For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதியவர்கள் வளர்க்கக்கூடிய 7 வகையான நாய்கள்!!!

By Maha
|

நிறைய பேருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். குறிப்பாக நாய் வளர்ப்பது என்றால் ரொம்பவே பிடிக்கும். அதிலும் முதியவராக இருந்தால், தனிமை அதிகமாக இருக்கும். நிறைய நேரம் தனிமையிலேயே நேரத்தை கழிப்பதாக இருக்கும். இதனால் வீட்டில் தனியாக இருக்கும் போது, யாராவது வீட்டிற்கு வந்தாலும், சில நேரங்களில் தெரியாது. எனவே அத்தகைய வயதில் ஏதேனும் ஒரு செல்லப்பிராணியை வளர்த்தால், தனிமையை தவிர்ப்பதோடு, பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். அதிலும் முதியவர்களுக்கு நாய்கள் தான் சரியாக இருக்கும்.

நாய்களில் பல வகைகள் உள்ளன. சில நாய்கள் நன்கு சுறுசுறுப்போடு, எப்போதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும். மேலும் அத்தகைய நாய்கள் தன்னை வளர்ப்பவர்கள் கூட விளையாட வேண்டும் என்று ஆசைப்படும். அத்தகைய நாய்கள் முதியவர்களுக்கு சரியாக இருக்காது. ஆனால் ஒரு சில நாய்கள் நன்கு சிறியதாக, அழகாக, சரியான பாதுகாப்பை தரும் வகையில் இருக்கும். இப்போது முதியவர்களுக்கு எந்த மாதிரியான நாய்கள் சரியாக இருக்கும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பிடித்த நாயை வாங்கி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மால்டீஸ் நாய் (Maltese)

மால்டீஸ் நாய் (Maltese)

இந்த மாதிரியான நாய் பார்ப்பதற்கு நன்கு மொசுமொசுவென்று இருக்கும். இந்த மால்டீஸ் நாய் வயதானவர்களுக்கு ஏற்ற, சிறியதாக இருக்கும் ஒரு நாய் இனத்தை சேர்ந்தது.

சிவாவூ நாய் (Chihuahua)

சிவாவூ நாய் (Chihuahua)

இந்த பெண் நாய் இளம் பெண்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நாய் சிறியாக இருந்தாலும், இது மிகவும் உரத்த குரலுடன் குரைக்கும். அதுமட்டுமின்றி, இது வீட்டிற்கு இரட்டிப்பு பாதுகாப்பைத் தரும்.

டாய் பூடில் (Toy poodle)

டாய் பூடில் (Toy poodle)

இந்த பொம்மை போன்ற பூடில் வகையைச் சேர்ந்த டாய் பூடுலும், மக்களால் அதிகம் விருப்பத்துடன் வாங்கப்படும். இந்த வகையான நாய் இனம் மிகவும் நல்ல முறையில் செல்லமாக வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய பாசம் வயதானவர்களிடம் கிடைக்கும் என்பதால், இது வயதானவர்களுக்கு ஏற்ற நாயாக உள்ளது.

டேரியர் வகை நாய் (Manchester Terrier)

டேரியர் வகை நாய் (Manchester Terrier)

வீட்டிற்கு நன்கு பெரிய நாய் வேண்டுமா? அப்படியெனில் அதற்கு இந்த டேரியர் வகை நாய் சரியானதாக இருக்கும். குறிப்பாக இது முதியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

பொமரேனியன் (Pomeranian)

பொமரேனியன் (Pomeranian)

பொமரேனியன் நாயைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் அந்த அளவு, அந்த நாய் பிரபலமாக, ஒரு கனவு கன்னி போன்று கனவு நாயாக உள்ளது. இந்த நாயின் ஸ்பெஷல், இது வீட்டில் உள்ள குடும்பத்தினரின் மீது மிகுந்த அன்பு கொண்டு, அவர்கள் செல்லும் இடம் எல்லாம் செல்லும்.

டாய் ஸ்பேனியல் (Toy Spaniel)

டாய் ஸ்பேனியல் (Toy Spaniel)

இந்த சிறிய, அழகான நாய் நன்கு விளையாடுவதோடு, அமைதியாக இருக்கும். இது புதியவரைப் பார்த்தால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதால், இந்த நாய் முதியவர்களுக்கு சிறந்த பாதுகாப்பைத் தரும்.

பக் (Pug)

பக் (Pug)

தற்போது ஹட்ச் நாயும் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நாயும் அனைவரது மனதை கவர்ந்த நாய்களுள் ஒன்றாக உள்ளது. ஏனெனில் இது சிறியதாக, அழகாக மற்றும் ஈஸியாக பராமரிக்கும் அளவு இருக்கும். இந்த வகை நாய் சொந்தக்காரர்களிடம் அதிக அன்பை எதிர்பார்க்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Dog Breeds For Older People | முதியவர்கள் வளர்க்கக்கூடிய 7 வகையான நாய்கள்!!!

Older people needs to keep pet dogs who require low maintenance and are easy to care for. Thus, here is a list of best dogbreeds for you. Check out...
Story first published: Friday, January 25, 2013, 16:45 [IST]
Desktop Bottom Promotion