For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

By Super
|

செல்ல நாய் உங்களிடம் உரையாட வேண்டும் என்றால் தன் வாலை ஆட்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, ஒவ்வொரு விதமாக அது வாலை ஆட்டினால், அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தமாகும். உங்கள் நாய் உங்களை பார்த்தபடியே தன் வாலை ஆட்டினால், அது ஏன் அப்படி செய்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தன் உடலை கொண்டு நாய் தான் சொல்ல வேண்டியதை விளக்கிவிடும். இருப்பினும் அது தன் வாலை ஆட்டும் போது, ஏதாவது ஒரு வகையில் வித்தியாசப்படுவதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம். இதனை படித்த பிறகு நாய் தன் வாலை ஆட்டுவதற்கான காரணங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதனுடன் சேர்த்து அதன் கண்கள் கீழிறங்கி, காதுகள் புடைத்து கனமாக குரைத்து உங்களை வரவேற்கும்.

நாய்கள் தன் வாலை அன்பின் முறையிலோ நட்பின் முறையிலோ தான் ஆட்டுகிறது என்று தவறாக எண்ணி விடக் கூடாது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். நாய்களுக்கு வால் என்பது தன் உடம்பை சமநிலையில் வைத்திருக்க உதவும். ஆனால் அது நம்மிடம் தொடர்பு கொள்ளவும் பயன்படுகிறது. குறுகிய பாதையில் நடப்பதற்கும் மேலே ஏறுவதற்கும் கூட அது வாலை பயன்படுத்தப்படுகிறது.

நாய் தன் வாலை ஆட்டுவதற்கான பல காரணங்களில் சிலவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.

Meaning Of Your Pet Dogs Wagging Tail

நிமிர்ந்து நிற்கும் வால்

நாய் நிமிர்ந்த வாலுடன் நின்றால், அது தன்னம்பிக்கையுடன் பிடிவாதமாக உள்ளது என்று பொருளாகும். அது கிளர்வுற்ற நிலையில் இருந்தாலும் கூட, தன் வாலை இப்படி தூக்கி கொள்ளும்.

உடலின் உயரத்திலே வைத்துக் கொள்ளுதல்

செல்ல நாயின் வால் அதன் உடலின் உயரத்திலே வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அப்படி இருந்தால், அது சாதாரண மனநிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும். மேலும் அது நட்பு உணர்ச்சியுடன் பாதுகாப்பாக உணர்வதையும் எடுத்துக்காட்டும்.

கால்களுக்கு நடுவே

இது பொதுவாக நாம் காணக் கூடியவை தான். அதுவும் சண்டை போட தயாராக இருக்கும் தெரு நாய்களில் இதனை அடிக்கடி காணலாம். அப்படி இரண்டு கால்களுக்கு நடுவே வால் இருந்தால், நாய் பயந்து போயுள்ளது என்று அர்த்தமாகும். இந்த தருணத்தில், அது உங்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கும்.

முரட்டுத்தனமாக வாலை ஆட்டுதல்

நாய் தன் முழு பலத்தையும் செலுத்தி, தன் வாலை முரட்டுத்தனமாக சில நேரம் ஆட்டும். அப்படி செய்தால், அது ஏதோ சேட்டை செய்ய போகிறது என்று அர்த்தமாகும். அது பிரச்சனை கலந்த மனநிலையில் இருந்தாலும் இப்படி ஆட்டும்.

லேசாக ஆட்டுதல்

லேசாக தன் வாலை வலப்புறமும் இடப்புறமும் ஆட்டினால், அது அங்கு இருப்பதை நாம் உணர வேண்டும் என்று அர்த்தமாகும்.

அகலமாக ஆட்டுதல்

இது நட்பாக இருப்பதை காட்டுவதற்கான மற்றொரு வகையாகும். இப்படி செய்யும் போது அது இடுப்புடன் சேர்த்து ஆட்டும். இது நாய் சந்தோஷமாக இருப்பதை சுட்டிக் காட்டும்.

ஆதிக்கத்துடன் ஆட்டுதல்

மற்ற நாய்களுக்கு மத்தியில் தானும் இருக்கிறேன் என்பதை சுட்டிக் காட்டவே இவ்வகையாக தன் வாலை ஆட்டும். அதுவும் முக்கியமாக ஆண் நாய்கள் இப்படி வாலை ஆட்டும். உங்கள் நாய் தன் வாலை உயர நிமிர்த்தி, தன் வாலை பலமாக ஆட்டினால் இந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் செல்ல நாய்கள் பல விதமாக வாலை ஆட்டுவதற்கான அர்த்தம் புரிகிறதா? ஆகவே அடுத்த முறை தன் வாலை ஆட்டும் போது, அது என்ன சொல்ல வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

English summary

Meaning Of Your Pet Dogs Wagging Tail

There are multiple reasons for your dog wagging, here are some of the ways to read your dogs wagging tail.
Desktop Bottom Promotion