For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தரை விரிப்புகளில் உள்ள கறைகளை நீக்க சில டிப்ஸ்...

By Maha
|

வீட்டை அழகாக அலங்கரிக்கப் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் தரை விரிப்புகள். அத்தகைய தரை விரிப்புகள் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு ஸ்டைலில் வந்துள்ளன. இந்த தரை விரிப்புகள் அழகுக்காக மட்டுமின்றி, நடக்கும் போது பாதுகாப்பாகவும் இருக்கும். அவ்வாறு அலங்கரிக்க அதிக விலை கொடுத்து வாங்கும் தரை விரிப்புகளில் ஏதேனும் கறைகள் படிந்தால், அதனை சுத்தம் செய்வது என்பது கடினமாகிவிடும்.

ஏனெனில் கெமிக்கல் கொண்டு தரைவிரிப்புகளை சுத்தம் செய்தால், அதன் நிறம் மங்கிவிடுமோ அல்லது தரம் குறைந்துவிடுமோ என்ற பயம் இருப்பதால் தான். ஆனால் அத்தகைய தரை விரிப்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே எளிதில் சுத்தம் செய்யலாம். மேலும் இத்தகைய இயற்கைப் பொருட்கள் அதில் உள்ள கறைகளை மட்டுமின்றி, அதில் தங்கியிருக்கும் கிருமிகளையும் அழித்துவிடும். குறிப்பாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, கறை இருந்தாலும் இல்லாவிட்டாலும், தரை விரிப்புகளை சுத்தம் செய்து வருவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

சரி, இப்போது கறை படிந்த தரை விரிப்புகளை சுத்தம் செய்ய பயன்படும் இயற்கைப் பொருட்கள் மற்றும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிஷ் வாஷ் டிடர்ஜென்ட்

டிஷ் வாஷ் டிடர்ஜென்ட்

வெதுவெதுப்பான தண்ணீரில் நீர்ம நிலையில் உள்ள டிஷ் வாஷ் டிடர்ஜென்ட்டை சேர்த்து கலந்து, அதனை கறை உள்ள இடத்தில் ஸ்பாஞ்ச் மாப் கொண்டு தேய்த்து, பின் வாக்யூம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை கறை போகாவிட்டால், கறை நீங்கும் வரை இச்செயலை தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

தரை விரிப்புகளில் இரத்தமோ அல்லது ஒயின் கறைகளோ படிந்தால், அப்போது அதனை ஹைட்ரஜன் பெராக்ஸைடில் 1 நிமிடம் ஊற வைத்து எடுத்தால், கறைகளை போய்விடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

கறை படிந்துள்ள தரை விரிப்புகளின் மேல் சிறிது பேக்கிங் சோடாவை தூவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் ஒரு வாளியில் தண்ணீர் ஊற்றி, அதில் டிஷ் வாஷ் நீர்மம் மற்றும் வெள்ளை வினிகர் கலந்து கொள்ள வேண்டும். பின்பு வாக்யூம் க்ளீனர் கொண்டு அந்த பொடியை உறிஞ்சி, பின் தயாரித்து வைத்துள்ள நீர்மத்தை தெளித்து, அதன் மேல் ஒரு மைக்ரோபைபர் துணியை விரித்து, அந்த துணி ஈரத்தை முற்றிலும் உறிஞ்சியப் பின், குளிர்ந்த நீரில் நனைத்த ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால், கறைகள் அகன்றுவிடும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

தரை விரிப்புகளில் காபி கறை படிந்தால், உடனே பேப்பர் டவல் கொண்டு அந்த இடத்தில் உள்ள காபியை உறிஞ்சி பின், டிஷ் வாஷ் டிடர்ஜென்ட்டில் வினிகர் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவையை கறை படிந்த இடத்தில் தெளித்து, உடனே பேப்பர் டவல் கொண்டு அதனை உறிஞ்சி எடுத்தால், கறைகள் உடனே போய்விடும்.

க்ளப் சோடா (Club Soda)

க்ளப் சோடா (Club Soda)

வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து, வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, மென்மையான பேஸ்ட் போல் செய்து, அதனை கறை படிந்த தரை விரிப்புகளில் தெளித்து, டூத் பிரஷ் கொண்டு தேய்த்து, பின் கிளம் சோடாவை கறை படிந்த இடத்தில் தெளித்து, 5 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும்.

சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர்

சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர்

சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடரை ஒன்றாக கலந்து, அதில் சிறிது பிரியாணி இலையை பொடி செய்து சேர்த்து, அதனை ஒரு மூடி கொண்ட ஜாடியில் போட்டு நன்கு கலந்து, பின்பு அந்த கலவையை கறை படிந்த இடத்தில் தூவி, காலையில் வாக்யூக் கொண்டு சுத்தம் செய்தால், கறைகள் எளிதில் வெளிவந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Remove Stains From Carpets

Carpets are comfortable and appealing and add a stunning appearance to your home but they can be expensive and sometimes hard to maintain. Here are some tips to remove stains from your beautiful carpets and maintain them.
Story first published: Monday, October 7, 2013, 16:24 [IST]
Desktop Bottom Promotion