For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் உள்ள லெதர் சோஃபாவை சுத்தம் செய்ய எளிமையான வழிகள்!!!

By Super
|

தோலினால் தயாரிக்கப்பட்ட லெதர் சோஃபாவை வீட்டில் வைத்திருப்பது அழகையும், அற்புதமான பார்வையையும் தரும். ஆனால் வீட்டிலுள்ளவர்களுக்கு இந்த விலையுயர்ந்த சோஃபாக்களை பராமரிப்பதும், சுத்தம் செய்வதும் சற்றே கவலையை ஏற்படுத்தும் விஷயமா க இருக்கும். விலை மற்றும் மதிப்பைப் பொறுத்து, நீங்கள் இந்த சோஃபாவை ஒரு ஈரத்துணி கொண்டு துடைக்கலாம். கடினமாக சுத்தம் செய்யும் கருவிகளை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. அதுவும் சொரசொரப்பான கிளீனராக இருந்தால் அது சோஃபாவை நாசம் செய்து விடும். அம்மோனியாவுடன் வரும் கிளீனர்களை பயன்படுத்துவதை, எந்த நிலையிலும் தவிர்க்கவும். அது உங்களுடைய அழகிய சோஃபாவை நாசம் செய்து விடும்.

நீங்கள் லெதர் சோஃபாவை சுத்தம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது. தோல் பொருட்கள் நீட்சித்தன்மை கொண்டவை என்று உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவற்றில் பல்வேறு நுண்துவாரங்கள் உள்ளன என்பதையும் மனதில் கொள்ளவும். எனவே, இவற்றை சுத்தம் செய்வதற்கு வீட்டிலேயே செய்யப்பட்ட மென்மையான கிளீனரையோ அல்லது அந்த சோஃபா தயாரிக்கப்பட்ட நிறுவனம் பரிந்துரைக்கும் லெதர் கிளீனரையோ நீங்கள் பயன்படுத்துவதே ஒரே வழியாக இருக்கும்.

Ways To Clean Leather Sofas At Home

இவை மட்டுமல்லாமல், நீங்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை சோஃபாவை சுத்தம் செய்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களுடைய பொருளை தொடர்ந்து சுத்தம் செய்வது நல்லது. உங்களுடைய பொருட்களை நீங்கள் தொடர்ச்சியாக சுத்தம் செய்வதில் போதுமான அளவு கவனத்தை செலுத்தவில்லையெனில், அந்த பொருட்களின் மீது குப்பைகள் படிந்து, அழிந்து விடும் அபாயம் ஏற்படும். இங்கே உங்களுடைய அழகிய லெதர் சோஃபாக்களை சுத்தம் செய்து, பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. படியுங்கள், பயனடையுங்கள்.

* லெதர் சோஃபாவை சுத்தம் செய்வதில் முதல் படியாக மென்மையான பிரஷ் கொண்ட வாக்குவம் களீனரை பயன்படுத்தலாம். அந்த கிளீனர் எல்லா குப்பைகளையும் உறிஞ்சி எடுப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

* தண்ணீர் மற்றும் வினிகர் இரண்டும் உங்களுடைய லெதர் சோஃபாiவை சிறந்த வகையில் சுத்தம் செய்ய உதவுகின்றன. இரண்டு திரவங்களையும் சம அளவில் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சோஃபாவை சுத்தம் செய்யுங்கள.

* ஒரு ஈரமான துணியைக் கொண்டு சோஃபாவில் உள்ள அழுக்குகளை துடைக்கலாம். சோஃபா முழுமையும் அந்த துணியைக் கொண்டு துடைத்து விடுங்கள். தேவைப்படும் போது கிளீனிங் கலவையில் அந்த துணியை நனைத்து பயன்படுத்தவும்.

* இறுதியாக, சுத்தமான துணியைக் கொண்டு உங்கள் சோஃபாவை உலர வைக்கவும். ஊதி உலர்த்தும் வகையிலான ப்ளோ ட்ரையர்களை (Blow Dryers) பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், இவற்றால் தோலும் உலர்ந்து விடும்.

