For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை நிற பள்ளிச் சீருடையை புத்தம் புதிதாக மின்னச் செய்வதற்கான சில எளிய வழிகள்...

By Maha
|

குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து செல்ல சமீபத்தில் புதிதாக வாங்கிய வெள்ளை நிற பள்ளிச் சீருடையை இரண்டு வாரம் கழித்துப் பார்த்தால், பல வருடக் கணக்கில் பயன்படுத்தியது போன்று இருக்கும். இதற்கு முக்கிய காரணம், குழந்தைகள் பள்ளியில் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதால், துணிகளில் அழுக்குகள் படிந்துவிடுகிறது. அந்த அழுக்கு படிந்த வெள்ளை நிறத் துணியை நாம் வீட்டில் வார நாட்களில் துவைப்பதாக இருந்தால், சாதாரணமாக சோப்பு போட்டு துவைத்துவிட்டு, அழுக்கு போய்விட்டது என்று விட்டுவிடுவோம்.

ஆனால் குழந்தைகளின் வெள்ளை நிற பள்ளிச் சீருடையை சாதாரணமாக சோப்பு மட்டும் போட்டு துவைத்தால், அழுக்குகள் போகாது. மாறாக அதனை நன்கு சோப்பு நீரிலும், அதில் படிந்த கறைகளை போக்க உதவும் மற்ற பொருட்களைக் கொண்டும் நன்கு தேய்த்து துவைக்க வேண்டும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த நீர்மங்களைப் பயன்படுத்தி துணியின் தரத்தை குறைப்பதற்கு பதிலாக, வீட்டில் இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வார இறுதி நாட்களில் துவைத்தால், அவர்களின் பள்ளிச் சீருடையை எப்போதுமே புத்தம் புதியதாக ஜொலிக்கக் செய்யலாம்.

இங்கு குழந்தைகளின் வெள்ளை நிற பள்ளிச் சீருடையை புத்தம் புதிதாக மின்னச் செய்வதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் அதன்படி முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

உங்கள் குழந்தையின் பள்ளிச் சீருடையானது வெள்ளை என்றால், அதில் படிந்த கறையை போக்க பலர் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் அப்படி சிரமப்படாமல் எளிதில் போக்க, ப்ளீச்சிங் தன்மை அதிகம் நிறைந்த எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்தலாம். அதிலும் எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதனை கறை உள்ள இடத்தில் நன்கு அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி கறை மறையும் வரை நன்கு அழுத்தி தேய்த்து, பின் சோப்பு நீரில் ஊற வைத்து, பிரஷ் பயன்படுத்தி தேய்த்தால், கறைகள் மறைந்துவிடும்.

வினிகர்

வினிகர்

வினிகர் மற்றொரு ப்ளீச்சிங் பொருள். இவையும் வெள்ளை நிற பள்ளிச் சீருடையில் படியும் கறைகளை எளிதில போக்க வல்லது. அதற்கு 1/2 கப் வினிகரை, நீரில் கலந்து, அதில் பள்ளிச் சீருடையை 1 மணிநேரம் ஊற வைத்து, பின் பிரஷ் பயன்படுத்தி நன்கு தேய்த்து துவைக்க வேண்டும்.

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர்

குழந்தைகளின் பள்ளிச் சீருடையில் களிமண்ணின் கறை இருந்தால், அதனை பேக்கிங் பவுடர் பயன்படுத்தி துவைத்தால் பளிச்சென்றாகும். அதற்கு பேக்கிங் பவுடரை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு, கறை உள்ள இடத்தில் தடவி, கறை போகும் வரை தேய்க்க வேண்டும். இதனால் நீங்காத கறைகளும் நீங்கிவிடும்.

ப்ளீச்

ப்ளீச்

ப்ளீச்சிங் பவுடரை நீரில் கரைத்து, அதனை கறை படிந்த வெள்ளை நிற பள்ளிச் சீருடையில் தடவி தேய்த்து, பின் துவைத்து கறைகள் மறைந்துவிடும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ் கூட ஒரு இயற்கையான ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். இதனைக் கொண்டு கறைப் படிந்த வெள்ளை நிற பள்ளிச் சீருடையை துவைத்தால், கறைகள் அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Washing School Uniforms

It is time for school and these tips for washing school uniforms will come in handy for working mums. Use these tips for washing school uniforms, especially white school shirts.
Story first published: Friday, June 20, 2014, 16:38 [IST]
Desktop Bottom Promotion