For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மண் பொம்மைகளை சுத்தம் செய்யும் சில எளிய வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் மட்பாண்ட பொம்மைகளின் அழகைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை ஆகிய திருவிழாக்களின் போது மட்பாண்ட பொம்மைகளின் விற்பனை உச்சத்தில் இருக்கும் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. திருவிழா தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னர் தான் இந்த பொம்மைகள் நாட்டிலுள்ள கலைஞர்களால் செய்யப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் ஆறுகளில் மூழ்கடிக்கப்பட்டு கரைக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், தங்கள் வீட்டின் பூஜைக்காகவும் மண் பொம்மைகளை வாங்கிப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

பல்வேறு விலைகளிலும், அளவுகளிலும், அற்புதமான வண்ணங்களில் இந்த மண் பொம்மைகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. நமது பாரம்பரிய முறைப்படி ஆற்றங்கரைகளில் மணலை சேகரித்து பண்டிகைக்கு முன்னர் சிலையாக, பொம்மைகளாக செய்வார்கள். அந்த நாட்களெல்லாம் மலையேறி, இப்பொழுது மண் பொம்மைகள் செய்வது வியாபாரமயம் ஆகிவிட்டது.

Tips To Clean Mud Idols

நீங்கள் மண் பொம்மைகளை வாங்கினால், அவற்றை உங்கள் வீட்டு வரவேற்பறையிலோ அல்லது பூஜையறையிலோ ஒரு கலைப்பொருளாக வைத்து விட்டு, அவற்றை எப்படி சுத்தம் செய்வது, பராமரிப்பது என்று அறிய வேண்டும். பொம்மைகள் மேல் அழுக்கு படிவது சாதாரணமான விஷயம் என்பதால், அவற்றை சுத்தம் செய்து பராமரிக்க சில வழிகளை இங்கே கொடுத்துள்ளோம். இந்த குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் சிலைகளை சுத்தம் செய்து, பயனடையுங்கள்.

* மார்பிள் மற்றும் பித்தளை சிலைகளை சுத்தம் செய்வது போலவே, மண் சிலைகளையும் சுத்தம் செய்து விடலாம் என்று நினைத்தால் அந்த நினைப்பை விட்டு விடுங்கள்! மட்பாண்ட சிலைகளை சோப் அல்லது டிடர்ஜன்ட் போட்டு சுத்தம் செய்யவும் கூடாது. ஏனெனில், அவை மட்பாண்டங்களின் துளைகளில் புகுந்து கொண்டு அவற்றை வீணாக்கி விடும்.

* கடினமான தூரிகை மற்றும் சுடு தண்ணீர் கொண்டு மண் சிலைகளை சுத்தம் செய்யலாம். மண் சிலையின் அனைத்து பகுதிகளையும் தூரிகை கொண்டு சுத்தம் செய்யுங்கள். ஆனால், அதிக அழுத்தம் தர வேண்டாம். சிலையின் வளைவான மற்றும் வட்டமான முனைகளில் தூரிகையை மென்மையாக பயன்படுத்தவும். இதன் மூலம் குப்பைகள் பொம்மைகளில் படிவதை தவிர்க்க முடியும்.

* பொம்மைகளில் படிந்துள்ள கடினமான கறைகளை நீக்க சமையல் சோடாவையும் பயன்படுத்தலாம். சமையல் சோடாவில் நனைக்கப்பட்ட துணியைக் கொண்டு மண் பொம்மைகளை சுத்தம் செய்வதும் ஒரு வழிமுறையாகும்.

* சமையல் சோடா மற்றும் தண்ணீரை சம அளவில் சேர்த்து சுத்தம் அச்சுகளை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சூரிய வெளிச்சத்தில் சிலமணி நேரங்களுக்கு வைத்து காய வைக்க வேண்டும். இதுவும் மண் பொம்மைகளை சுத்தம் செய்ய உதவும் ஒரு வழிமுறையாகும்.

* மண் பொம்மைகளை சலவை சோடாவிலும் கூட சுத்தம் செய்யலாம். 10 மடங்கு தண்ணீருடன், 1 பங்கு சலவை சோடாவை கலந்து, பொம்மைகளின் மேல் உள்ள கறைகளை சுத்தம் செய்யலாம். இந்த டிப்ஸ்கள் மண் பொம்மைகளை சிறப்பாக சுத்தம் செய்யும் என்பதை நம்பலாம்.

* மண் பொம்மையில் உப்பு படிந்திருந்தால் வினிகர் மற்றும் ஆல்கஹாலை அவற்றின் மீது தெளித்து சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பின்னர் சூரிய வெளிச்சத்தில் அவற்றை காய வைக்க வேண்டும்.

* மண் பொம்மைகளை சூட்டின் மூலம் துப்புரவு செய்ய முடியும்.

* பொம்மைகள் சுத்தமாகவும், வறட்சியாகவும் இருக்கும் போது, அவற்றை தூரிகை கொண்டு சுத்தம் செய்யவும். பின்னர் வெப்பத்தில் வைத்து இலேசாக சூடுபடுத்தவும். இதுதான் மண் பொம்மைகளை துப்புரவாக்கும் வழிமுறையாகும்.

* நீங்கள் ஒவ்வொரு வழிமுறையை பயன்படுத்தி சுத்தம் செய்த பின்னர் பொம்மைகளை முழுமையாக காய வைக்கவும். அதே நேரம், மிகவும் அதிகமான சூட்டில் பொம்மைகளை வைத்தால், அவற்றில் வெடிப்புகள் உண்டாக்கி விடும்.

* எனவே பொம்மைகளை சரியான பதத்தில் வைத்து சூடாக்க முயற்சி செய்யுங்கள். குப்பைகள் அதிகம் படியாத இடங்களில் பொம்மைகளை வைக்கவும். அவற்றை சுத்தம் செய்யும் போது மென்மையான துணிகளை பயன்படுத்தவும்.

இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டு மண் பொம்மைகளை சுத்தம் செய்தால், அவை பளிச்சென உங்கள் முன் சிரிக்கும்.

English summary

Tips To Clean Mud Idols

If you have plans to purchase mud idols and make them a part of your prayer rooms or to make it a piece of art in your living room, it is necessary you learn how to clean and maintain them. It is usual for the dirt to accumulate on articles, here are a few ways you can clean mud idols. Read the cleaning tips and benefit.
Story first published: Sunday, December 8, 2013, 13:04 [IST]
Desktop Bottom Promotion