* அடுத்த படியாக, இந்த பொருட்களை கன்டிஷனிங்குடன் சுத்தம் செய்யவும். இதற்காக, வினிகர் மற்றும் ஆழிவிதை எண்ணையை 2:1 என் விகிதத்தில் கலந்து பயன்படுத்தவும். இந்த கலவையை சோஃபாவில் போட்டு சிறிது நேரத்திற்கு உலர விடவும்.

* இறுதியாக, அடுத்த நாள் சுத்தமான துணியைக் கொண்டு உங்கள் சோஃபாவை சுத்தம் செய்து பாருங்கள், அது பளபளக்கும்.

உங்களுடைய சோஃபாவில் உள்ள கறைகளைப் நீக்குவது பற்றி கவலைப்படுகிறீர்களா?

உங்களுடைய சோஃபாவில் நிரந்தர மார்க்கரின் கறைகள் இருந்தால், அதன் மீது ஏரோசோல் கரைசலை தெளித்து கறையை நீக்க முயற்சி செய்யுங்கள். மேலும், இயற்கையான முறையில் யூகலிப்டஸ் எண்ணையை பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம். மூன்றாவதாக, சோஃபாவில் கறையுள்ள இடத்தில் ஆல்கஹாலை போட்டும் கறையை நீக்கலாம்.

சோஃபாவில் கிரீஸ் கறைகள் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

உங்களுடைய லெதர் சோஃபாவில் கிரீஸ் கறைகள் இருந்தால், அவற்றின் மீது சமையல் சோடாவை தெளித்து விட்டு சுத்தம் செய்ய முயற்சிக்கலாம். சில மணி நேரங்களுக்குப் பிறகு லெதர் சோஃபாவை சுத்தம் செய்தால், உங்கள் வீட்டு ஹாலில் பளபளக்கும் சோஃபாவை பார்க்கலாம்.

உங்களுடைய சோஃபாவில் அடர்த்தியான கறைகள் உள்ளனவா?

இதோ ஒரு தீர்வு - உங்களுடைய சோஃபாவில் உள்ள அடர்த்தியான கறைகளை நீக்குவது பற்றியும் நீங்கள் வருத்தப் பட வேண்டாம். நீங்கள் தார்தார் (சீமை சுண்ணாம்பு) மற்றும் எலுமிச்சை சாற்றை இதற்காக பயன்படுத்தலாம். இதனை தயார் செய்து, சிறிது நேரம் கழித்து இந்த பசையை கறையுள்ள இடத்தில் தேய்க்கவும். இறுதியாக, கறையுடன் சேர்த்த இந்த பசையை நல்ல துணியைக் கொண்டு துடைத்து விடவும்.

நீங்கள் பயன்படுத்தக் கூடிய வேறு வழிமுறைகள் என்னென்ன?

இவை மட்டுமல்லாமல் வேறு சில வழிமுறைகளிலும் நீங்கள் உங்களுடைய லெதர் சோஃபாவை சுத்தம் செய்யலாம். நெயில் பாலிஷ் சுத்தம் செய்யும் திரவம், பற்பசைகள், பேபி வைப் மற்றும் பல. இந்த ஐடியாக்களை மறைவாக உள்ள இடங்களில் முதலில் முயற்சி செய்து பாருங்கள், அதன் மூலம் வண்ணக்குறைவு ஏற்படுவதை உங்களால் தவிர்கக முடியும்.

English summary

Ways To Clean Leather Sofas At Home

Having a leather sofa at home adds to elegance and gives a soothing look. However, maintaining and cleaning those high-priced sofas at home can prove to be tricky. Here are a few tips to clean leather sofa, which may help you to protect your furniture well. Read and relish.
Story first published: Thursday, November 21, 2013, 18:09 [IST]
Desktop Bottom Promotion