For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் நோய் கிருமிகள் அதிகம் இருக்கும் இடங்கள்!!!

By Ashok CR
|

நோய் நுண் கிருமிகள் கண்ணுக்கு புலப்படாத சின்னதான பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொண்டது. இதை வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாது. நம்மை சுற்றி நிறைய நோய் நுண் கிருமிகள் உள்ளன. நம்முடைய வீடுகளிலும் நோய் நுண் கிருமிகள் உள்ளன. நாம் சில சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறோம். அதாவது வீட்டை தினமும் சுத்தம் செய்தல், நோய் நுண் கிருமிகளை உருவாக்கும் பொருள்களை வீட்டில் இருந்து நீக்குதல் அல்லது அகற்றுதல், சலவை பொருட்களை (டிடர்ஜென்ட்டுகள்) பயன்படுத்துதல் மற்றும் தரையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவைகள்.

இது போக, மேலும் சில தனிப்பட்ட சுகாதார பழக்கங்களை நாம் பின்பற்றுகிறோம். அதாவது சாப்பிடுவதற்கு முன்னால் கையை கழுவுதல், துணி துவைக்கும் அறையில் இருந்து வந்த பிறகு கையை கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின் போது துணியை பயன்படுத்துதல் போன்றவைகளை கூறலாம். இது போன்றவைகள் பொதுவான சுகாதார பழக்கங்கள். இது நம் வீட்டை நோய் நுண் கிருமிகளிடம் இருந்து காக்கிறது. நாம் எவ்வளவு முன்னெச்சரிகையுடன் இருந்தாலும் கூட நம் வீட்டில் நோய் நுண் கிருமிகள் என்பது இருக்கும். சில இடங்களில் இந்த கிருமிகள் தேங்கி இவைகளை அழிக்க பயன்படுத்தப்படும் சுத்தம் செய்யும் மருந்து அல்லது இரசாயன நச்சு பொருட்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.

தொந்தரவு தரும் இவ்வகையான நோய் நுண் கிருமிகளால் வீட்டில் பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொண்ட நோய் நுண் கிருமிகள் தங்கி உள்ள இடங்கள் பின்வருமாறு:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துவைக்கப்படாத ஆடைகள்

துவைக்கப்படாத ஆடைகள்

சில சமயங்களில் நாம் நம் துணிகளை தொடர்ந்து துவைப்பதில்லை.அத்தகைய துணிகள் நம் அறை மூலையிலும் அல்லது குளியலறையின் மூலையிலும் குவிந்து கிடக்கும். இந்த துணிகள் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் கொண்ட நோய் நுண் கிருமிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. அந்த உபயோகிக்கப்பட்ட துணி ஆனது உடலில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குளை கொண்டுள்ளது. இந்த இடங்கள் நோய் நுண் கிருமிகளுக்கு ஒரு நல்ல இடமாகவும் அது தன்னுடைய இனத்தை பெருகுவதற்கும் உதவுகிறது. குவிக்கப்பட்ட அழுக்கு துணிகள் மற்றும் தேய்க்க வேண்டிய துணிகளிலும் தங்கி பெருகுகிறது, இதனால் இது கிருமிகளால் பாதிக்கப்பட்ட இடமாக வீடுகளில் உள்ளது. எப்பொழுதும் துணிகளை தொடர்ந்து துவைப்பது நல்லது, அதுவும் வியர்வை மற்றும் அழுக்கான துணிகளை உடனே துவைப்பது மிகவும் நல்லது.

கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள்

கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள்

கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை நாம் எவ்வளவு தான் சுத்தம் செய்து, இரசாயன மருந்துகளை பயன்படுத்தினாலும் கூட அது கிருமிகளை அழிப்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை. சில மூலை இடுக்குகள் இந்த நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்பட்டு சுத்தம் செய்யபடாமல் இருக்கின்றன. துண்டுகள் (டவல்) நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன. கழிப்பறை இடங்கள் நோய் நுண் கிருமிகளால் முக்கியமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதை கவனமாக சுத்தம் செய்தால் நோய் நுண் கிருமிகளில் இருந்தும் தொற்று நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் பெரும்பாலும் தொற்று நோய்களை பரப்பும் நோய் நுண் கிருமிகள் மற்றும் பாக்டீரியாகளைக் கொண்டுள்ளது. உங்களால் முடிந்த அளவு அதை சுத்தமாக வையுங்கள். நீங்கள் அவைகளை உபயோகிக்கும் போது தண்ணீர் ஊற்றி சுத்தமாக வையுங்கள்.

தினசரி உபயோகிக்கும் டூத் பிரஷ்

தினசரி உபயோகிக்கும் டூத் பிரஷ்

நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது டூத் ப்ரஷ். டூத் பிரஷ் என்பது நேரடியாக நம்மால் உபயோகிக்கப்படும் ஒரு பொருள். இது நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்பட்டு நமக்கு எளிதில் நோயை பரப்பும். எனவே டூத் பிரஷை தினசரி உபயோகத்திற்கு பிறகு மூடி வைப்பது நல்லது. கண்ட இடங்களில் கிடக்கும் படி போட்டு வைக்க கூடாது. நாம் உபயோக்கிக்கும் முன் அதனை நன்கு கழுவ வேண்டும். அதனை உபயோகித்த பிறகும் கழுவ வேண்டும். டூத் பிரஷை சுத்தமாகவும், மூடியும் வைக்க வேண்டும்.

இடத்தையும் உபகரணங்களையும் சுத்தம் செய்தல்

இடத்தையும் உபகரணங்களையும் சுத்தம் செய்தல்

துணி துவைக்க உதவும் பால்கனி, பாத்திரங்கள், இன்ன பிற பொருட்கள் போன்றவைகளையும் வீட்டில் கிருமிகளால் பாதிக்கப்பட்ட இடங்களே. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் சுத்தம் இல்லாத துணி மற்றும் பாத்திரத்துடன் சேர்ந்து எல்லா இடத்தையும் பாதிக்கிறது. சுத்தம் செய்ய பயன்படும் சோப்பு நுரை, சுத்தம் செய்ய உதவும் ப்ரஷ், இன்ன பிற பொருட்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் பாதிக்கப்படுகிறது. இந்த உபகரணங்களை நன்கு சுத்தம் செய்து அதன் பின் உபயோகிக்க வேண்டும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களை ஒழிக்க பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களை உபயோக்கிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டியை சுற்றி உள்ள இடமே ஒரு வீட்டில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண் கிருமிகளால் மிகவும் பாதிக்கப்படும் இடம். நிறைய குப்பைகளை கொண்டுள்ளது தான் குப்பைத்தொட்டி. இதுவே பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண் கிருமிகள் இனபெருக்கம் செய்ய சிறந்த இடமாக உள்ளது. எனவே தினமும் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அதை சுற்றி இருக்கும் இடத்தில் குப்பைகள் சேராமலும் அகற்ற வேண்டும். இடத்தை சுத்தமாகவும், தேவை இல்லாத குப்பைகள் சேராமலும் பார்த்துக் கொள்ளவும். அதே போல் குப்பைத் தொட்டியை மூடியும், சரியான இடைவெளியில் சுத்தம் செய்தும் வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Most Infested Places In Your Home

There are many such places which are infested by germs in the house. Some of these places that should be watched out for the disease causing germs and bacteria are:
Desktop Bottom Promotion