For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை...

By Maha
|

டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் பண்டிகை தான் ஞாபகம் வரும். அவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை விட ஆரம்பித்தால், அப்போது இந்த வருடப் பண்டிகை நன்கு ஸ்பெஷலாக இருக்க வேண்டுமென்று பல திட்டங்களை போடுவோம். ஏனெனில் வீட்டிற்கு நிறைய உறவினர்கள் வருவார்கள். வீட்டில் கேக் மற்றும் பார்ட்டி என்று வீடே குதூகலமாய் இருக்கும். அந்த நேரம் வீடு நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பே பரிசுகள், சாண்டா தான். எனவே இந்த நாளன்று குழந்தைகள் சாண்டாவிடம் இருந்து, பரிசுகளை எதிர்ப்பார்கள். அதேப் போன்று சாண்டாவும் அவர்களுக்கு இரவில் வந்து, பரிசுகளை குழந்தைகள் அருகில் வைத்து விட்டு சென்று விடுவார். எனவே குழந்தைகளும் மிகவும் ஆவலோடு, இந்த பண்டிகையை எதிர்பார்ப்பார்கள். அத்தகைய சாண்டா வீட்டிற்கு வரும் போது வீடு அழகாக இருக்க வேண்டுமல்லவா? ஆகவே அவ்வாறு அந்த பண்டிகை வருவதற்கு முன்னர் என்னவெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

Things To Do Before Christmas

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் செய்யக்கூடியவை...

ஷாப்பிங்: எந்த ஒரு பண்டிகை என்றாலும் நிச்சயம் ஷாப்பிங் இல்லாமல் இருக்காது. அதேப் போல் தான் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் ஷாப்பிங் செல்வோம். சாதாரணமாக ஷாப்பிங்கின் போது, உடை, அணிகலன் என்று தான் வாங்குவோம். ஆனால் இந்த பண்டிகையின் விஷேசமான ஷாப்பிங் என்னவென்றால், அது வீட்டை அலங்கரிக்க சில அலங்காரப் பொருட்களை வாங்குவது தான். உதாரணமாக, கிறிஸ்துமஸ் அன்று வைப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம், அலங்கரிக்க லைட்டுகள் மற்றும் மற்ற அலங்காரப் பொருட்கள் என்று வாங்குவோம். மேலும் பூக்களை வாங்கி, வீட்டை அலங்கரித்து, கூடுதலான அழகை வீட்டிற்கு கொடுத்து பளிச்சென்ற தோற்றத்தை கொடுப்பது தான்.

அலங்காரம்: கிறித்தவர்களுக்கு ஒரு பெரிய பண்டிகை என்றால் அது கிறிஸ்துமஸ் தான். இந்த பண்டிகையின் போது வீடு நன்கு அழகாக லைட்டுகளால் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறமான தோட்டத்திலும் லைட்டுகளை தொங்க விட்டு அலங்கரிக்கலாம். ஒரு வேளை தோட்டம் சற்று பெரியதாக இருந்தால், அங்கு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து, அலங்கரிக்கலாம். இல்லையெனில் வீட்டின் ஒரு ரூமில் வைத்து அலங்கரிக்கலாம்.

எல்லாமே சிவப்பு: கிறிஸ்துமஸின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அது சிவப்பு நிறம் தான். இந்த பண்டிகை நாளன்று எங்கு பார்த்தாலும், ஒரே சிவப்பு மயமாக இருக்கும். சொல்லப்போனால் இந்த பண்டிகையன்று எடுக்கும் உடையில் கூட சிவப்பு இருக்குமாறு எடுப்பார்கள். சிலர் தங்கள் குழந்தைகளுக்கு சாண்டா போன்று உடை அணிவிப்பார்கள். சிலர் வீட்டையே சிவப்பால் கூட அலங்கரிப்பார்கள். அதாவது, டைனிங் டேபிளில் விரிக்கும் விரிப்பான் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்ததாக இருக்கும். இதுவும் கிறிஸ்துமஸிற்கு முன்னால் அனைவரும் செய்யும் செயலாக இருக்கும்.

பரிசுகள்: கிறிஸ்துமஸ் அன்று பரிசுகள் கொடுப்பதும் ஒரு முக்கியமான சிறப்பம்சம். ஆகவே கிறிஸ்துமஸின் போது எந்த மாதியான பரிசுகளை கொடுக்கலாம் என்று யோசித்து வாங்கி வைக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் சாண்டாவிடம் இருந்து பரிசுகளை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வீட்டில் உள்ள பெரியோர்களே சாண்டாவாக இருந்து, அவர்களுக்கு பரிசுகளைக் கொடுக்க வேண்டும்.

மேற்கூறியவையே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் செய்யக்கூடியவை. வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

English summary

Things To Do Before Christmas | கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை...

We all wait for Christmas throughout the year. Once the holiday season comes, we start planning to make it special every year. Here some of the things to do before christmas are given.
Desktop Bottom Promotion