வினிகரின் வழக்கத்திற்கு மாறான பயன்பாடுகள்!!!

Updated: Saturday, September 21, 2013, 16:35 [IST]
 

வினிகரின் பயன்பாடு நம்மில் அனேக மக்களிடம் கிடையவே கிடையாது. அப்படி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை, முக்கியமாக நம் நாட்டில் மிகவும் குறைவே. ஒரு ேளை உங்களுக்கு ஒரு பெரிய வினிகர் பாட்டில் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை பொதுவாக நாம் என்ன செய்வோம்? வெறும் வாசனைப் பொருளாக மட்டுமே அதை பொதுவாக நாம் பயன்படுத்துவோம். ஆயிரம் வருட பொக்கிஷ பொருளான இந்த நொதித்த நீர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒயின், பீர் போன்ற பானங்கள் கெட்டு போன போது ஏற்பட்ட புளிப்புத் தன்மையால் எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்டது தான் இது.

ஆனால் இந்த வினிகருக்கு, முக்கியமாக வடிநீர் மற்றும் ஆப்பிள் சீடர் வகைகளால் பல வீட்டு பயன்பாடு, அழகு, மருத்துவம் மற்றும் தோட்டக் கலைகளுக்கு பயன்படுகிறது. இப்போது அப்படி வினிகரால் நீங்கள் எதிர்பாராத ஒருசில பயன்பாட்டைப் பற்றி பார்ப்போமா!!!

தரை மற்றும் குளிர் சாதன பெட்டியை சுத்தப்படுத்தலாம்

தண்ணீருடன் வெள்ளை நிற வினிகரை கலந்து, வீட்டின் தரை (மார்பில் மற்றும் கிரானைட் தரைகளில் உபயோகிக்க கூடாது), சமயலறையில் உள்ள குளிர் சாதன பெட்டி மற்றும் அலமாரிகளை துடைக்கலாம். குறிப்பாக குளிர் சாதன பெட்டியில் உணவுகளின் வாசனையை சுத்தமாக நீக்கும் தன்மையை கொண்டுள்ளது.

கறைகளை நீக்குதல்

துணிகளை துவைப்பதற்கு முன், வியர்வையால் ஏற்படும் கறைகளின் மீது சிறிது வினிகரை தெளிக்கவும். இதனால் கறை எளிதில் நீங்கும்.

துணியின் சுருக்கங்களை நீக்கும்

சுருக்கமான துணிகளை இஸ்திரி போட உங்களிடம் இஸ்திரி பெட்டி கைவசம் இல்லையா? அப்படியானால் துணிகளின் மீது கொஞ்சம் வினிகரையும், தண்ணீரையும் தெளித்து பாருங்கள்.

ஆடைகள் மென்மையாகும்

துணிகள் மென்மையாக இருக்க, ஒரு கப்பில் வெள்ளை வினிகரை கொஞ்சம் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின் வாஷிங் மெஷினில் துணிகளை கடைசியாக அலசும் நேரம், இந்த வினிகரை அதனுள் ஊற்றி விடுங்கள். இது தேங்கிய சோப்புகளையும் அகற்றி விடும்.

பூக்களை நற்பதமாக வைக்கும்

பூக்கள் சீக்கிரமே வாடி உதிர்ந்து போகாமல் இருக்க, ஒரு டீஸ்பூன் வெள்ளை வினிகரை தொட்டியில் உள்ள தண்ணீரில் ஊற்றுங்கள். இது பூக்களை நீண்ட நேரம் நற்பதத்துடன் வைத்திருக்கும்.

முட்டைகள் வேகும் போது அதன் கருக்கள் கலங்காமல் இருக்கும்

முட்டையை அவிக்கும் போது, தண்ணீரில் கொஞ்சம் வினிகரை ஊற்றிக் கொள்ளுங்கள். இது முட்டையில் உள்ள மஞ்சள் கரு கலங்காமல் திடமாக வைத்திருக்கும்.

விக்கலுக்கான நிவாரணி

மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டாலும் கூட, விக்கலுக்கு வினிகர் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. அதற்கு விக்கல் வரும் நேரம் ஒரு டீஸ்பூன் வினிகரை குடித்து விட வேண்டும்.

வாசனையை நீக்கும்

சில உணவுகளை சமைக்கும் போது அவை கருகி போய்விட்டால், அந்த வாடை வீட்டில் இருந்து சீக்கிரம் நீங்க, ஒரு பௌலில் நான்கில் மூன்று பங்கு வெள்ளை வினிகரை ஊற்றி, தண்ணீர் கலந்து அந்த அறையில் வைத்து விடுங்கள். இதனால் கருகிய வாடை விரைவிலேயே நீங்கிவிடும்.

முடிக்கு கண்டிஷனர்

அரை டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, முடியை அலசினால் நல்ல பலனை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனால் சிறிது நேரத்திற்கு உங்கள் முடியில் வாடை அடிக்கும். ஆனால் அதற்கு கை மேல் பலன் உள்ளது.

களைகளை அழித்துவிடும்

களைகளை அழிக்க நச்சுத்தன்மையுள்ள விலை உயர்ந்த மருந்துகளை வாங்குவதை விட, வீட்டில் பயன்படுத்தும் வினிகரையே உபயோக்கிகலாம். மேலும் தோட்டக்கலைக்காக வீரியம் அதிகமுள்ள வினிகரும் தயாரிக்கப்படுகிறது. இதில் அசிடிக் அமிலம் 25 சதவீதம் அதிகமாக இருப்பதால், இது இன்னும் சிறப்பாக செயல்படும்.

