For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!

By Maha
|

வீட்டில் நாயை செல்லப் பிராணியாக வளர்க்கும் போது, அனைத்து நாய்களும் செய்யும் ஒரு எரிச்சலூட்டும் விஷயம் தான் குரைப்பது. நாயும் மனிதரைப் போல் தான். ஒரு கட்டத்தில் அதற்கும் அழுப்பு தட்டிவிடும். அப்போது அது தனக்கு போர் அடிக்கிறது என்பதை குரைப்பதன் மூலம் வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி வெறும் போர் அடிக்கும் போது மட்டும் நாய் குரைப்பதில்லை. சந்தோஷமாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும், ஆபத்தின் போதும் கூட நாய் குரைக்கும்.

ஆனால் சில சமயங்களில் நாயானது மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் எப்போதும் குரைத்துக் கொண்டே இருந்தால், அப்போது அதனை அடக்குவது என்பது சற்று கடினமான விஷயமே. அதற்காக குரைப்பதை நிறுத்த வேண்டுமென்று, அதனை அடித்தால் மட்டும் சரியாகிவிடாது. அதனை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாய் எப்போதும் தேவையில்லாமல் தொடர்ச்சியாக குரைக்காது.

Ways To Control A Barking Dog

சரி, இப்போது குரைக்கும் நாயை எப்படி சாந்தப்படுத்துவது என்று பார்ப்போம். அதிலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குரைத்துக் கொண்டே இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் சொன்னால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.

* நீங்கள் வீட்டில் இல்லாத போது நாய் குரைக்காமல் இருக்க வேண்டுமானால், அதற்கு ரப்பர் பொம்மையைக் கொடுத்து சென்றால், அது அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கும். இதனால் நீண்ட நேரம் குரைக்காமல் இருக்கும்.

* அக்கம் பக்கத்தினர் வந்து சண்டை போடும் வகையில் உங்கள் நாய் குரைத்தால், அதனுடன் பேசுங்கள். பேசினால் நாய்களுக்கு புரியாது என்று நினைக்க வேண்டாம். அது மனிதரைப் போலவே நன்கு புரிந்து கொள்ளும் திறன் கொண்டது. எனவே அதற்கு புரியுமாறு சொல்லுங்கள்.

* நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால், வீட்டினுள் நாயை கட்டிப் போட்டிக்கும் போது, வீட்டில் ரேடியோவை போட்டு விட்டு செல்லுங்கள். இதனால் அது வீட்டில் ஒருவர் இருப்பது போன்று உணர்ந்து, தனிமையை தவிர்த்து, குரைப்பதை நிறுத்தும்.

* நீங்கள் அனைத்தும் செய்தும், ஏன் நீங்கள் அதனுடன் இருக்கும் போதே தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தால், அதற்கு ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆகவே அப்போது அதனை நன்கு கவனித்து, முடிந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துப் பாருங்கள்.

* எதுவும் முடியாவிட்டால், நாயை பார்த்துக் கொள்ள ஒருவரை விட்டு செல்லுங்கள் அல்லது அதனை நன்கு பழகும் பக்கத்து வீட்டில் விட்டு செல்லுங்கள். இதனால் அது தனிமையை தவிர்த்து, குரைக்காமல் இருக்கும்.

English summary

Ways To Control A Barking Dog

If you have a pet dog, here are some humane ways in which you can stop your dog from barking when you are not at home.
Story first published: Wednesday, December 18, 2013, 17:15 [IST]
Desktop Bottom Promotion