For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது வீட்டிற்கு குடி போறீங்களா? அப்ப உங்களுக்குத் தான் இந்த டிப்ஸ்...

By Srinivasan P M
|

புது வீடுன்னாலே எல்லோருக்கும் தனி குஷிதான். இருக்காதா பின்னே எத்தனையோ கனவுகளோட புது வீட்டுக்குக் குடிபோகிற உங்களுக்கு மொதல்ல வாழ்த்துக்கள். அதே நேரம் நீங்க குடி போறதுக்கு முன்னால சில விவரங்களை தெரிஞ்சிக்கோங்க.

உங்கள் புது வீட்டை மிகவும் அழகான வசிப்பிடமாக மாற்ற சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். அதற்குண்டான குறிப்புகள் இதோ உங்களுடைய வசதிக்காகவும், சவுகரியத்திற்காகவும் தந்திருக்கிறோம்.

Moving Into A New Home: 5 Tips To Remember

இப்போ புதுசு புதுசா பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறைய வந்திருந்தாலும், நம்மில் பலர் இன்னும் இவர்களை பயன்படுத்துவதில்லை. சும்மா நினைக்காதீங்க. இது ஒரு சுலபமான விஷயமல்ல. அதனால் இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி நீங்கள் குடி போகும் வேலையை சுலபமாக ஒரிரு நாட்களுக்குள் முடித்துவிட முடியும்.

உங்கள் இல்லம் உங்களுடைய தனி உலகம் என்பதால் அதனை எப்போதும் ஸ்பெஷலாக வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். புதுவீட்டிற்குள் குடி அமர்வது மகிழ்ச்சிகரமான விஷயம் என்றாலும், அதனை முறையாகச் செய்வதன் மூலம் குழப்பங்களைத் தவிர்த்து வேலையை எளிதாக்க முடியும். எனவே இவற்றை கவனத்தில் வைத்து உங்கள் அன்பானவர்களிடமும் இந்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெட்டிகளுக்குப் பெயர் விவரங்களை இடுங்கள்

நீங்கள் பொருட்களைப் பேக் செய்யும் முன் உங்களிடம் தேவையான அட்டைப் பெட்டிகள் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பெட்டியையும் நிரப்பியதும் அதற்குப் பெயரிடுங்கள். இதன் மூலம் அதில் என்ன உள்ளது என்பதை புது வீட்டிற்குச் சென்றவுடன் எந்தக் குழப்பமும் இன்றி தெரிந்து கொள்ள உதவும்.

வீட்டிற்குக் குடிப்புகும் முன் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுங்கள்

இது ஒரு முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். வீட்டுக் கட்டுமானம், உள் அலங்காரம் மற்றும் சில்லரை வேலைகள் அனைத்தையும் நீங்கள் குடிப்போகும் முன் முடித்துவிடுங்கள். இதன் மூலம் வீட்டை உபயோகிப்பது எளிதாவதுடன் அங்கு சென்ற பிறகு செய்யப்படும் கட்டிட வேலையால் வீட்டுப் பொருட்கள் பாழாவதிலிருந்து தடுக்கலாம்.

பகுதிவாரியாக பொருட்களை பேக் செய்யுங்கள்

உங்கள் வேலையை சுலபமாக்க உங்கள் பெட்டிகளை வீட்டின் பகுதிவாரியான பொருட்களை நிரப்பி பேக் செய்வதால் புது வீட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக பெட்டிகளை பிரித்து வைக்க ஏதுவாக இருக்கும்.

தேவைப்பட்டால் மற்றவர் உதவியை நாடுங்கள்

பெரும்பாலானோர் வீடு மாற்றும் வேலையை தாங்களே செய்கின்றனர். ஆனால், உங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் உதவக்கூடுமென்றால் அவர்களிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள். அவர்கள் உதவி உங்கள் வேலையை எளிதாகவும் சீக்கிரமாகவும் முடிக்க உதவும்.

உடையக்கூடிய பொருட்கள்

இது வீடு மாற்றும் பொழுது மிகவும் கவனத்துடன் செயல் படவேண்டிய ஒன்று. புது வீட்டிற்கு மாறும்போது உடையக் கூடிய பெட்டி மற்றும் சாமான்களைத் தனியாக உங்கள் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வண்டியையே நீங்கள் உபயோகித்தால், நீங்களே உங்கள் காரில் அல்லது வாகனத்தில் அதனை பத்திரமாக எடுத்துச் செல்வதால், இந்த வேலையைச் செய்ய வந்தவர்களிடம் கொடுத்து உடைந்து பாழாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

என்ன கவனமாக எல்லாம் நோட் பண்ணிக்கிட்டீங்களா... ஆல் தி பெஸ்ட்...

English summary

Moving Into A New Home: 5 Tips To Remember

Moving into a new home? Well, dont forget to keep in mind these 5 tips which will help your relocation process a lot more easier.
Story first published: Thursday, May 26, 2016, 18:24 [IST]
Desktop Bottom Promotion