For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொசைக் தரையை சுத்தம் செய்வதற்கான சில சிம்பிளான டிப்ஸ்...

By Maha
|

தற்போது நிறைய வீடுகளில் சிமெண்ட் தரைகளை விட மொசைக், மார்பிள் போன்ற தரைகள் தான் உள்ளது. இவை அனைத்தும் அழகுக்காக இருந்தாலும், இத்தகையவற்றில் அழுக்குகள் எளிதில் படிவதுடன், அவை அசிங்கமாக நன்கு வெளிப்படும்.

மேலும் இத்தகைய தரைகளில் படியும் அழுக்குகள் மூலைமுடுக்குகளில் படிவது மட்டுமல்லாமல், அவற்றை நீக்குவது சிரமமாக இருக்கும். ஆகவே பலர் மொசைக்கின் இடுக்குகளில் படியும் அழுக்குகளை சோம்பேறித்தனப்பட்டு சுத்தம் செய்யமாட்டார்கள். அவ்வாறு சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், அது மொசைக்கின் வாழ்நாளை குறைத்துவிடும்.

இங்கு மொசைக்கில் படியும் அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை ஒரு துணி அல்லது பிரஷ்ஷில் தொட்டு, மொசைக்கில் தேய்த்தால், அதில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, மொசைக்கானது நன்கு பளிச்சென்று புதிது போன்று மின்னும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

மொசைக்கில் படிந்துள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு மொசைக் தரையை தேய்த்தால், கறையானது போய்விடும். மேலும் இதனைக் கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தரையை துடைத்து எடுத்தால், தரையில் உள்ள அழுக்குகள் போவதுடன், நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.

ஷாம்பு

ஷாம்பு

ஷாம்பு என்று சொன்னதும் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் உண்மையில் சிறிது ஷாம்புவை நீரில் கவந்து, அதனைக் கொண்டு மொசைக் தரையை பிரஷ் கொண்டு தேய்த்து துடைத்து எடுத்தால், தரையில் உள்ள அழுக்குகள் விரைவில்

போய்விடும். ஆனால் ஷாம்புவை பயன்படுத்தினால், தரையை தண்ணீர் கொண்டு நன்கு துடைத்து உலர வைக்க வேண்டும்.

சுத்தப்படுத்தும் பொருள்

சுத்தப்படுத்தும் பொருள்

இல்லாவிட்டால் டிடர்ஜண்ட் அல்லது பீனால் கொண்டு மொசைக் தரையை நன்கு தேய்த்து கழுவினாலும், தரையில் படிந்த அழுக்குகள் முற்றிலும் போய்விடும். ஆனால் இவற்றை பயன்படுத்துவதாக இருந்தால், வாரத்திற்கு 2 முறை மட்டும் தான் தரையை இவற்றைக் கொண்டு துடைக்க வேண்டும்.

வாக்யூம் க்ளீனர்

வாக்யூம் க்ளீனர்

அனைவருமே தினமும் வீட்டின் தரையை கூட்டி குப்பையை வெளியேற்றுவோம். அப்படி செய்பவர்கள், தரையை சுத்தம் செய்ய வாக்யூம் க்ளீனரைப் பயன்படுத்தி தினமும் சுத்தம் செய்தால், தரையில் அழுக்குகள் தங்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Look After Mosaic Tiles

In this article, we shall discuss a few mosaic tiles cleaning tips and tips for maintaining mosaic tiles.
Desktop Bottom Promotion