For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்லப் பூனை உங்களை நாவால் நக்கினால்... என்ன அர்த்தம்?

By Super
|

செல்ல நாய்கள் நமது முகத்தை அன்புடன் நாக்கால் நக்குவது தெரிந்த விஷயம் தான். ஆனால் பூனை ஜாதியின் உடல் மொழியே வேறு. பொதுவாக அவற்றின் பழக்க வழங்கங்கள் நாசூக்காக கச்சிதமாக இருக்கும். (சிங்கம் - புலி கூட பூனை ஜாதி தான் என்பதை சொல்ல வேண்டியதில்லை!). உங்கள் செல்லப் பூனை உங்களை செல்லமாக கடித்தும், கால் நகங்களால் கவ்வியும் விளையாடி பின் உங்களை நக்க ஆரம்பிக்கிறது. அதாவது அது குட்டியாய் இருக்கும் போது அதன் தாய் என்ன மாதிரியான அக்கறையை காட்டியதோ, அதே அக்கறையையும் பாசத்தையும் உங்களுக்கும் கொடுக்கிறதாம்!.

அது நாவால் நக்குவது சுத்தப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பூனைகள் ஒன்றை ஒன்று நக்கிக் கொண்டு பரஸ்பரம் சுத்தப்படுத்திக் கொள்ளும் சடங்கு போன்ற பழக்கத்தை கொண்டுள்ளன. அதாவது தனது நாவால் தன் உடலில் எட்ட முடியாத பாகங்களை சுத்தப்படுத்திக் கொள்ள ,இந்த பரஸ்பர ‘சுத்திகரிப்பு' உதவுகிறது. பூனைகளுக்கிடையே அதெல்லாம் சகஜம் தான் எனில், எஜமானர்களை பூனைகள் நக்குவதன் பொருள் என்ன? பல விஷயங்கள் இருக்கின்றன. ஆகவே தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

What Does It Mean When Your Cat Licks You?

எனக்கு சொந்தம்!

பூனைகளை பொறுத்தவரை நாவால் நக்கப்படுவது தான் அவை அறிந்த முதல் ஸ்பரிசம். அதன் தாய் அங்குலம் அங்குலமாக உடலை துடைத்து நக்கியதிலிருந்தே அந்த பந்தம் உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது. குட்டி பிறந்தவுடன் அதன் உடலில் ஒட்டியிருக்கும் திரவப் பிசுபிசுப்புகளை தாய்ப்பூனையே சுத்தப்படுத்திவிடுகிறது. அதன்பின் ஒவ்வொரு முறை உணவூட்டும் போதும் குட்டியின் உடல் முழுக்க நாவால் ஒரு சிகிச்சை போன்று நக்கிக் கொடுக்கிறது. இப்படி செய்யும் போது அதன் சொந்த வாசனையை குட்டியின் மீது அது படிய வைத்துவிடுகிறது. இப்படியாக துவங்கும் இந்த ‘நாவால் நக்கும் சடங்கு' பூனைகளுக்கு சுத்தம் மற்றும் பாசப்பரிமாற்றத்தோடு தொடர்புடைய விஷயமாக மாறுகிறது.

ஆண் மற்றும் பெண் பூனைகள் ஒன்றோடன்று நக்கி விளையாடும் போது, அவை பரஸ்பரம் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், பரஸ்பர உரிமையையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றன. கால்விரல் நகங்களால் வருடும் போது அவற்றிலுள்ள வியர்வைச் சுரப்பிகளின் ஈரம் மற்றதன் உடலில் ஒட்டிக்கொள்கிறது. ஆகவே நக்கி வருடும் போது அதன் எச்சிலை மற்றதன் உடலில் பொதிப்பதன் மூலம் ‘நீ எனக்கு சொந்தம்' எனும் உரிமையை அவை நிலைநாட்டிக் கொள்கின்றன. ஒரு வியப்பு என்னவென்றால் இதே விஷயத்தை தனது எஜமானர்களிடமும் பூனைகள் செய்கின்றன என்பது தான். உங்கள் செல்லப் பூனை உங்களை நக்குவதன் மூலம் உங்கள் மேல் அதற்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்துகிறது.

