For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க...

By Maha
|

வீட்டை சுத்தம் செய்ய ஆசைப்பட்டால், வீட்டின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அவற்றில் சுத்தம் செய்வதில் அதிக நேரம் ஆகும் இடம் என்றால் சமையலறை தான். பொதுவாக வீட்டிலேயே சமையலறையில் தான் சீக்கிரம் கறைகளானது படிந்துவிடும். ஆகவே அங்கு சுத்தம் செய்ய ஆரம்பித்தால், சமையலறை ஷெல்ப், அடுப்பு மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றில் தான் அதிக கறையானது படிந்துவிடும். எனவே சமையலறையை மட்டும் தினமும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், மறுநாள் சமையலறைக்குள்ளே போக முடியாது.

அதிலும் சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியில் தண்ணீர் செல்லும் வழியில் அடிக்கடி அடைப்புகளானது ஏற்படும். இதனால் தண்ணீரானது தேங்கி, கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் மற்றும் துர்நாற்றம் வீசுவதற்கு காரணம், சிறு உணவுப் பொருட்கள், இலைகள், நூல் போன்றவை குழாய்களில் தங்கி அடைப்புக்களை ஏற்படுத்துவதே காரணம். ஆகவே அத்தகைய அடைப்புக்களை ஏற்படுத்தும் குழாய்களை சுத்தம் செய்வதற்கு எளிமையான சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Ways To Clean A Clogged Kitchen Pipe

வினிகர்

சமையலறை தொட்டியில் தண்ணீர் போகாமல் தேங்கியிருந்தால், அப்போது குச்சி அல்லது கம்பியை விட்டு அடைப்பை நீக்குவதை விட, சிறிது வினிகரை ஊற்றி, 25 நிமிடம் ஊற வைத்து, பின் சூடான நீரை ஊற்றி, பின் கம்பியை விட்டு ஆட்டினால், அடைப்புகளை ஏற்படுத்திய பொருட்கள் முற்றிலும் நீங்கிவிடும். குறிப்பாக கம்பியை விட்டு சுத்தம் செய்ததும், இறுதியில் ஒரு முறை சூடான நீரை ஊற்ற வேண்டும். இந்த முறையை அடைப்புகள் நீங்கும் வரை செய்ய வேண்டும். இதனால் குழாய்களில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

வடிகால் கம்பி

தினமும் சமையலறைத் தொட்டியை வடிகால் கம்பியால் சுத்தம் செய்யலாம். இதனால் தொட்டியில் உள்ள அடைப்புக்களை எளிதில் நீக்கலாம்.

பேக்கிங் சோடா

சுத்தம் செய்யப் பயன்படும் பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடாவைக் கொண்டு, சமையலறைத் தொட்டியை சுத்தம் செய்தால் மிகவும் எளிது. அதற்கு சூடான நீரை குழாயில் ஊற்றி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் பேக்கிங் சோடாவை தூவி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் மீண்டும் சூடான நீரை ஊற்றினால், குழாயில் இருந்த அனைத்து அழுக்குகளும் நீங்கி, அடைப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, குழாய்களில் ஊற்றி, 30 நிமிடம் ஊற வைத்தால், அழுக்குகள் நீங்கி, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இந்த முறையை தினமும் செய்து வந்தால், பாத்திரம் கழுவும் தொட்டியானது சுத்தமாக இருக்கும்.

இவையே அடைப்பு ஏற்படுத்தும் குழாய்களை சுத்தம் செய்வதற்கான சில எளிய வழிகள். வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Ways To Clean A Clogged Kitchen Pipe | சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க...

Once you look into the kitchen sink, your pipe tends to get clogged every other week. So, try these simple remedies to clean a clogged kitchen sink pipe and ease the task.
Story first published: Wednesday, May 22, 2013, 16:17 [IST]
Desktop Bottom Promotion