For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் பசையுள்ள கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

By Maha
|

வீட்டிலேயே மிகவும் கஷ்டமான வேலை என்றால் அது சமைக்க உதவும் கேஸ் அடுப்பில் படிந்த எண்ணெய் பசையை சுத்தம் செய்வது தான். ஆனால் அடுப்பில் படியும் எண்ணெய் பசையை, சமைத்து முடித்த அப்போதே துடைத்துவிட்டால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அப்படி உடனே துடைக்காமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை துடைத்தால், அடுப்பில் படித்த எண்ணெய் பசையை போக்குவது என்பது கடினமாகிவிடும்.

மேலும் பர்னரில் அழுக்குகள் படிந்தாலும், அதனை சுத்தம் செய்வதும் கஷ்டம். இதற்காக எத்தனையோ சுத்தம் செய்யும் பொருட்கள் விற்கப்பட்டாலும், அவற்றைப் பயன்படுத்தினால், பர்னர்களின் நிறம் மங்குவதுடன், சில சமயங்களில் அடுப்பு சரியாக வேலை செய்யாமலும் போய்விடும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எண்ணெய் பசையுள்ள மற்றும் அழுக்குப் படிந்த கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய சில டிப்ஸ் கொடுத்துள்ளது.

Tips To Clean Your Greasy Gas Stove

ஸ்டாண்ட் சுத்தம் செய்ய...

ஸ்டாண்ட் சுத்தம் செய்வதற்கு, 1/4 கப் அம்மோனியாவை நீரில் ஊற்றி, அதில் ஸ்டாண்ட்டை வைத்து 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் கையில் கையுறை அணிந்து, ஸ்டாண்ட்டை சுத்தமான நீரில் தேய்த்து கழுவினால், ஸ்டாண்ட்டில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

அடுப்பின் மேல்புறம் சுத்தம் செய்ய...

அடுப்பின் மேல் பேக்கிங் சோடாவை தூவி, அதன் மேல் லேசாக சுடுநீரை தெளித்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்தால், அடுப்பின் மேல் உள்ள எண்ணெய் பசை எளிதில் நீங்கிவிடும்.

பர்னரை சுத்தம் செய்ய...

பர்னரை அடுப்பில் இருந்து எடுத்து, அதனை சூடான சோப்பு நீரில் 1 மணிநேரத் ஊற வைத்து, பின் ஊசியால் ஒவ்வொரு ஓட்டையையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் சோடாவை பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு தேய்த்து, சுத்தமான நீரில் கழுவினால், பர்னர் நன்கு சுத்தமாக இருக்கும். பின்பு அதனை நன்கு உலர வைத்து, அடுப்பில் பொருத்த வேண்டும்.

English summary

Tips To Clean Your Greasy Gas Stove

Commercial cleansers are not a very good idea for cleaning your gas stove. It may cause discolouration or damage to the burners and your stove may not work properly. So, here are a few tips to clean your greasy gas stove which is sure to come handy. Take a look.
Story first published: Tuesday, March 18, 2014, 18:30 [IST]
Desktop Bottom Promotion