஜனாஷீன்' திரைப்படத்தில் அவர் நீச்சலுடையில் கவர்ச்சி காட்டியதை யாராவது மறந்துவிட முடியுமா?

மாதுரி தீட்சித் (Madhuri Dixit Nene)

மாதுரி தீட்சித் (Madhuri Dixit Nene)

90-களில் வெள்ளித்திரையின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் தான் மாதுரி தீட்சித். 2002-ல் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பி 'ஆஜா நாச்லே' என்னும் திரைப்படத்தில் நடித்தார். இன்னும் திரையுலகத்துடன் தொடர்பில் உள்ளார்.

டிவிங்கிள் கன்னா (Twinkle Khanna)

டிவிங்கிள் கன்னா (Twinkle Khanna)

டிவிங்கிள் கன்னா முதன் முதலில் திரையில் தோன்றிய பொழுது, அவரது தோற்றம் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். தாய்மையும், திரையிலிருந்து ஒதுங்கி இருந்த காலங்களும் அவரது மேனி எழிலைப் பலமடங்கு மெருகேற்றி, அவரைப் பிரமிக்கவைக்கும் அழகாக்கிவிட்டது. இக்கவர்ச்சியான அன்னை, தமது உள்வடிவமைப்புப் பணிகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து வருகிறார். மேலும் தமது மகன் ஆரவ்வுடன் அதிக நேரம் கழிப்பதையே விரும்புகிறார்.

கரீஷ்மா கபூர் (Karisma Kapoor)

கரீஷ்மா கபூர் (Karisma Kapoor)

'செக்ஸி' சொல்லைப் பயன்படுத்தத் தயங்கிய காலங்களில் கூட செக்ஸியான பெண் என்று பெயரெடுத்தவர் கரீஷ்மா கபூர். ஆனால் இதுவரையிலும் செக்ஸ் பாம் என்று பெயரெடுக்கவில்லை. இருப்பினும் கவர்ச்சியான குரல், நீளமான கேசத்துடன் அடையாளம் தெரியாத அளவுக்கு அழகாகியுள்ளார். ஆம் அவ்வளவு அழகு.

ரவீனா டான்டன் (Raveena Tandon)

ரவீனா டான்டன் (Raveena Tandon)

அவரது படங்களில் வெற்றியடைந்தவற்றை விட தோல்வியடைந்தவை தான் அதிகம். இருந்தாலும், அவர் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும், இன்னும் கச்சிதமான உடலுடன் இருக்கிறார் என்ற உண்மையை யாராலும் மறைத்துவிட முடியாது.

சோனாலி பிந்த்ரே (Sonali Bendre)

சோனாலி பிந்த்ரே (Sonali Bendre)

வெள்ளித்திரையில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் இருந்ததைவிட, அவரது வயது தற்போது கூடிவிட்டதா? என்று நோக்கினால் இல்லையென்று தான் கூறுவீர்கள். மாடலிங் செய்து வரும் இந்த நடிகை ,தனது உடலை இன்னும் சிறப்பாகப் பராமரித்து, தனது கச்சிதமான எழிலைப் பேணி வருகிறார். மேலும் இன்னும் இளமையாக சுறுசுறுப்பாகத் திகழ்கிறார்.

சுசேன் கான் (Suzanne Khan)

சுசேன் கான் (Suzanne Khan)

ரித்திக் ரோஷனின் மனைவியான சுசேன் கான், தனது கணவரின் நிழலில் எப்போதுமே வாழ்ந்ததில்லை. உள் அலங்கார நிபுணரான இவர் தமது தொழிலில் சிறப்பான வெற்றிப் பெற்று, தனித்தன்மையுடன் திகழ்கிறார். இரண்டு குழந்தைகளின் தாயான இவர் இன்னும் தனது உடலைக் கச்சிதமாகப் பேணி, "கட்டான உடலும், அழகாகத் தோன்றுவதும் வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள்" என்று கூறுகிறார்.

மெஹர் ஜெஸ்ஸியா (Mehr Jessia)

மெஹர் ஜெஸ்ஸியா (Mehr Jessia)

ஒவ்வொரு முறையும் மெஹர் ஜெஸ்ஸியாவை நாம் பார்க்கும் போதும் நமது இதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானவர் இந்த சூப்பர் மாடல். அவர் இன்னும் கச்சிதமான உடலுடன் முன்னணியில் திகழ்கிறார் என்றால் அதற்குக் காரணம், அவருக்கு பேட்மின்டனிலும், நீச்சலிலும் உள்ள ஈடுபாடு தான்.

நந்திதா தாஸ் (Nandita Das)

நந்திதா தாஸ் (Nandita Das)

திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகையுமான நந்திதா தாஸ், தமது உடல் வனப்பில் எதையோ கூட்டியுள்ளார். அவர் தமது தாய்மைப் பருவத்தினை அனுபவித்து மகிழ்கிறார்.

ஸ்ரீதேவி (Sridevi)

ஸ்ரீதேவி (Sridevi)

இப்பட்டியலில் கட்டாயம் இடம் பெற வேண்டிய நடிகை ஸ்ரீதேவி ஆவார். நாற்பது வயதிலும் பிரமிக்க வைக்கும் அழகுடன் திகழும் இவர் "வயது என்பது ஒரு சாதாரண எண் தான். வயதுக்கும் அழகுக்கும் தொடர்பில்லை. எந்த வயதிலும் அழகாகத் தோன்றலாம்" என்கிறார். என்றுமே வசீகரிக்கும் அழகுடன் திகழ்ந்தவர், திகழ்பவர். இன்னும் சொல்லப்போனால், இப்போது முன்பைவிட அழகுடன் திகழ்கிறார். சமீபத்தில் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aiswarya Rai Bacchan)

ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aiswarya Rai Bacchan)

பாலிவுட் அன்னையரிலேயே மிகவும் கவர்ச்சியானவராகத் திகழ்பவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி அனைவரது கவனத்தையும் எப்போதுமே தம் பக்கம் கவர்ந்திழுப்பவர். பாலிவுட் அன்னையரில் இவருக்கு தான் முதலிடம். அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்காது.

டாப் 15 அழகான பாலிவுட் அன்னையர்கள்!!!

இந்த பெண் யார் என்று சொல்ல முடியுமா????

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 fittest moms of bollywood

Gone are the days when motherhood used to lead to an ill-shaped, flabby body. These Bollywood moms, who have maintained their figure even after having kids, have become a source of inspiration and role models for many housewives and working women.
Desktop Bottom Promotion