For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் விநாயகர் சிலைகளை பக்தியுடன் எப்படி வைக்க வேண்டும்?

By Ashok CR
|

வீட்டின் நுழைவாயிலில் விநாயகர் சிலையை வைக்க வேண்டுமானால் ஜோடியாக வைக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதேப்போல் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டம் வந்து சேரும்.

மறுபுறம், இந்த விதிமுறைகளையும் மரபுகளையும் நீங்கள் பின்பற்றினால், உலகத்தில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களும் உங்களுக்கு கிடைக்கும். இதோ, வீட்டில் விநாயகர் சிலையை வைப்பதற்கு முன்பு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள், சம்பிரதாயங்கள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுழைவாயில் எதிராக வைக்கவும்

நுழைவாயில் எதிராக வைக்கவும்

உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை பல வழிகளில் வைக்கலாம். ஒரு புகழ் பெற்ற வழி - வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு எதிராக விநாயகர் சிலையை வைப்பது. இந்த திருஷ்டி விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. விநாயகரை இப்படி வைத்தால் அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார்.

முன்னும் பின்னும்

முன்னும் பின்னும்

விநாயகரை முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும். ஏன் என்று தெரியுமா? ஏதேனும் அறையில் விநாயகர் பின்புறத்தை பார்த்த படி வைத்தால், வறுமை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. அதனால் அதனை ஈடு செய்யும் விதமாக மற்றொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும்.

சிலைகளுக்கிடையே இடைவெளி அவசியம்

சிலைகளுக்கிடையே இடைவெளி அவசியம்

சிலைகளை வீட்டின் உள்ள ஷோ-கேசிலும் வைக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில், சிலைகளுக்கு நடுவே குறைந்தது 1 இன்ச் அளவில் இடைவெளி இருக்க வேண்டும்.

லெதர் பொருட்களை தவிர்க்கவும்

லெதர் பொருட்களை தவிர்க்கவும்

நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஒன்று உள்ளது. விநாயகர் சிலைக்கு அருகில் வைக்க வேண்டிய பொருட்கள். உதாரணத்திற்கு, லெதரால் செய்யப்பட்ட எந்த பொருளையும் விநாயகர் சிலைக்கு அருகில் வைக்க கூடாது. லெதர் என்பது செத்த மிருகத்தின் தோலால் செய்யப்படுவதே அதற்கு காரணமாகும். அதனால் லெதர் பெல்ட், ஷூக்கள் மற்றும் பைகளை சிலைக்கு அருகில் வைக்காதீர்கள்.

வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகர்

வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகர்

வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்க வேண்டுமானால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க வேண்டும். வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் என்றால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் செலுத்த வேண்டும். இவைகளை வீட்டில் செய்வது கடினம். அதனால் தான் இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே பார்க்க முடியும். அதனால் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக உள்ள அல்லது காற்றில் இருக்கும் தும்பிக்கையை கொண்ட விநாயகரை வையுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Sacredly Keep Ganesh Idols in Your Home

Did you know that you should always keep Ganesh idols at your entrance in pair? Did you know that you should avoid Ganesh idols with trunk to the right side?Things You Need to Follow before Keeping Ganesh idols at Your Home.
Desktop Bottom Promotion