For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை சுத்தம் செய்ய உதவும் உணவுப் பொருட்கள்!!!

By Maha
|

வீட்டை சுத்தம் செய்யும் போது இயற்கைப் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் பொருட்களானது பளிச்சென்று மின்னும். அப்படி வீட்டை சுத்தம் செய்ய உதவும் சில உணவுப் பொருட்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அதிலும் எந்த பொருளை எதனைக் கொண்டு சுத்தம் செய்தால் பளிச்சென்று மின்னும் என்று தெரியுமா? இங்கு வீட்டை சுத்தம் செய்ய உதவவும் சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அந்த பொருட்கள் அனைத்தும் பொருட்களை பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவுவதுடன், நறுமணத்துடன் இருக்கவும் உதவி புரியும்.

சரி, இப்போது எந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எதனை சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத்ரூம் டப்: கிரேப் ஃபுரூட்

பாத்ரூம் டப்: கிரேப் ஃபுரூட்

பாத்ரூம் டப் மற்றும் சின்க்கில் உள்ள கறைகளைப் போக்க கிரேப் ஃபுரூட்டை உப்பில் தொட்டு, தேய்த்து கழுவ வேண்டும்.

துருப்பிடித்த பொருட்கள்: உருளைக்கிழங்கு

துருப்பிடித்த பொருட்கள்: உருளைக்கிழங்கு

இரும்பு பொருட்களில் துருப்பிடித்திருந்தால், அதனை நீக்க உருளைக்கிழங்கை கொண்டு தேய்த்தால், விரைவில் போய்விடும்.

 பாத்திரங்கள்: காபித் தூள்

பாத்திரங்கள்: காபித் தூள்

வாணலியில் உள்ள கருமையை எந்த ஒரு கீறல்கள் இல்லாமலும் போக்க வேண்டுமானால், காபித் தூளைப் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.

ஜன்னல்கள்: வெங்காயம்

ஜன்னல்கள்: வெங்காயம்

ஜன்னல்களை வெங்காயத்தைக் கொண்டு துடைத்து எடுத்தால், ஜன்னல்களில் உள்ள எண்ணெய் பசை போன்ற தூசிகள் மற்றும் கறைகள் நீங்கிவிடும்.

பாத்திரம் கழுவும் தொட்டி: எலுமிச்சை

பாத்திரம் கழுவும் தொட்டி: எலுமிச்சை

பாத்திரம் கழுவும் தொட்டியில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, தொட்டி பளிச்சென்று இருக்க வேண்டுமானால், எலுமிச்சையைக் கொண்டு தேய்க்க வேண்டும்.

மரப்பொருட்கள்: டீ

மரப்பொருட்கள்: டீ

டீயில் உள்ள டானின் என்ற பொருள் மரப்பொருட்களை பளிச்சென்று மின்னச் செய்யும். எனவே மரப்பொருட்களை டீ கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

பிரியாணி இலை

பிரியாணி இலை

வீட்டில் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாவிட்டால், பிரியாணி இலையை பூச்சி வரும் இடத்தில் வைத்தால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

கப்: வினிகர்

கப்: வினிகர்

கப்களில் உள்ள நீங்கா கறைகளை போக்க, வெள்ளை வினிகர் கொண்டு தேய்த்தால், கப்களில் உள்ள செராமிக் போகாமல், கறைகள் மட்டும் நீங்கும்.

ஃபிரிட்ஜ்: க்ரீன் டீ

ஃபிரிட்ஜ்: க்ரீன் டீ

ஃபிரிட்ஜில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க, க்ரீன் டீயின் இலைகளை ஒரு பௌலில் போட்டு, அதனை ஃபிரிட்ஜில் வைத்தால், துர்நாற்றம் போய்விடும்.

சில்வர் பொருட்கள்: வாழைப்பழ தோல்

சில்வர் பொருட்கள்: வாழைப்பழ தோல்

சில்வர் பொருட்களை வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதனைக் கொண்டு பாத்திரத்தை தேய்த்து கழுவினால், பாத்திரங்கள் மின்னும்.

டாய்லெட்: வோட்கா

டாய்லெட்: வோட்கா

டாய்லெட்டுகளை வோட்கா கொண்டு தேய்த்து கழுவினால், டாய்லெட்டில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

காப்பர் பொருட்கள்: தக்காளி

காப்பர் பொருட்கள்: தக்காளி

காப்பர் பொருட்கள் புதிது போன்று காணப்பட வேண்டுமானால், தக்காளியைக் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்: வெள்ளரிக்காய்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்: வெள்ளரிக்காய்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை வெள்ளரிக்காய் கொண்டு தேய்த்தால், அந்த பாத்திரங்கள் பொலிவோடு மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Foods That Can Clean Your Home

Did you know that there are certain types of foods that can clean your house leaving a perfect aura and beautiful shine too? Take a look at some of the foods to clean your house:
Story first published: Tuesday, March 25, 2014, 17:01 [IST]
Desktop Bottom Promotion