For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் விலையுயர்ந்த அம்பானியின் "அண்டிலியா" வீட்டை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!

By John
|

இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான முகேஷ் அம்பானியின் "அண்டிலியா" வீடு உலகின் விலையுயர்ந்த வீடாக கருதப்படுகிறது. இந்த வீட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று கேள்வி கேட்பது சரியாக இருக்காது, என்ன இல்லை என்று தான் கேட்க வேண்டும்.

அரண்மனை போல் கட்டமைக்கப்பட்ட ஷாருக்கானின் "மன்னத்" இல்லம்!!

மும்பையின் ஆல்டமௌண்ட் சாலை (Altamount Road), ஆப் பெட்டர் சாலை (off. Pedder Road), தெற்கு மும்பை பகுதியில் அமைந்திருக்கிறது இந்த பிரம்மாண்ட வீடு. உலகின் அனைத்து சிறப்பு வாய்ந்த பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு தேவலோகம் போல் காட்சியளிக்கிறது இந்த "அண்டிலியா" வீடு.

கிரிக்கெட் கடவுளின் சொர்க்க வாசல், சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!

இனி, வியக்க வைக்கும் இல்லை இல்லை.. வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ள "அண்டிலியா" வீட்டை பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வானுயர்ந்த கட்டிடம்

வானுயர்ந்த கட்டிடம்

49,000 சதுர அடியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த "அண்டிலியா" இல்லம், 550 அடி உயரம் கொண்டதாகும். இந்த வீட்டில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் சென்று வர மொத்தம் 21 லிப்ட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

விலைமதிப்பு

விலைமதிப்பு

இந்த "அண்டிலியா" வீட்டைக் கட்டிமுடிக்க ஆன செலவு மட்டுமே 1 பில்லியன் டாலர்கள். (அம்மாடியோவ்!!!) மற்றும் தற்போது இந்த கட்டிடத்தின் மதிப்பு 1.5 இருந்து 2 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சகல வசதிகள்

சகல வசதிகள்

"அண்டிலியா" இல்லத்தில் சலூன், ஸ்பா, திரையரங்கு, ஸ்விம்மிங் பூல்,யோகா, நடனம் என்று அனைத்தும் அமைக்கப்பட்டிருக்கிறது. வெயிலை தணிக்க ஸ்நோ (Snow) ரூம் ஒன்றும் இருக்கிறது.

27 தளம்

27 தளம்

இந்த வீட்டில் மொத்தம் 27 தளங்கள் இருக்கின்றன. அனைத்தும் அளவிற்கு அதிகமான உயராமான சீலிங் கொண்டவை. அதாவது 60 தளங்கள் கட்டமைக்கப்பட வேண்டிய உயரத்தில் வெறும் 27 தளங்கள் தான் கட்டப்பட்டிருக்கின்றன.

கார்

கார்

ஆறு தளங்களில் அம்பானிக்கு பிடித்தமான கார்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கின்றன. இது போக கார்களை சர்வீஸ் செய்வதற்கென்றே தனியாக ஓர் தளம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

தொங்கு தோட்டம்

தொங்கு தோட்டம்

"அண்டிலியா"வில் தனியொரு தொங்கு தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இது மிகவும் சிறப்பு வாய்ந்த தோட்டம் என்று கூறப்படுகிறது.

அரபிக்கடலை பார்க்கவே சிறப்பு தளம்

அரபிக்கடலை பார்க்கவே சிறப்பு தளம்

அம்பானியின் மனைவி, அரபிக் கடலை கண்டு ரசிக்கவே தனியாக சூரிய வெளிச்சம் அதிகம்படும்படி வசதிக்கொண்ட தளம் ஒன்று "அண்டிலியா"வில் உள்ளது.

ஹெலிகாப்டர் தளம்

ஹெலிகாப்டர் தளம்

"அண்டிலியா"வில் மொத்தம் மூன்று ஹெலிகாப்டர்கள் நிறுத்த வசதியான ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது போக இதை இயக்க தனியொரு சிறப்பு தளம் இருக்கின்றது.

வேலையாட்கள்

வேலையாட்கள்

இவ்வளவு வசதிக் கொண்ட இந்த வீட்டை பராமரிக்க மொத்தம் 660வேலையாட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்கட்டணம்

மின்கட்டணம்

கடந்த 2011ஆம் ஆண்டு ஒருமுறை வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டும் 70 லட்ச ரூபாய் மின்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Facts About the Most Expensive House in the World

Do You Know About The Amazing Facts About the Most Expensive House in the World? Read Here.
Desktop Bottom Promotion