For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாப்ரடர் நாய்கள் ஆரோக்கியமா இருக்க, இந்த உணவுகளை கொடுங்க...

By Maha
|

பெரும்பாலானோர் செல்லப் பிராணிகள் என்று வரும் போது நாய்களைத் தான் தேர்ந்தெடுத்து வளர்ப்பார்கள். அத்தகைய நாய்களில் பல இனங்கள் உள்ளன. அவைகளில் லாப்ரடர் (Labrador) என்னும் நாய் இனத்தை தான் பலரும் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் உலகில் உள்ள அனைவருக்குமே, இந்த இன நாய் தான் விருப்பமானதாக இருக்கிறது. ஏனெனில் இத்தகைய நாய்கள் அனைத்துவிதமான உணவுகளையும் விரும்பி சாப்பிடக்கூடியது. அதே சமயம், இந்த நாய்களுக்கு தான் அடிக்கடி உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆகவே இந்த நாய்களை வாங்கும் முன்பு, அதன் உடல்நலத்தில் அக்கறை கொள்ளும் வண்ணம், எந்த மாதிரியான உணவுகளைக் கொடுக்க வேண்டும், கொடுக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் தற்போது அனைவருக்கும் லாப்ரடர் நாய்கள் பிடித்திருப்பதால், பணத்திற்காக சிலர் நோய்வாய்ப்பட்ட நாய்களை விற்கின்றனர். நாமும், நாய் நோய்வாய்ப்பட்டுள்ளது என்பதை தெரியாமல் வாங்கிவிடுகிறோம். அதற்காக நோய்வாய்ப்பட்ட நாய்களை தூக்கிப் போட முடியாதல்லவா?

எனவே அந்த மாதிரியான நிலையிலும், நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு சரியான ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால், அதன் உடல் நலத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். சரி, இப்போது லாப்ரடர் நாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அந்த உணவுகளைக் கொடுத்தால், நாய்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய்

நாய்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டுமெனில், அவைகளின் உணவுகளில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தாமல், சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்தினால், நாய்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காய்கறிகள்

காய்கறிகள்

லாப்ரடர் நாய்களுக்கு அனைத்து விதமான காய்கறிகளையும் கொடுக்கக்கூடாது. ஆனால் வாரத்திற்கு ஒருமுறையாவது, நாய்களுக்கு கேரட்டை கொடுக்க வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். அந்த வார்த்தை மனிதர்களுக்கு மட்டுமின்றி, நாய்களுக்கும் தான். அவ்வாறு நாய்களுக்கு ஆப்பிள் கொடுக்கும் போது, தோலை நீக்காமல் கொடுக்க வேண்டும். இதனால் நாய்களின் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

தயிர்

தயிர்

தயிரை லாப்ரடர் நாய்களின் உணவில் சேர்த்து வந்தால், நாய்களின் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.

முட்டை

முட்டை

லாப்ரடர் நாய்களுக்கு வயிற்று உப்புசம் இருந்தால், அதனைப் போக்குவதற்கு முட்டையின் வெள்ளைக்கருவைக் கொடுப்பது நல்லது. மேலும் முட்டையின் வெள்ளைக்கரு நாய்களுக்கு போதிய ஆற்றலைக் கொடுத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

தண்ணீர்

தண்ணீர்

லாப்ரடர் நாய்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் நாய்களின் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியே, நாய்கள் நோய்வாய்ப்படாமல் இருக்கும்.

மிஞ்சிய உணவுகள்

மிஞ்சிய உணவுகள்

சிலர் லாப்ரடர் நாய்களுக்கு மிஞ்சிய உணவுகளைக் கொடுத்தால், அலர்ஜிகள் ஏற்படும் என்று சொல்கின்றனர். ஆகவே மிஞ்சிய உணவுகளை கொடுக்க நினைத்தால், கை வைக்காத மிஞ்சிய உணவுகளை கொடுப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Labrador Health Problems: Foods To Eat

As a responsible labrador owner, your job is to see that your dog faces no health problems. Therefore, we have a list of foods which is safe to treat your Labrador and avoid health problems in the future.
Desktop Bottom Promotion