For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளியலறையின் தரையை சுத்தம் செய்வதற்கான சில எளிய வழிகள்!!!

By Maha
|

பொதுவாக வீட்டிலேயே குளியலறையில் தான் கிருமிகள் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். அத்தகைய குளியலறையை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள, நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களைத் தான் பயன்படுத்துவோம்.

ஆனால் பணம் இல்லாத சமயத்தில், குளியலறையை சுத்தம் செய்யும் தீர்ந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்? யோசிக்காதீர்கள், அப்படி பணம் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே குளியலறையை சுத்தப்படுத்தலாம். அதிலும் அந்த பொருட்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான சுத்தப்படுத்துவதில் முதன்மையாக இருக்கக்கூடியவை.

இங்கு குளியலறையின் தரையை சுத்தம் செய்வதற்கு உதவும் சில இயற்கைப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி உங்கள் குளியலறையின் தரையை பளபளப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1/2 கப் பேக்கிங் சோடாவைக் கொண்டு சூப்பராக குளியலறையின் தரையை மின்ன வைக்கலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பேக்கிங் சோடாவை குளியலறையின் தரையில் தூவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் தேய்க்க வேண்டும். இதனால் குளியலறையின் தரை சும்மா பளிச்சுன்னு இருக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், இதன் சாற்றினை குளியலறையின் தரையில் தெளித்து, உடனே நன்கு பிரஷ் கொண்டு தேய்த்துவிட்டால், கறைகள் நீங்கிவிடுவதோடு, குளியலறையும் நன்கு நறுமணத்துடன் இருக்கும்.

உப்பு

உப்பு

உப்பும் ஒரு சூப்பரான சுத்தப்படுத்தும் பொருட்களில் ஒன்று. அதிலும் மஞ்சள் நிற கறைகளை எளிதில் போக்க வேண்டுமானால், உப்பை தரையில் தூவி, சிறிது நேரம் கழித்து பிரஷ் கொண்டு தேய்த்து, பின் சுடுநீர் கொண்டு குளியலறையை கழுவி விட வேண்டும்.

வினிகர்

வினிகர்

வெள்ளை வினிகருக்கும் சுத்தம் செய்யும் தன்மை உள்ளது. அதிலும் வினிகரை குளியலறையின் தரையில் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாற்றினை தெளித்து, பிரஷ் கொண்டு தேய்த்து விட்டு கழுவ வேண்டும்.

சோடா

சோடா

ஆம், சோடா கூட சுத்தம் செய்யும் பண்பைக் கொண்டுள்ளது. அதற்கு சோடாவை கறை அதிகம் உள்ள இடங்களில் ஊற்றி, பின் தேய்க்க வேண்டும். இதனால் கறைகள் உடனே நீங்கும்.

வோட்கா

வோட்கா

வோட்கா சற்று விலை அதிகமான பொருளாக இருந்தாலும், இதனைக் கொண்டும் குளியலறையை சுத்தம் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Clean Your Bathroom Floor In Simple Ways

If you have been trying all sorts of chemicals on your bathroom floor, here are some of the natural elements you can use to make your bathroom floor clean. Using these natural products to clean your bathroom floor, it will also help in removing the stubborn stains too.
Story first published: Saturday, March 1, 2014, 18:03 [IST]
Desktop Bottom Promotion