For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரப்போகும் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா? முதல்ல இத படிங்க...

By Maha
|

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்றவை வரப்போகிறது. அனைவரும் வீட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்க ஆரம்பிப்போம். அதே சமயம் இது குளிர்காலம் என்பதால், குளிர்காலத்திற்கு ஏற்றவாறும் சுத்தப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி பெரும்பாலானோருக்கு வீட்டை சுத்தப்படுத்தும் வேலை என்பது பிடித்ததாக இருக்கும். அப்படி வீட்டை சுத்தப்படுத்த முயலும் போது, வேலையானது எளிமையாக இருக்க வேண்டுமானால், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள சில டிப்ஸ்களை மனதில் கொண்டு சுத்தம் செய்தால், மிகவும் ஈஸியாக வீட்டை சுத்தம் செய்யலாம்.

அதுமட்டுமல்லாமல், இது குளிர்காலம் என்பதால், மற்ற பருவ காலத்தை விட, இக்காலத்தில் சுத்தம் செய்வது என்பது சற்று கடினைமாக இருக்கும். அதிலும் இந்த சீசனில் வீட்டில் சூரிய வெப்பமானது வீட்டில் வருவது குறைவாக இருப்பதுடன், ஈரப்பசை அதிகம் இருப்பதால், தூசிகளானது படிந்து, லேசாக தட்டினால் கூட செல்லாமல் அப்படியே இருக்கும்.

எனவே இந்த குளிர்காலத்தில் வீட்டை ஈஸியாக சுத்தம் செய்வதற்கு ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீலிங் ஃபேன்

சீலிங் ஃபேன்

வீட்டை சுத்தம் செய்யும் போது நிச்சயம் ஃபேனை சுத்தம் செய்வோம். அப்படி அதனை சுத்தம் செய்யும் போது, சுத்தமான துணியை எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், ஃபேனில் உள்ள அழுக்கானது உடனே நீங்கிவிடும். மேலும் இதனால் வீட்டில் நறுமணம் வீசும்.

டைல்ஸ்

டைல்ஸ்

வீட்டின் தரை டைல்ஸாக இருந்தால், பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்நீரினால் வீட்டை துடைத்தால், டைல்ஸில் உள்ள கடுமையான கறைகளும் எளிதில் நீங்கும்.

ஜன்னல் கதவுகள்

ஜன்னல் கதவுகள்

ஜன்னல் கதவுகளின் இடுக்குகளில் தூசிகளானது படிந்து, அவ்வளவு எளிதில் வெளியே வராதவாறு இருக்கும். ஆகவே அப்போது ஸ்பாஞ்ச்சை நீரில் நனைத்து, லேசாக அழுத்தி தேய்த்தால், தூசிகள் எளிதில் வெளிவந்துவிடும்.

நாற்காலிகள்

நாற்காலிகள்

எப்போதுமே பண்டிகை என்றால், தரை, ஜன்னல் போன்றவற்றை மட்டும் சுத்தம் செய்யாமல், நாற்காலிகளையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் மரத்தால் ஆன பொருட்களாக இருந்தால், அதனை வெறும் ஈரமான துணியால் துடைத்தாலே போதும்.

திரைச்சீலைகள் மற்றும் இதர உறைகள்

திரைச்சீலைகள் மற்றும் இதர உறைகள்

ஹாலில் இருக்கும் திரைச்சீலைகள் மற்றம் இதர உறைகளை வாஷிங் மெஷினில் போடும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது வினிகரை ஊற்றினால், அவற்றில் உள்ள கறையானது சீக்கிரம் வெளிவந்துவிடும்.

குளியலறையின் தரை

குளியலறையின் தரை

குளியலறையானது அதிகம் ஈரப்பதத்துடன் இருப்பதால், அங்கு பூஞ்சைகள் வர வாய்ப்புள்ளது. ஆகவே குளியலறையின் தரையை சுத்தம் செய்யும் போது, எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்தினால், தரையில் உள்ள கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் அழிந்துவிடும்.

மின்சார பொருட்கள்

மின்சார பொருட்கள்

வீட்டில் உள்ள மின்சாரப் பொருட்களான ஃப்ரிட்ஜ், மைக்ரோ வேவ் மற்றும் பார்பிஃக்யூ க்ரில் போன்றவற்றை, மைல்டு கெமிக்கல் உள்ள பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பால்கனி

பால்கனி

வீட்டின் பால்கனியை தினமும் தவறாமல் பெருக்குவதோடு, தேவையில்லாத பொருட்களை பால்கனியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

கதவுகள்

கதவுகள்

நிச்சயம் வீட்டை சுத்தம் செய்யும் போது, கதவுகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். அதுவும் வார்னிஷ் செய்ய வேண்டும். அதற்கு முதலில் கதவுகளை ஈரமான ஸ்பாஞ்சு கொண்டு, அதில் உள்ள தூசிகளை துடைத்து எடுத்து விட வேண்டும்.

பழைய செடிகள்

பழைய செடிகள்

வீட்டின் தோட்டத்தில் செடிகள் இருந்தால், அவற்றை ட்ரிம் செய்யலாம் அல்லது அது மிகவும் பழையதாகி காணப்பட்டால், அவற்றை நீக்கிவிட்டு, வீட்டிற்கு பொருத்தமாக இருக்கும் சில புதிய செடிகளை வாங்கி வளர்க்கலாம்.

குழாய்

குழாய்

வீட்டில் உள்ள இரும்பு குழாய்கள் மிகவும் பழையது போல் காணப்பட்டால், அதனை எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகர் கொண்டு சுத்தம் செய்தால், அதில் உள்ள துருவானது போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Prepare Your Home For The Upcoming Festivals

To prepare your home for the upcoming festivals, Boldsky shares with you some of the ways in which you can clean your house to make it sparkle. Take a look at these home improvement tips:
Story first published: Thursday, December 12, 2013, 15:32 [IST]
Desktop Bottom Promotion