For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங் மெஷினில் போட்ட துணி பாழாகாமல் இருக்க சில டிப்ஸ்...

By Maha
|

முன்பெல்லாம் துணி அதிகமாகிவிட்டால், சலவைக்கு போடுவோம். அப்படி சலவைக்கு போட்டால், அது வருவதற்கு 2 நாட்கள் ஆகும். ஆனால் இப்போது துணியை எளிமையாக துவைப்பதற்கு வாஷிங் மெஷின் வந்துவிட்டது. இந்த மெஷினில் போட்டால், அதுவே துவைத்து, அலசி, உலர வைத்து கொடுக்கும். அதிலும் சில வாஷிங் மெஷினில் போட்டால், அதை தனியாக உலர வைக்காமல் அப்படியே எடுத்து மடித்து வைக்கலாம். அந்த அளவில் காலமானது நவீனமயமாகிவிட்டது.

இருப்பினும் அப்படி வாஷிங் மெஷினில் போடும் சில துணிகள் பாழாகும். உதாரணமாக, வெள்ளை உடைகளில் சாயம் படிவது, அதிக சுருக்கத்துடன், பிசுபிசுக்காக இருப்பது போன்ற பல. இங்கு வாஷிங் மெஷினில் போட்ட துணி பாழாகாமல் இருக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த வகையான டிடர்ஜெண்ட்

எந்த வகையான டிடர்ஜெண்ட்

அனைத்து வாஷிங் மெஷினிலும் ஒரே வகையான டிடர்ஜெண்ட் போடக்கூடாது. ஒருவேளை அப்படி போட்டால் அது துணிகளில் டிடர்ஜெண்ட்டுகளை தங்க வைத்து துணிகளை நாசமாக்கிவிடும். ஆகவே எந்த வாஷிங் மெஷினுக்கு பவுடர் பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு பவுடரையும், நீர்ம கரைசல் எதற்கு பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு நீர்ம கரைசலையும் பயன்படுத்த வேண்டும். இதனால் துணிகள் பாழாகாமல் இருக்கும்.

தனித்தனியாக துவைக்கவும்

தனித்தனியாக துவைக்கவும்

சாயம் போகும் ஆடைகளையெல்லாம் தனியாக எடுத்து, அவற்றை லேசான நிறமுடைய ஆடைகளுடன் சேர்த்து துவைக்காமல், தனியாக துவைக்க வேண்டும். இதனால் சாயம் படிவதைத் தடுக்கலாம்.

வெள்ளை துணிகளை தனியாக துவைக்கவும்

வெள்ளை துணிகளை தனியாக துவைக்கவும்

பலர் வெள்ளை துணிகளை தனியாக துவைக்க சோம்பேறித்தனப்பட்டு, ஒன்றாக சேர்த்து துவைத்துவிட்டு பின் வருந்துவார்கள். ஆனால் உங்கள் துணி சுத்தமாக வெள்ளையாக பளிச்சென்று இருக்க வேண்டுமானால், அவற்றை தனியாக துவையுங்கள்.

அதிகமாக திணிக்க வேண்டாம்

அதிகமாக திணிக்க வேண்டாம்

சிலர் அடிக்கடி துவைக்க சோம்பேறித்தனப்பட்டு, இரண்டு வார துணியை ஒரே நேரத்தில் துவைக்கலாம் என்று வாஷிங் மெஷினில் போடுவார்கள். ஆனால் அப்படி போட்டால், துணிகளில் உள்ள கறைகள் நீங்காமல் இருப்பதுடன், துணிகளை துவைப்பதே வேஸ்ட் என்று சொல்லலாம். ஆகவே துணிகளை திணிக்காமல் அளவாக போட்டு துவைத்து வாருங்கள்.

அதிகமான டிடர்ஜெண்ட்

அதிகமான டிடர்ஜெண்ட்

எப்போதுமே வாஷிங் மெஷினில் அளவுக்கு அதிகமாக போட வேண்டாம். ஏனெனில் இதனால் துணிகளில் டிடர்ஜெண்ட்டுகளானது போகாமல் அப்படியே இருக்கும். பின் துவைத்ததே வீணாகிவிடும். ஆகவே எவ்வளவு போட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவ்வளவு மட்டும் போட்டு துவையுங்கள்.

பேனா மை கறை

பேனா மை கறை

அனைத்து ஆண்களும் தங்களது சட்டையின் பையில் பேனாவை வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பதால், சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமல் மை கறையானது படிந்துவிடும். ஆகவே அப்படி மை கறை படிந்த சட்டையில் உள்ள மையை போக்க, சிறிது ஆல்கஹாலை விட்டோ அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்தியோ தேய்த்து பின் வாஷிங் மெஷினில் போட வேண்டும். இதனால் துணியை துவைத்த பின்னர் அவ்விடத்தில் கறை இல்லாமல் இருப்பதுடன், மற்ற துணிகளுக்கு பரவாமலும் இருக்கும்.

டிஷ்யூ

டிஷ்யூ

தற்போது கர்சிஃப்பை விட, டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலும் அந்த டிஷ்யூ பேப்பரை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி வைத்துள்ள பேண்ட்டை துவைக்க போடும் போது, அவற்றில் உள்ள டிஷ்யூ பேப்பரை எடுக்க மறந்துவிடுவோம். ஒருவேளை அப்படி மறந்துவிட்டால், துவைக்கும் போது தென்பட்டால், அதனை எதுவும் செய்யாமல் நன்கு உலர்ந்த பின்னர் எடுங்கள். இல்லாவிட்டால், அது மற்ற இடங்களுக்கு பரவி நன்கு ஒட்டிக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Solutions To Common Laundry Mistakes

There are solutions to all laundry mistakes and here we are going to list a few cleaning tips to avoid disasters in the washer.
Story first published: Monday, April 21, 2014, 17:04 [IST]
Desktop Bottom Promotion