For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய்களுக்கு இருக்கும் தரையை தோண்டும் பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...

By Super
|

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் தன் உடைமைகளை பாதுகாக்க பாடுபடுகிறது. மனிதர்களை பொருத்தவரை தங்களின் உடைமைகளை பத்திரமாக பாதுகாக்க பாதுகாப்பு பெட்டகங்கள் போன்றவைகள் உள்ளது. ஆனால் மிருகங்களுக்கு? எதுவும் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். அவைகளின் உடைமைகளை பாதுகாக்க அவைகளும் சில வழிமுறைகளை பின்பற்ற தான் செய்கிறது. பறவைகள் என்றால் கூடு கட்டி தங்கள் உணவுகளை அங்கே பாதுகாக்கிறது. முயல்கள் என்றால் பொந்துகள் உண்டாக்கி அதனுள் தன்னுடைய உடைமைகளை பாதுகாக்கும். அதே போல் நாய்கள் நிலத்தில் உள்ள மண்ணை தோண்டி அதன் பொருட்களை அதில் போட்டு பாதுகாக்கும். இப்படி தோண்டும் இடத்தில் அவைகள் தங்களின் உணவையும் உடைமைகளையும் மட்டும் பாதுகாக்காமல், அதன் மேல் சொகுசாக அமர்ந்து கொள்ளவும் செய்யும். நாய்களை பொருத்தவரை இப்படி தோண்டுவது ஒரு பொழுது போக்காகவும் உடற்பயிற்சியாகவும் அமையும்.

தெரு நாய்கள் பொது பூங்காவில் இப்படி தோண்டினால் அது நமக்கு எந்த பாதிப்பையும் தொந்தரவையும் ஏற்படுத்தாது. ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் நாய் நம் வீட்டு முற்றத்திலோ அல்லது தோட்டத்திலோ தோண்டும் போது தான் நமக்கு தொந்தரவு உண்டாகும். நாம் அழகாக பரமாரித்து வரும் தோட்டத்தை உங்கள் நாய் தோண்டி நாசம் செய்தால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படும் இல்லையா? உங்கள் நாய் அப்படி செய்வதை தடுக்க வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக நாய்கள் எதையும் வேகமாக கற்றுக் கொள்ளும். அப்படி பழகியதை அவ்வளவு சுலபமாக மறக்கவும் செய்யாது. அதனால் உங்கள் நாய்கள் இப்படி உங்கள் வீட்டில் குழி தோண்டுவதை தடுக்க நாங்கள் ஒரு பட்டியலை தயார் செய்துள்ளோம். வாங்க அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

How To Stop Dogs From Digging

1. தொழில் சார்ந்த முறையை நாடுங்கள்:

உங்கள் நாய் யங்கள் தோட்டத்தில் இருக்கும் போது ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் அதனை தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதனை ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்து விடுங்கள். கண்டிப்பாக அதனுள் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள். இப்படி முறையாக பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் திறம்பட செயல்படும். பயிற்சி முடிந்தும் கூட கற்றுக் கொண்டதை ஒழுங்காக பின்பற்றும்.

2. உங்கள் நாயை ஆராயுங்கள்:

உங்கள் நாயை செல்லப் பிராணி ஆக்குவதற்கு முன்பாக அதன் பழக்க வழக்கங்களை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு அதன் பழக்க வழக்கங்களை ஆராய வேண்டும். அவைகளின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும். சில வகை நாய் வகைகளுக்கு குழி தோண்டுவது பிடித்த பொழுதுபோக்காக இருக்கும். சில வகை நாய்களுக்கோ குளிரின் காரணமாக குழி தோண்டி அதில் வெப்பம் தணிக்க தோன்றும். உங்கள் நாய்களின் தேவைக்கேற்ப போதுமான நடவடிக்கை மற்றும் முன்னெசெரிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

3. அதனை குதூகலப்படுத்தி அதனுடன் நேரம் செலவிட வேண்டும்:

பல வகை நாய்கள் தங்களின் நேரத்தை செலவிடுவதற்காகவே குழிகளை தோன்றும். அதனால் அவை குழிகளை தோண்டாமல் இருக்க அவைகளுடன் உங்கள் நேரத்தை செலவிட்டு அவைகளை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். பொருட்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் விளையாட்டு, அவைகளை தடவி கொடுப்பது, அவைகளை நடைபயிற்சிக்கு கூட்டிச் செல்வது, அவர்களுக்கு பிடித்த பொம்மையை கொடுப்பது போன்றவைகலில் ஈடுபட்டு அவர்களை குதூகலமாக வைத்திருங்கள். அவர்களின் மனது வேறு நடவடிக்கைகளில் ஒன்றியிருக்கும் போது இப்படி குழி தோண்டும் பழக்கத்தை அவைகள் நிறுத்தி விடும்.

4. கண்டிப்பாக இருங்கள்:

சில நேரம் பயிற்சி முடிந்த பிறகும் கூட அவைகளை சந்தோஷமாக வைத்திருந்தும் கூட அவர்கள் தங்கள் வேலையை காட்ட தான் செய்வார்கள். இப்படி பட்ட நேரத்தில் தான் அவர்களிடம் நீங்கல்கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் குழியை தோண்ட ஆரம்பித்தால் அவர்களை பார்த்து லேசாக, ஆனால் திடமாக ஒரு அதட்டு போடுங்கள். அப்படி செய்யும் போது இந்த தவறை அவை மீண்டும் செய்யக் கூடாது என்று அது உணரத் தொடங்கும். அதற்காக அவர்களை அடிக்கவோ சவுக்கால் விலாசவோ தேவையில்லை. கொஞ்சம் கண்டிப்புடன் இருந்தாலே போதுமானது.

5. சொகுசான வாழ்க்கை:

இப்படி குழி தோண்டும் அசிங்கமான பழக்கத்தை உங்கள் நாய் நிறுத்த வேண்டுமானால் முதலில் அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் இருந்து அதனை தள்ளி வையுங்கள். அவைகளுக்கு சொகுசான மெத்தை, அதிகமான பொம்மைகள் மற்றும் சொகுசான சூழ்நிலை என அனைத்தையும் ஏற்படுத்துங்கள். அவர்களை தோட்டம் பக்கம் எல்லாம் அனுப்பாமல் இருங்கள்.

English summary

How To Stop Dogs From Digging

Dogs are quick learners and do not forget things learnt so easily. So, I have a list of things you can do to stop your Dog from making holes and pits everywhere they see plain ground.
Desktop Bottom Promotion