For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூமியில் இருக்கும் அபூர்வமான 6 இடங்கள்!!!

By Maha
|

எல்லோருக்கும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கு பிடித்த, சற்று வித்தியாசமான இடங்களைத் தான் பார்க்க விரும்புவோம்.

அத்தகைய வித்தியாசமான சுற்றுலாத்தளங்களில், அவ்வப்போது இயற்கைக்குப் புறம்பாக நடந்த விபத்துக்களில் ஒரு சில இடங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் மாறியுள்ளது. மேலும் இந்த இடங்கள் உலக சுற்றுலா பயணம் செல்லும் போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஒரு சிறந்த இடங்களாக அமையும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு: உலகில் உள்ள சில இரகசியமான நகரங்கள்!!!

இப்போது அத்தகைய இடங்களில் ஒரு 6 அபூர்வமான இடங்களைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எரிமலைக் குளம்

எரிமலைக் குளம்

இந்த குளம் இயற்கைப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசமான இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் பம்முக்ளே (Pamukklae) என்னும் இடத்தில், எரிமலையின் வெடிப்புகள் காரணமாக நீரூற்று ஏற்பட்டு, அதன் பக்கவாட்டில் கால்சியம் கார்பனேட் அதிக அளவு சேர்ந்து குளம் போல் உருவாக்கியுள்ளது. இந்த குளத்திற்கு ட்ரேவெர்டின் குளம் (Travertine Pool) என்று பெயர். மேலும் இந்த குளம் சற்று சரிவாக படிக்கட்டுகள் போன்று அமைந்துள்ளது.

பள்ளத்தாக்கில் கசியும் சிவப்பு நிறத் தண்ணீர்

பள்ளத்தாக்கில் கசியும் சிவப்பு நிறத் தண்ணீர்

இந்த பள்ளத்தாக்கு அண்டார்டிக்காவில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கிற்கு மெக்மர்டோ உலர் பள்ளத்தாக்குகள் (McMurdo Dry Valleys) என்று பெயர். பொதுவாகவே அண்டார்டிக்கா மிகவும் குளரான இடம் என்றாலும், இந்த இடத்தில் மட்டும் பனிமூட்டம் இல்லை. மேலும் இந்த பள்ளத்தாக்கின் நீரூற்றுகளில் இருந்து சுடு தண்ணீர் வெளியே கசியும். அவ்வாறு வரும் நீர் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று வெளிவரும். ஏனெனில் இந்த தண்ணீரில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இந்த இடத்தில் தண்ணீர் சிவப்பு நிறத்தில் கசிவதால், இது வித்தியாசமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

புள்ளி புள்ளியாக காணப்படும் ஏரி

புள்ளி புள்ளியாக காணப்படும் ஏரி

இந்த சலைன் அல்கலி ஏரி (saline alkali lake) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒசொயூஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரில் 8-10 கனிமங்கள் உள்ளன. இதனால் கோடை காலத்தில் இங்கு தண்ணீர் ஆவியாகி, அந்த கனிமங்களுடன் சேர்ந்து, நீரின் மேற்பரப்பில் புள்ளிப் போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. இதனால் அந்த ஏரி பார்க்க ஓட்டை ஓட்டையாக இருப்பது போன்று காணப்படும்.

கற்கள் தானாக நகரும் வறண்ட இடம்

கற்கள் தானாக நகரும் வறண்ட இடம்

இந்த இடத்திற்கு ரேஸ்ட்ராக் பால்யா (Racetrack Playa) என்று பெயர். இது கலிபோர்னியாலிவல் உள்ள ஒரு வறண்ட ஏரி என்றாலும், கண்ணுக்கினிய ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால், இந்த இடத்தில் இருக்கும் கற்கள் தானாக நகர்கிறது என்பது தான். மேலும் அவ்வாறு நகரும் கற்கள் நகர்ந்ததற்கான அடையாளத்தோடு நகர்கிறது என்பது தான் இதன் சிறப்பு. அதிலும் இந்த கற்கள் பலத்த காற்றின் காரணமாக நகர்கிறது என்பது உண்மை. அப்படியெனில் எந்த அளவு காற்றடிக்கும் என்று யோசித்து பாருங்களேன்...

சஹாரா பாலைவனம்

சஹாரா பாலைவனம்

உலகில் உள்ள வித்தியாசமான இடங்களில் சஹாரா பாலைவனத்தில் உள்ள ரிச்சட் வடிவம் (Richat Structure) ஒன்று. சொல்லப்போனால், அதை சஹாராவின் கண் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த இடத்தின் அமைப்பு பரந்த, விரிந்த பாலைவனத்தில் வண்ணமயமாக இருப்பதோடு, மேலும் பார்த்தால் கண்கள் சலிக்காமல் பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

வித்தியாசமான தீவு

வித்தியாசமான தீவு

இந்த பூமியில் இருக்கும் தீவுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சோகோட்ரா தீவு (Socotra Islands) ஒரு புதிரான இடம். ஏனெனில் இந்த தீவுகளில் உள்ள அனைத்து மரங்களும், விலங்குகளும் வித்தியாசமான வடிவத்தோடு காணப்படும். இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை எங்கும் காண முடியாது என்பதே இதன் சிறப்பு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Weirdest Places On Earth

When you plan for travel, what do you think of? You make a list of some of the most beautiful and attractive places on the globe. But, do you ever think of visiting some of the weirdest places on the planet? Well here is a list of such places and the reasons as to why they are termed as weird.
Desktop Bottom Promotion