For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஃப்ரீஸர் முழுக்க ஐஸ்கட்டியா இருக்கா? படிப்படியாக அதை நீக்க சில டிப்ஸ்...

By Karthikeyan Manickam
|

உங்கள் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் நிறைய ஐஸ் கட்டிகள் தேங்கி நிற்கிறதா? அதில் வைத்துள்ள ஐஸ்கிரீம் ஒரே அடியாக உறைந்து நிற்கிறதா? அல்லது அதில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் கூலாவதை நிறுத்திவிட்டதா?

அப்படியெனில் உடனடியாக ஃப்ரீஸரில் உள்ள தேவையில்லாத அந்த ஐஸ் கட்டிகளை உடனடியாக நீக்கியாக வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்தால் தான் அதன் ஆயுளும் கூடும்.

பயனுள்ள வேறு சில: வாஷிங் மெஷினில் போட்ட துணி பாழாகாமல் இருக்க சில டிப்ஸ்...

அப்படிச் செய்யாவிட்டால் சில சமயம் மின் கசிவு ஏற்பட்டு வெடித்துவிடும் அபாயம் உள்ளது. ஐஸை நீக்கியதும் ஃப்ரிட்ஜ் முழுவதையும் சுத்தமாகத் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஃப்ரீஸரில் உள்ள ஐஸ்கட்டிகளை அகற்ற சில எளிய படிப்படியான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்

ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்

ஃப்ரீஸரில் உள்ள ஐஸ்கட்டிகளை அகற்றி சுத்தம் செய்ய நீங்கள் நீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே, முதலில் ஃப்ரிட்ஜின் ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும்.

ஃப்ரீஸரை மட்டும் காலி செய்யுங்கள்

ஃப்ரீஸரை மட்டும் காலி செய்யுங்கள்

முதலில் ஃப்ரீஸரில் உள்ள பொருட்களை மட்டும் எடுத்து வெளியில் வையுங்கள். ஃப்ரிட்ஜில் இன்னும் கூலிங் இருப்பதால் அதற்குக் கீழே உள்ளவற்றை சிறிது நேரம் கழித்தே அப்புறப்படுத்தலாம்.

ஐஸை அகற்றுங்கள்

ஐஸை அகற்றுங்கள்

ஐஸை அகற்றுவதற்கு கூர்மையான பொருட்கள் எதையும் பயன்படுத்தி விடாதீர்கள். அது ஃப்ரீஸரைப் பதம் பார்த்துவிடும். ரப்பர் கிளவுஸ்களைக் கையில் மாட்டிக் கொண்டு ஐஸை சிறிது சிறிதாக அப்புறப்படுத்துங்கள்.

பிற பொருட்களைக் காலி செய்யுங்கள்

பிற பொருட்களைக் காலி செய்யுங்கள்

இப்போது ஃப்ரீஸருக்கு அடியில் இருக்கும் பொருட்களை எடுத்து வெளியில் வையுங்கள். கம்பித் தட்டுக்கள் மற்றும் காய்கறிகள் வைத்திருக்கும் டப்பாவையும் அகற்றி விடுங்கள்.

துணியால் துடையுங்கள்

துணியால் துடையுங்கள்

பிறகு, சுத்தமான ஈரத்துணியை வைத்து ஃபிரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸரின் உள்புறம் முழுவதும் துடைக்கவும். அப்போது அவற்றின் உட்சுவர்களை அழுத்தாமல் பார்த்துக் கொள்ளவும். ரொம்ப அழுத்தினால் உடைந்துவிடும்.

உலர்த்துங்கள்

உலர்த்துங்கள்

பின்னர் உடனடியாக டிஸ்யூ பேப்பரை வைத்து உட்புறத்தைத் துடைத்து உலர்த்த வேண்டும்.

சுடுநீர் பயன்படுத்தலாம்

சுடுநீர் பயன்படுத்தலாம்

இதற்குப் பிறகும் ஃப்ரீஸரில் ஐஸ் தேங்கி இருந்தால், சிறிய கிண்ணத்தில் வெந்நீர் நிரப்பி அதனுள் வைக்க வேண்டும். ஐஸ் வேகமாக உருகிவிடும்.

மணம் தரும் எலுமிச்சை

மணம் தரும் எலுமிச்சை

அந்த வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்த்து ஒரு 10 நிமிடம் ஃப்ரீஸரை மூடி வையுங்கள். இதனால் அதைத் திறக்கும் போதெல்லாம் கமகமவென்று மணக்கும்.

வினிகர் பயன்படுத்துங்கள்

வினிகர் பயன்படுத்துங்கள்

அந்த 10 நிமிடங்களில் ஃப்ரிட்ஜின் மற்ற உட்புறங்களை வினிகர் கொண்டு நன்றாகக் கழுவினால், உணவுக் கறைகள் மறையும்.

ஸ்விட்ச் ஆன் செய்யுங்கள்

ஸ்விட்ச் ஆன் செய்யுங்கள்

பின்னர் கழற்றி வைத்த கம்பித் தட்டுக்கள் மற்றும் காய்கறிகள் வைத்திருக்கும் டப்பாவை மீண்டும் அதனதன் இடத்தில் சரியாகப் பொருத்தி, வெந்நீர் கிண்ணத்தையும் அகற்றிவிட்டு, ஃப்ரிட்ஜின் ஸ்விட்சை ஆன் செய்யவும். ஒரு 10 நிமிடம் கழித்து, உணவுப் பொருட்களை உள்ளே வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Tips To Defrost A Refrigerator

It is important to defrost your refrigerator once in a while. Defrosting helps to keep your fridge stronger and foods fresh. There are some tips to defrost a refrigerator in the most simple ways. If you follow these tips, you are certainly going to have a clean and sparkling refrigerator.
Desktop Bottom Promotion