For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும் இயற்கைப் பொருட்கள்!!!

By Maha
|

மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி நீர் தேங்கியிருப்பதால், வீட்டில் கொசுக்களானது அழையா விருந்தாளியாக வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும். ஏனெனில் கொசுக்களானது நீர் தேங்கும் பகுதியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே வீட்டில் கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுதலைப் பெற, அவற்றிற்கு பிடிக்காத வாசனை கொண்ட பொருட்களை அவை நுழையும் இடத்தில் வைத்தால், கொசுக்கள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கலாம்.

இங்கு கொசுக்களை அழிக்கும் மற்றும் கொசுக்கள் வராமல் தடுக்கும் சில இயற்கையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் பயன்படுத்தினால், வீடு கமகமவென்று மணப்பதுடன், கொசுக்களின்றி சுத்தமாகவும் இருக்கும். சரி, இப்போது கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும் பொருட்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை மற்றும் கிராம்பு

எலுமிச்சை மற்றும் கிராம்பு

எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதன் மேல் கிராம்பை சொருகி, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தால், அதன் வாசனையினால் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

நறுமணமிக்க லாவெண்டர் எண்ணெயை ஒரு துணியில் நனைத்து, கொசுக்கள் வரும் இடத்தில் தொங்கவிட்டால், கொசுக்களுக்கு அதன் நறுமணமானது பிடிக்காததால், வீட்டில் கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். இல்லாவிட்டால், லாவெண்டர் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொண்டாலும், கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயிலை சருமத்தில் தடவிக் கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயும் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும். ஏனெனில் இதில் நிறைந்துள்ள கெமிக்கலானது கொசுக்களுக்கு அழிவை ஏற்படுத்தும். ஆகவே இதனை சருமத்தில் தடவிக் கொள்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

காபித் தூள்

காபித் தூள்

காபித் தூளின் நறுமணமும் கொசுக்களுக்கு பிடிக்காது. ஆகவே நீங்கள் உட்காரும் இடத்தின் அருகில் ஒரு பௌலில் காபித் தூளை வைத்துக் கொண்டு உட்காருங்கள். பின் பாருங்கள் கொசுக்கள் உங்களை நெருங்கவே நெருங்காது.

சூடம்/கற்பூரம்

சூடம்/கற்பூரம்

ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, அதில் சில துண்டுகள் கற்பூரத்தைப் போட்டு, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தாலும், கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Mosquito Repellents For The Home

Here are some natural mosquito and bug repellents you can use in your home or in your yard in place of traditional bug sprays and chemicals.
Story first published: Wednesday, August 6, 2014, 16:28 [IST]
Desktop Bottom Promotion