For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் டயட் உணவுகள்!!!

By Maha
|

செல்லப்பிராணிகளில் நாய் வளர்க்க விரும்புவோருக்கு நிச்சயம் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மிகவும் விருப்பமானதாக இருக்கும். இந்த நாய் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்தாலும், இது மிகவும் க்யூட்டாக, நாயின் சொந்தக்காரர் நினைத்தவாறு நடந்து கொள்ளும். அத்தகைய நாயின் வயிறு மிகவும் சென்சிடிவ்வானது. ஆகவே அந்த நாய்க்கு கொடுக்கும் உணவில் மிகவும் கவனம் வேண்டும்.

அதிலும் இந்த நாய்க்கு செயற்கை உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் செய்யப்படும் உணவுகளைக் கொடுப்பதே சிறந்தது. எனவே ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு கொடுக்க வேண்டிய மற்றும் கொடுக்கக்கூடாத உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்லது: ராகி

நல்லது: ராகி

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு கொடுக்கக்கூடிய உணவுகளில் சிறந்த உணவு தான் ராகி. அத்தகைய ராகியை, அந்த நாயின் உணவில் சேர்த்தால், நாய் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வயிற்றிற்கு ஏற்ற உணவு. அதுமட்டுமின்றி, இது அந்த நாயின் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க வல்லது.

நல்லது: சாதம்

நல்லது: சாதம்

வெள்ளை சாதம் கூட ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு ஏற்ற உணவுகளுள் ஒன்று. இது நாய்க்கு மெல்லுவதற்கு எளிதாக இருப்பதோடு, சீக்கிரம் செரிமானமாகக்கூடியது.

நல்லது: கஞ்சி

நல்லது: கஞ்சி

அனைத்து நாய்களுக்கும் கஞ்சி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு மிகவும் விருப்பமான உணவாகும். ஆகவே ஓட்ஸ் கஞ்சியை வாரத்திற்கு ஒரு முறை, அதன் உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக இவ்வாறு கொடுக்கும் போது, அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவே கூடாது.

நல்லது: பால்

நல்லது: பால்

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு பால் மிகவும் இன்றியமையாதது. இதனால் அதில் உள்ள கால்சியத்தால், நாயின் பற்கள் நன்கு வலிமையாக இருக்கும். ஆனால் நாய்க்கு க்ரீம் பால் கொடுக்கக்கூடாது.

கெட்டது: வேக வைக்காத இறைச்சி

கெட்டது: வேக வைக்காத இறைச்சி

நாயின் உணவில் சேர்க்கக்கூடாத உணவுகளில் ஒன்ற தான் வேக வைக்காத இறைச்சி. ஏனெனில் வேக வைக்காத இறைச்சியானது எளிதில் செரிமானமாகாமல், வயிற்றில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

கெட்டது: நட்ஸ்

கெட்டது: நட்ஸ்

சிலர் நாயின் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று, நட்ஸ் கொடுப்பார்கள். ஆனால் நட்ஸை நாய்க்கு கொடுத்தால், அதில் உள்ள அதிகப்படியான உப்பு, நாய்க்கு திடீரென்று முடி உதிர்தலை ஏற்படுத்திவிடும். குறிப்பாக ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு இந்த பிரச்சனையை ஏற்படுத்தும்.

கெட்டது: சோளம்

கெட்டது: சோளம்

நாயின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருள் தான் சோளம். என்ன தான் நாய் இந்த உணவுப் பொருளை விரும்பி சாப்பிட்டாலும், அது நாய்க்கு ஆரோக்கியமற்றது. ஏனெனில் அதில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச், நாய்க்கு மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

கெட்டது: பருப்பு வகைகள்

கெட்டது: பருப்பு வகைகள்

நாய்களுக்கு குறிப்பாக இரண்டு வகையான பருப்புக்களை நிச்சயம் கொடுக்கக்கூடாது. அதில் ஒன்று கொண்டைக்கடலை, மற்றொன்று காராமணி. இது மிகவும் ஆபத்தான உணவுப் பொருள். குறிப்பாக ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு ஆரோக்கியமற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

German Shepherd Diet: Foods

If you have a German shepherd dog, it is best to feed your dog home food. It is best compared to artificial cereal foods for dogs. These are some of the foods you should avoid and feed your German shepherd dog to.
Story first published: Monday, October 21, 2013, 17:23 [IST]
Desktop Bottom Promotion