For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷ் பேசின் பளிச்சென்று மின்ன சில டிப்ஸ்...

By Babu
|

இன்றைய காலத்தில் அனைத்து வீடுகளிலும் முகம் மற்றும் கைகளை கழுவுவதற்கு வாஷ் பேசின் என்ற ஒன்று உள்ளது. இத்தகைய வாஷ் பேசின் குளியலறையில் மட்டுமின்றி, டைனிங் ஹாலிலும் இருக்கும். வீட்டிற்குள் இருக்கும் இந்த வாஷ் பேசின் சுத்தமாக இல்லாவிட்டால், உடலை நோய்களானது விரைவில் தாக்கிவிடும். ஆகவே வாஷ் பேசினை அவ்வப்போது நன்கு கழுவ வேண்டும்.

இல்லாவிட்டால், நோய்களுடன், வீட்டில் துர்நாற்றம் வீசுவதுடன், வீட்டிற்கு வருவோர் அதைப் பார்த்தால் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே அந்த வாஷ் பேசினை சுத்தம் செய்வதற்கான சில டிப்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி செய்து பாருங்கள்.

Tips To Clean Your Wash Basin

* ஃபீனாலை வாஷ் பேசினில் சுற்றி ஊற்றி, பின் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வாஷ் பேசினில் உள்ள கறைகள் நீங்குவதுடன், வாஷ் பேசினும் நன்கு பளிச்சென்று இருக்கும்.

* எலுமிச்சை சாற்றினை வாஷ் பேசினில் ஊற்றி, ஊற வைத்து பின் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் வாஷ் பேசின் நன்கு நறுமணத்துடன் இருக்கும்.

* வாஷ் பேசினை தேங்காய் நார் கொண்டு தினமும் தேய்த்து வந்தால், வாஷ் பேசினில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

* வாஷ் பேசின் கறைகள் படிந்து மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது ப்ளீச்சிங் பொடி அல்லது நீர்மத்தைப் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், வாஷ் பேசின் பளிச்சென்று இருக்கும்.

English summary

Tips To Clean Your Wash Basin

There is no need of illustrating the basic on how to clean your wash basins but here we will discuss some easy and efficient ways if cleaning your wash basin.
Story first published: Thursday, April 3, 2014, 17:23 [IST]
Desktop Bottom Promotion