For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயுடன் சந்தோஷமாக வாழும் 9 பிரபலங்கள்!!!

By Super
|

சர்க்கரை நோய் என்பது பொதுவான ஒரு நோய். அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். ஆனால் அதனால் துவண்டு போகாமல். அதனை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சொல்வது சுலபம், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வது கேட்கிறது. ஆனால் அப்படி இல்லை, சர்க்கரை நோய் இருந்தும், அதனை எதிர்த்து போராடி வாழ்க்கையில் ஜெயித்த சில சினிமா பிரபலங்களை பற்றி சொன்னால், அப்போது ஒப்புக் கொள்வீர்களா?

சமீபத்தில் தனக்கு டைப்-2 வகை சர்க்கரை நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் கூறியுள்ளார். நம் உடம்பில் போதிய அளவு இன்சுலின் சுரக்காமல் போவதால் ஏற்படும் இந்த சர்க்கரை நோய் ஆயுள் முழுவதும் நீடிக்கும். தற்போது 57 வயதாகும் இவர், தன்னுடைய 36-ஆவது வயதிலிருந்தே அதிக இரத்த கொதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இணையதளத்தில் தெரிவித்துள்ளது. முறையான பத்திய உணவை உட்கொண்டால், இந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆனால் டாம் ஹாங்க்ஸோ இதனை செய்யவில்லை.

"நீங்கள் பள்ளியில் இருந்த எடையை இப்போது அடைந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, டைப்-2 வகை சர்க்கரை நோயையும் நீங்கும் என்று என் டாக்டர் கூறினார். அப்போது தான் அப்படியெனில் டைப்-2 வகை சர்க்கரை நோய் என்னை விட்டு போக போவதில்லை என்று கூறிவிட்டேன்." என்று அவர் கூறியுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம் டாம் ஹாங்க்ஸ் மட்டுமல்ல. இதோ மற்றவர்களையும் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனம் கபூர்

சோனம் கபூர்

அனில் கபூரின் மகளான சோனம் கபூர் தன்னுடைய பள்ளி பருவத்தில் இருந்தே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆரோக்கியமாக இருக்க தினமும் கடுமையான பத்திய சாப்பாடுடன், இன்சுலினையும் எடுத்துக் கொள்கிறார். அவருடைய கடுமையான வேலைப்பளுவால் இதனை கடைப்பிடிக்க கஷ்டப்பட்டாலும், சீக்கிரமே அதனுடன் ஒத்து போக பழகிக் கொண்டார். இந்த வியாதியை எதிர்த்து போராடி, வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கவும் செய்கிறார்.

ஹல்லே பெர்ரி

ஹல்லே பெர்ரி

இந்த பாண்ட் நடிகைக்கு சர்க்கரை நோய் இருப்பது அவருடைய 23 வயதில் கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மயக்கம் ஏற்பட்ட போது தான், இந்த நோய் அவருக்கு இருப்பது தெரிய வந்தது. தன் வீட்டில் யாருக்குமே இந்த நோய் இல்லாததால், அவர் இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அன்றிலிருந்து இன்று வரை தினமும் இன்சுலின் ஊசி போட்டு கொள்கிறார். அதே போல் பத்திய உணவைத் தான் உட்கொள்கிறார். இப்போது குறைவான கொழுப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார். அதே போல் ஜங்க் உணவுகள் மற்றும் இனிப்புகளையும் அவர் உண்ணுவதில்லை.

சல்மா ஹயேக்

சல்மா ஹயேக்

கவர்ச்சியான வளைவு நெளிவுகளை கொண்டுள்ள சல்மா ஹயேக்கிற்கு, கெஸ்டேஷனல் சர்க்கரை நோய் (கர்ப்ப காலத்தில் ஏற்படுவது) உள்ளது. இது அவர் குடும்பத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். "கெஸ்டேஷனல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது முதலில் எனக்கு தெரியவில்லை. கர்ப்ப காலத்தில் இரத்தக் கொதிப்பு இருக்கும் பெண்களுக்கு இது ஏற்படும். கர்ப்பமாக இருப்பதால் எனக்கு கவலை ஏற்பட்டதா அல்லது ஏதாவது தவறாக நடக்க போகிறது என்று எண்ணி எனக்கு கவலை ஏற்பட்டதா என்பதை முதலில் என்னால் உணர முடியவில்லை. இந்நேரத்தில் ஒன்பது மாதங்களும் எனக்கு குமட்டல் இருந்தது. இதுவே இதற்கான அறிகுறியாகும்." என்று அமெரிக்கன் பேபி என்ற பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

ஸ்விங் போடுவதில் கில்லாடியான வாசிம் அக்ரமிற்கு சர்க்கரை நோய் இருப்பது அவருடைய முப்பதாவது வயதில் கண்டறியப்பட்டது. இதனை கேள்விப்பட்ட இந்த ஸ்விங் பந்து வீச்சாளர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். அதன் பின் தன்னுடைய உணவுப்பழக்கத்தை அடியோடு மாற்றினார். மேலும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, இன்சுலினும் எடுத்துக் கொண்டார். இந்த வியாதி இவரை கிரிக்கெட்டில் சாதிக்க வைப்பதில் எந்த ஒரு தடையையும் போடவில்லை. அதனால் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் விளங்கினார்.

கௌரவ் கபூர்

கௌரவ் கபூர்

தொலைகாட்சி சேனலான 'வி' சேனலில் முன்னாள் தொகுப்பாளராகவும், ஐ.பி.எல். கிரிகெட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் விளங்கும் கௌரவ் கபூர், தன்னுடைய 22 ஆவது வயது முதல் டைப் 1 வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைப் பற்றி முழுமையாக சோதனை செய்து கொண்டு, அதனை எதிர்த்து போராட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தினமும் யோகா மற்றும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு, தன்னை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதே போல் பத்திய உணவை உட்கொண்டு, மதுபானம் பருகாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

ட்ரூ கேரே (Drew Carrey)

ட்ரூ கேரே (Drew Carrey)

அதிக எடையை கொண்ட புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான கேரே, தனக்கு டைப் 2 சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் 80 பவுண்ட் எடையை குறைத்தார். எடையை குறைத்ததனால், இனி சர்க்கரை நோய்க்கான மருந்து தனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜார்ஜ் லூகாஸ்

ஜார்ஜ் லூகாஸ்

ஸ்டார் வார்ஸ் படத்தை உருவாக்கிய இவர் கல்லூரி படிப்பை முடித்து, வியட்நாம் போரில் பங்கு கொள்ள சென்ற வேளையில், தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். போருக்கு செல்வதற்கு முன் நடந்த உடல் சோதனையின் போது தான், தனக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.

பில்லி ஜீன் கிங் (Billie Jean King)

பில்லி ஜீன் கிங் (Billie Jean King)

எப்போதுமே சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக விளங்கும் இவர், தனக்கு இந்த வியாதி இருப்பதை 2006-ஆம் ஆண்டு தெரிந்து கொண்டார். நோயை எதிர்த்து போராட 35 பவுண்ட் எடையை குறைத்தார். மேலும் சர்க்கரை நோயை பற்றிய விழிப்புணர்வையும் செய்து கொண்டு வருகிறார்.

சர்க்கரை நோய் தகுதி, அந்தஸ்த்து என்றெல்லாம் பார்த்து வருவதில்லை. அது யாருக்கு வந்தாலும் சரி, அதனை எதிர்த்து எப்படி போராடி ஜெயிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொண்டால் போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Celebrities Living With Diabetes

Tom Hanks is not the only celebrity suffering from diabetes. Here are some other celebrities who’ve tackled the menace.
Desktop Bottom Promotion