தொண்டை புண்ணுக்கு நிவாரணி

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, வாயில் ஊற்றி கொப்பளித்தால் தொண்டை புண் சரியாகும். இதனுடன் கொஞ்சம் தேனையும் சேர்த்துக் கொண்டால் பலன் இன்னும் அதிகரிக்கும்.

எறும்புகளை தடுத்து நிறுத்தும்

வீட்டில் சில இடங்களில் சாரை சாரையாக எறும்புகள் படை எடுக்கின்றதா? எரிச்சலூட்டும் இந்த எறும்புகளுக்கு வினிகர் என்றால் ஆகாது. அதனால் வெள்ளை வினிகரை சரி பாதி தண்ணீருடன் கலந்து எறும்பு இருக்கும் இடத்தில் தெளித்தால் போதும்.

தசை வலி/புண்களுக்கு நிவாரணி

உடற்பயிற்சி செய்த பின் தசைகளில் திரளும் லாக்டிக் அமிலத்தை நீக்க ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம். அதிலும் சில டீஸ்பூன் வினிகரை, ஒரு கப் தண்ணீரில் கலந்து ஒரு துணியை, அதில் நனைத்து எடுத்து தசைகளின் மீது 20 நிமிடம் ஒத்தடம் கொடுங்கள்.

ஏர் ப்ரஷ்னர்

வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் வாடைகளை நீக்கும். அதனால் அறையில் பரவிக் கிடக்கும் வாடை அகன்றுவிடும். எனவே அறைகளில் தேவையான இடத்தில் வினிகரை கொண்டு துடைக்கவும் செய்யலாம்.

ஸ்டிக்கரை நீக்க பயன்படும்

வெள்ளை வினிகரை கொஞ்சம் எடுத்து அடுப்பில் அல்லது மைக்ரோ ஓவனில் வைத்து லேசாக சுட வைக்கவும். பின் அதற்குள் ஒரு துணியை நனைத்து எடுத்து ஸ்டிக்கரின் மீது அதை வையுங்கள். இதனால் ஸ்டிக்கர் மெல்ல கரைந்து கையோடு வந்துவிடும். மேலும் இது சுவற்றில் உள்ள வால் பேப்பரையும் கூட நீக்கி விடும்.

மாமிசத்தில் உள்ள பாக்டீரியாவை நீக்கிவிடும்

மாமிசத்தை முதல் நாள் இரவு ஆப்பிள் சீடர் வினிகரில் ஊற வைக்கவும். இது மாமிசத்தை மென்மையாக்கும். மேலும் இது உணவினால் நமக்கு ஏற்படும் நோய்களில் இருந்து காப்பாற்ற, அதிலுள்ள பாக்டீரியாக்களையும் அழித்துவிடும்.

அடைப்பை நீக்கி கழிவு செல்லும் பாதையை சுத்தப்படுத்தும்

அடைப்பட்ட தொட்டியை தலைவலி ஏற்படுத்தும் இரசாயனங்கள் மூலமாக நீக்குவதற்கு பதிலாக, 3/4 கப் பேக்கிங் சோடாவுடன், 1/2 கப் வெள்ளை வினிகரை சேர்த்து உபயோகிக்கலாம்.

பூஞ்சைத் தொற்றை குணப்படுத்தும்

பாதத்தில் உள்ள நகத்தில் படியும் பூஞ்சை தொற்று மற்றும் பொடுகு போன்ற பூஞ்சை தொற்றுக்களை கண்டிப்பாக லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே பாதிக்கப்பட்ட இடங்களின் மேல் வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை தடவி பூஞ்சைகளை அழிக்கலாம்.

காரசாரமான உணவுகளின் காரத்தைக் கட்டுப்படுத்தும்

வீட்டில் ஒரு விருந்து. விருந்தாளிகள் எல்லாம் உணவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நேரம் பார்த்து உணவில் அதிக அளவில் மிளகாய் சேர்க்கப்பட்டு மிகுந்த காரத்துடன் இருந்தால் என்ன செய்ய போகிறீர்கள்? கவலையை விடுங்கள். உங்களுக்கு கை கொடுக்க தான் வினிகர் உள்ளது. அதற்கு ஒரு டீஸ்பூன் வெள்ளை அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை உணவில் சேர்த்தால் போதும், காரம் குறைந்துவிடும்.

துருவை கரைக்கும்

வினிகரில் உள்ள அசிடிக் அமிலம், அயர்ன் ஆக்ஸைடுடன் சேரும் போது உலோக பொருட்களான ஆணி, திருகு, கீல்கள் போன்றவைகளில் பதிந்திருக்கும் துருவை நீக்கும். அதற்கு அவைகளை வினிகர் நிரப்பிய பாத்திரத்தில் முக்கி எடுத்து, பின் அந்த வினிகரால் உலோகம் பாதிப்படையாமல் இருக்க தண்ணீரில் நன்கு அலசினால் போதும்.

Story first published:  Saturday, September 21, 2013, 16:09 [IST]
English summary

Top 20 Unusual Uses Of Vinegar

Here are 20 unusual, thrifty and eco-friendly uses for vinegar that you may not have thought of. Find out this unusual uses of vinegar.
Write Comments

Subscribe Newsletter
Boldsky இ-ஸ்டோர்