நக்கும் வழக்கம் பூனைகளிடம் எப்படி வெளிப்படுகிறது?

ஒரு சில நிபுணர்களின் கருத்துப்படி அனாதையாக விடப்பட்ட பூனைகள் மற்றும் துணையிடமிருந்து பிரிந்த பூனைகள் போன்றவை அதிகமாக நக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பொதுவான கருத்து தான். தனது தாய்ப்பூனையுடன் வசிக்கும் ‘கெல்ஸீ' எனும் பழுப்புப் பூனைக்கு முக்கிய பொழுது போக்கே எல்லோரையும் தவறாமல் நக்கிக் கொடுப்பது தான்!. அதன் தாயும் ‘கெல்ஸி' யை தினமும் குளிப்பாட்ட தவறுவதில்லை.

வெல்வெட் போன்ற தோல் பகுதியை கொண்டிருக்கும் பூனைகளுக்கு நாவால் வருடுவது மிகுந்த கிளர்ச்சியை அளிக்கிறது. அதே போன்று மனிதர்கள் அவற்றின் உடலில் விரல்களால் ஸ்பரிசித்து தடவும் போது, அவை பாசத்தை உணர்ந்து நெருக்கமாகின்றன. அந்த பாசத்தை திரும்ப அளிக்கும் நோக்கத்துடன் அவை மனிதர்களை நாவால் நக்குகின்றன. இந்த செயலின் அர்த்தம் ‘நானும் உங்களை நேசிக்கிறேன்!' என்பது தான். ஸ்பரிசம் என்பது மனித உறவுகளில் கூட பாசப் பரிமாற்றத்துக்கு அடிப்படையாக உள்ளது என்பதால் இதை புரிந்து கொள்வது சிரமம் இல்லை.

ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறி

இருப்பினும் ஒரு வளர்ந்த பூனை திடீரென்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக நக்க தொடங்கினாலோ அல்லது உங்கள் உடைகளை சப்ப தொடங்கினாலோ, அதனை கவனிக்க வேண்டும். இது வேறு ஆரோக்கியப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும். நோய்த்தொற்று, சரும ஒவ்வாமை மற்றும் பூச்சிக்கடி போன்றவற்றின் காரணமாக கூட பூனைகள் இவ்வாறு செய்ய ஆரம்பிக்கலாம். எனவே உடனே கவனித்து மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறந்தது.

அளவுக்கு அதிகமான பாசத்தின் வெளிப்பாடு

ஒருவேளை அப்படியெல்லாம் உடல்ரீதியான உபாதைகள் ஏதும் இல்லாமலே, உங்களை அளவுக்கதிகமாக நக்கிக் கொடுக்க ஆரம்பித்தால் என்ன செய்வது. என்ன தான் செல்லப் பிராணியாக இருந்தாலும், நீங்கள் பூனையாக மாறி அதன் பாசத்துக்கு ஈடு கொடுக்க முடியாது இல்லையா! அதற்காக பூனையை மிரட்டி அதட்டி பயப்படுத்தி விடாமல், இதமாக அதற்கு புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.

அதற்கு பூனை நக்க ஆரம்பிக்கும் போது எழுந்து நகர்ந்து கொண்டு தவிர்க்கலாம். அத்தோடு கை மற்றும் தோள்களில் எலுமிச்சை சாறு சிறிது பூசிக் கொள்ளலாம். இது பூனைகள் உங்களை நக்கத் தொடங்குவதை தடுக்கும். மேலும், ஒரு சிறிய துணிப் பொம்மையை அது விளையாடுவதற்கு கொடுத்து பழக்கலாம். அது நக்குவது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும், நீங்கள் அதனை நேசிக்கிறீர்கள் என்பதை புரிய வைக்க, உங்கள் செல்லப் பூனையை நீங்களும் கொஞ்சம் வருடிக் கொடுப்பதும் அவசியம்.

English summary

What Does It Mean When Your Cat Licks You?

You’ve seen cats licking each other, helping in the grooming ritual, especially around the hard-to-reach ears and top of the head. But why is Kitty inspired to lick your arm or toes — or even your hair? Here’s what we’ve discovered.
Story first published: Wednesday, November 20, 2013, 19:01 [IST]
Desktop Bottom Promotion