முயற்சியின்றி எதுவும் நடைபெறாது!!!

Posted by:
 

Try
ஒருவன் தன் தோட்டத்தில் இருந்து, நன்கு விளைந்திருந்த காய்கறிகளை மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்க புறப்பட்டான். அதனால் காய்கறிகளை தன் வண்டியில் கட்டிக் கொண்டு போனான். அவ்வாறு போகும் போது, வழியில் அவனது வண்டியின் சக்கரம் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு, காய்கறிகள் கீழே விழந்துவிட்டன. அப்போது அவன் கடவுனே எனக்கு உதவி செய் என்று வேண்டினான். இப்போது கடவுள் வரவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான், இருப்பினும் வரவில்லை. அருகில் யாரும் இல்லை.

ஆகவே அவனே அந்த வண்டிச் சக்கரத்தை தூக்கி மேட்டில் வைத்தான். இப்போது சுலபமாக அவனால் தூக்க முடிந்தது. அந்த நேரத்தில் அவன் "தன்னால் தூக்க முடியாது என்று நினைத்த வண்டியின் சக்கரத்தை தூக்கிவிட்டேனே!" என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டான். ஆனால் பின்னால் பார்த்தால், அந்த வழியில் வந்த ஒரு துறவி அவனுக்கு உதவினார். அந்த துறவிக்கு அவன் தன் நன்றியைக் கூறி, "அத்தனை முறை கடவுளை அழைத்தும், அவர் வந்து உதவவில்லை, ஆனால் நீங்கள் வந்து எனக்கு உதவியதற்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்" என்று கூறினான்.

அப்போது அந்த துறவி, "எதற்கு கடவுள் மீது கோபம் கொள்கிறாய்? அவர் உனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்லாதே, நீ ஏதேனும் முயற்சி செய்தால் தானே, அவரால் உனக்கு உதவ முடியும்" என்று சொன்னார். பின் "நீ முயற்சி செய்ததால் தானே, நானே வந்து உதவினேன். ஆகவே அவர் உனக்கு உதவ வேண்டும் என்றால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடு" என்று கூறி சென்று விட்டார்.

English summary

Try Yourself | முயற்சியின்றி எதுவும் நடைபெறாது!!!

This story tells us that if we didn't try anything, we can't achieve anything.
Write Comments

Subscribe Newsletter
Boldsky இ-ஸ்டோர்