For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரச்சாமான்களில் கறை படியாமல் பளபளப்புடன் பாதுகாப்பதற்கான சில வழிகள்!!!

By Ashok CR
|

மரச்சாமான்களே வீட்டிற்கு ஒரு பகட்டான தோற்றத்தைத் தரும். இது ஒரு பளபளப்பான தோற்றத்தையும், பழங்கால கட்டமைப்பு தோற்றத்தையும் சாமான்களுக்கு அளிக்கின்றன. பழங்கால மர பர்னிச்சர்கள் அனைவராலும் விரும்பப் படுபவை மற்றும் மிகவும் அழகானவை.

ஆனால் அவற்றில் உள்ள பிரச்சனை யாதெனில், அதை தொடர்ந்து பராமரிப்பதே ஆகும். மரச்சாமான்களை பராமரிப்பது மற்றும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் கடினமான விஷயம். மரச்சாமான்களின் மீது படியும் கறையான்களின் பெருக்கம், தூசி, அழுக்கு போன்றவற்றால்,பாதிப்பு உண்டாகிறது.

இதுப்போன்று வேறு படிக்க: கண்ணாடியை பளிச்சென்று மின்னச் செய்ய சில டிப்ஸ்....

மரச்சாமான்கள், காலம் செல்லச் செல்ல மங்கி விடுகின்றன. இந்த வகையான மரச்சாமான்கள் எளிதில் அழுக்கடையும் இயல்பைப் பெற்றுள்ளன. டீ, காபி மற்றும் திரவமான உணவுகள் சிந்துவதால் ஏற்படும் கறைகளை நீக்குவதும், சுத்தப்படுத்துவதும் கடினமானது. தொடர்ச்சியான பராமரிப்பும், சுத்தப்படுத்தலும் மரச்சாமான்களுக்கு அவசியம். மரச்சாமான்களை கறையின்றி, பளபளப்புடன் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

மரச்சாமான்களின் கறைகளை சுத்தப்படுத்தவும், பளபளப்புடன் பராமரிக்கவும் கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாது எண்ணெய் மற்றும் எலுமிச்சை

தாது எண்ணெய் மற்றும் எலுமிச்சை

தாது எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சில துளிகள் கலந்த கலவையை கொண்டு மரச்சாமான்களைத் துடைத்து மரச்சாமான்கள் மற்றும் பர்னிச்சர்களை பராமரிக்கலாம். இந்த கலவையானது, மரப்பர்னிச்சர்களில் உள்ள அழுக்கை நீக்கி, அவற்றிற்கு இழந்த பளபளப்பைத் தருகிறது. இதில் பெரும்பாலும் எலுமிச்சை, கறை நீக்கியாக செயல்பட்டு மரச்சாமான்களின் மீது படிந்த கறைகளை நீக்க வல்லது. இந்த கலவையை ஒரு மிருதுவான துணியில் எடுத்துக் கொண்டு, கவனமாக மரச்சாமான்களை துடைக்க வேண்டும். மரச்சாமான்களின் மூலை இடுக்குகளில் உள்ள செதுக்கப் பட்ட இடங்களை துடைக்காமல் விட்டுவிட கூடாது. நல்ல பளபளப்பிற்கு இந்த முறையை இரண்டு மூன்று முறைத் திருப்பி செய்ய வேண்டும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லியானது எண்ணெய் போன்றது. இது மரச்சாமான்களின் உலர்தன்மை மற்றும் மங்கிய நிலையை நீக்கும் நீரேற்றியாக செயல்படுகிறது. சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை உங்களுடைய விரல்களில் எடுத்துக் கொண்டு, மர பர்னிச்சர்களின் மேல் கவனமாக தடவ வேண்டும். குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டு, பர்னிச்சரின் அனைத்து பகுதிகளிலும் ஜெல்லியைத் தடவ வேண்டும். ஜெல்லியானது, முழு திட நிலையில் இருப்பதால் இது எளிதில் பரவாது. அதனால் சிறிதளவு நீரை இதனுடன் சேர்க்க வேண்டும். இந்த செயலை, பர்னிச்சரை சுத்தம் செய்து விட்டு செய்யவேண்டும். இதனால் மரச்சாமான்கள் புதுப் பொலிவுடனும், பளபளப்புடனும் விளங்கும்.

மர எண்ணெய் மற்றும் தேன் மெழுகு

மர எண்ணெய் மற்றும் தேன் மெழுகு

மர எண்ணெய் மற்றும் தேன் மெழுகு இரண்டும் சம அளவில் கலந்த கலவையானது மர பர்னிச்சர்களை சுத்தம் செய்ய மிகவும் ஏற்றதாகும். பர்னிச்சர்களின் மீது கரையான் மற்றும் மற்ற பூச்சிகள் உருவாகாமல் தடுக்க இந்த கலவை உதவுகிறது. இந்த இரண்டையும் கலந்து மாவு போல எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் பர்னிச்சரை உலர்ந்த துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இந்த கலவையில் துணியை அமிழ்த்து, மீண்டும் பர்னிச்சரைத் துடைக்க வேண்டும். மரச்சாமான்களை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க இது ஒரு அதிசிறந்த வழிமுறையாகும்.

மயோனைஸ்

மயோனைஸ்

சுவை மிகுந்த உணவுகளான சாலட், பாஸ்தா மற்றும் மயோனைஸ் போன்றவை பர்னிச்சர்களில் உள்ள கறையை நீக்குவதில் சிறந்தவை. மயோனைஸின் மூலம் உணவு, தண்ணீர், திரவ உணவு மற்றும் பேனாவால் எழுதப்பட்ட மை கறை போன்றவற்றால் மரச்சாமான்களில் ஏற்படும் கறைகளை நீக்கலாம். ஒரு துணியில் சிறிதளவு மயோனைஸை எடுத்துக் கொண்டு, பர்னிச்சர்களை அழுத்தித் துடைத்தால் கறை நீங்கி விடும். கறைகள் நீங்கும் போது அந்த இடமும் மங்கி விடும். எனவே கடினமான கறைகளுக்கு மட்டும் மயோனைஸை உபயோகிப்பது நல்லது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய், பர்னிச்சர்களை பளபளப்புடன் திகழச் செய்கிறது. மர பர்னிச்சர்களின் மீது சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை தெளித்து, அனைத்து இடங்களிலும் சம அளவில் தேய்த்து தடவவேண்டும். பர்னிச்சர்கள் செதுக்கப்பட்டு இருந்தால், கூடுதல் முன் எச்செரிக்கையுடன் இருப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Keep Your Wooden Furniture Shiny And Stainless

To keep your furniture shining and stainless, you need to follow a few tips. Ways to keep wooden furniture shiny are mentioned here.
Desktop Bottom Promotion