For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியில் வீட்டை சீரமைப்பதற்கான சில டிப்ஸ்...

By Super
|

இந்து மதத்தில் கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு பண்டிகைகளையும், அதன் சிறப்பு அறிந்து தொன்று தொட்டு பழகி வந்த வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிலும், குறிப்பாக தீபாவளி நன்னாள் பெரும் சிறப்பை பெற்றது. தீப ஒளி கொண்டு கொண்டாடும் இந்நாள் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் தீப ஒளியேற்றி வைக்கும் என பலர் நம்புகின்றனர். அதனால் தான் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இனிப்புகளை பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி அன்று இரவு லட்சுமி தேவியானவள் சுத்தமாக இருக்கும் இல்லங்களில் பொருள் வளத்தையும், செழுமையையும் தருவதற்கு நமது வீட்டில் குடிப் புகுவாள். இதனை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? ஆனால் இதற்கு முதன்மையாக நமது இல்லம் தூய்மையாக இருக்க வேண்டும். அதனால், துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யத் துவங்கவும். அதிலும் கீழ்வரும் வழிகள் உங்கள் இல்லத்தை புதிதாக மாற்ற உதவும்.

Tips to revamp your house this Diwali

தேவையற்ற பொருட்களை நீக்குதல்:

தேவைப்படாத துணிமணிகள், பாத்திரங்கள், பழைய தினசரி நாளிதழ்கள், பழைய திரைச்சீலைகள், மற்றும் வேண்டாத பொருட்கள் அனைத்தையும் நீக்குவதற்கு இதுதான் சரியான சமயம் ஆகும். ஆகவே இல்லங்களின் ஓரங்களில் தேங்கியிருக்கும் பொருட்களையும் நீக்கி விடவும். இல்லாவிட்டால், அந்த பொருட்களை தானமாக கொடுத்து, உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யவும். பர்னிச்சர் மற்றும் பூந்தொட்டிகள் கொண்டு வீட்டை அலங்கரிக்கவும்.

புது மரச்சாமான்கள் நிறுவுதல்:

திரைச்சீலைகளை பார்த்து தேர்ந்தெடுக்கவும். அதன் நிறங்கள் எதிர்மறையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அதிலும் சுவர்கள் அடர் நிறங்களான ஊதா, கருஞ்சிவப்பு அல்லது பச்சை நிறங்களாக இருந்தால், வெளிர் நிறங்கொண்ட திரைச்சீலைகளை வாங்கவும். அதுவும் பின்னல் இல்லாத வெள்ளை அல்லது பட்டன் சாட்டின் வகைகளை உபயோகிக்கலாம். இரண்டுமே அழகான தோற்றத்தை அளிக்கும். அதுமட்டுமின்றி நிரந்தரமாக இருக்கும் மரச்சாமான்களை மேலும் அழகுப்படுத்த புது மெத்தைகளை வாங்கலாம். பெரும்பாலான வார்னிஷிங் கடைகளில் அந்தந்த பருவத்திற்குரிய விலைகளில் கிடைக்கும். மேலும் இல்லம் வெதுவெதுப்பாகவும், வசதியாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். முக்கியமாக ஷிம்மர் பொருட்களை தவிர்க்கவும்.

படுக்கை அறையை சீரமைத்தல்:

படுக்கை அறையை புது மெத்தை விரிப்பால் சீரமைக்கவும். அது வெறும் வெள்ளை நிறத்தில் இருந்தால், அதனை பல வண்ணங்களாக மாற்ற இதுவே தருணமாகும். படுக்கை அறையில் சிறு சோபாக்கள் இருந்தால், அதன் மெத்தையை மாற்றுங்கள். அதிலும் அது மெத்தை விரிப்பான் நிறத்தோடு ஒத்து இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

உங்கள் பழைய போர்வைகள் பலவண்ணங்களில் உள்ளதா? இல்லை என்றால், கடைக்கு சென்று சில போர்வைகளை வாங்கி வரவும். பளிச்சிடும் நிறங்களான சிவப்பு, கருநீலம், பச்சை, மஞ்சள், மற்றும் ஆரஞ்ச் நிறங்களை தேர்வு செய்யுங்கள். அதனை உங்கள் ஹாலின் மையப்பகுதி டேபிளின் அடியில் வைத்தால் உங்கள் அறை பிரகாசிக்கும்.

கலைமயமாக்குதல்:

கலை ஆர்வம் உள்ளவர்களிடம் நிறைய கலைப் பொருட்கள் இருக்கும். அவை எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் காட்சியில் வைக்க முடியாது. ஆனால் அந்த பொருட்களை காட்சிக்கு வைப்பதற்கு இதுவே தருணம். மேலும் அதனை அடிக்கடி மாற்றியமைத்தால் மிகவும் சிறந்தது. குறிப்பாக வீட்டில் ஒரு சில இடங்களில் மட்டும் கலைப்பொருட்களை வைத்திருப்போம். அவற்றை மட்டும் நமது கலை நயத்திற்கு ஏற்றவாறு அடிக்கடி மாற்றியமைக்கவேண்டும்.

ஒருசில எதிர்மறைகள்:

இல்லத்தில் எந்தெந்த இடங்களில் எதிர்மறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட வேண்டும். விண்டேஜ் பொருட்களை பட்டுடன் சேர்த்து பொருத்துங்கள். உதாரணமாக, மோனோடோன் தட்டின் ஓரத்தை பளிச்சிடும் வண்ணத்தை கொண்டு அலங்கரித்தால், அழகான எதிர்மறையாக காட்சியளிக்கும். மேலும் மங்கலான அமைப்பிற்கு பட்டு உபயோகித்தல் மற்றும் சாதாரண அமைப்பிற்கு பூப்போட்ட வேலைப்பாடுகள் உபயோகித்தல் போன்றவைகளை மேற்கொள்ளலாம்.

பாரம்பரிய முறையை செயல்படுத்துதல்:

சுவர்கள் மற்றும் விளக்குகளை அலங்கரிக்க பழங்கால மர வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள், பட்டு வேலைப்பாடு கொண்ட பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தவும். இவ்வகை பொருட்கள் பண்டிகைக் கால சிறப்பு வாய்ந்தவைகளாகும். மேலும் ஹாலில் பழைய பட்டு புடவைகளை திரைச்சீலைகளாக உபயோகிக்கலாம்.

English summary

Tips to revamp your house this Diwali

They say that on the night of Deepavali, goddess Lakshmi (the goddess of wealth) makes her way to all the clean houses to shower wealth and prosperity. So, pick up the broom and get started to clear the way for her. The following steps will give your house a brand new look.
 
Story first published: Thursday, October 31, 2013, 20:32 [IST]
Desktop Bottom Promotion