For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின்சார டோஸ்டரை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

By Super
|

காலையில் அலுவலகம் கிளம்பும் போது, நிமிடங்களில் உணவை தயாராக்குவதற்கு டோஸ்டர் உதவுகின்றது. ஆனால் நீங்கள் ஒன்றை மறந்து விடுகின்றீர்கள். சமைத்தவுடன் வேலை முடிந்தது என்று நினைகின்றீர்கள். ஆனால் அதற்கு பின் தான் வேலையே உள்ளது.

எப்படியெனில் டோஸ்டரில் தங்கியிருக்கும் துணுக்குகளை சுத்தம் செய்வதை பற்றி நீங்கள் நினைப்பதில்லை. ஆனால் அதை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி நீங்கள் நினைக்க வேண்டும். இல்லையென்றால், நாளடைவில் பெரிய அளவில் உங்களுக்கு செலவு வைத்துவிடும். மேலும் துருப்பிடிக்க நேர்ந்தால், அவை நம்மையும் அறியாமல் உணவோடு வயிற்றிற்கு சென்றுவிடும். பின்பு மருத்துவமனைக்கு அலைய வேண்டியது தான். இப்போது இங்கே அதை பராமரிக்கும் விதிகளை பற்றி காண்போம்.

Tips To Clean Your Electric Toaster

எஞ்சிய உணவு துணுக்குகள் டோஸ்டரை வீணாக்கிவிடும். இதனை கவனிக்காமல் விட்டால், டோஸ்டரில் தீப்பொறி ஏற்பட்டு விபத்துக்கு உள்ளாக நேரிடும். எனவே, இது போன்ற ஒரு சூழ்நிலையை தவிர்க்க, அதை காலப்போக்கில் சீராக்க முயல வேண்டும். அது சுத்தமாக இருக்கின்றதா என்பதை கண்டரிய வேண்டும். ஒவ்வொரு முறை டோஸ்ட் செய்த பின்னரும், டோஸ்டரை சுத்தம் செய்ய வேண்டும். எல்லா டோஸ்டரிலும் ஒரு பக்கத்தில் உள்ள தட்டை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

டோஸ்டரை சுத்தம் செய்வது என்பது, நீங்கள் அதை எத்தனை முறை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை பொறுத்து உள்ளது. எனினும் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது, அதை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு கீழ்க்கூறிய டிப்ஸை பயன்படுத்தி, உங்கள் டோஸ்டரை சுத்தம் செய்யுங்கள்.

அணைத்து வையுங்கள்: டோஸ்டரை சுத்தம் செய்ய தொடங்கும் முன்னர், மிக முக்கியமான ஒன்று அதை அணைத்து வைக்க வேண்டும். பின்னர் அதை பிரித்து செய்தித்தாளின் மீது வைத்து, அதில் உள்ள துணுக்குகளை ஒன்றாக வெளியே எடுக்க வேண்டும்.

ரொட்டித்துணுக்கு தட்டை சுத்தம் செய்யுங்கள்: பெரும்பாலான டோஸ்டர்களின் கீழே, ஒரு நீக்கக்கூடிய தட்டு பொருத்தப்பட்டிருக்கும். இதில் உணவு துணுக்குகள் இருக்கும். ஈரமான துணி அல்லது பஞ்சு கொண்டு இந்த தட்டினை சுத்தம் செய்ய வேண்டும்.அதிலும் வினிகர் கொண்டு தட்டை துடைப்பது கூடுதல் பலன் தரும். அப்படி அந்த தட்டு இல்லையென்றால், டோஸ்டரை தலைகீழாக பிடித்து தட்டினால், துணுக்குகள் கொட்டிவிடும். மேலும் சிறிய பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.

உப்பு: டோஸ்டரை சுத்தம் செய்ய கல் உப்பை பயன்படுத்தலாம். கிரீஸ் தாள் கொண்டு டோஸ்டரின் பிளவு பகுதிகளை சுத்தம் செய்யுங்கள். இதனால் சிறிய பூச்சிகள் டோஸ்டரில் தங்காமலும், டோஸ்டர் துருபிடிக்காமலும் இருக்கும். பிறகு உப்பை துடைத்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவே டோஸ்டரை பாதிக்கக்கூடும். அதற்கு தான் கல் உப்பை பயன்படுத்த வேண்டும்.

டோஸ்டரின் வெளியே சுத்தம் செய்யவும்: டோஸ்டரின் வெளியே சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகின்றது. அதற்கு ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரை கலந்து, அதில் ஒரு துணியை நனைத்து டோஸ்டரை துடைக்கவும். இதனால் கறைகளை சுத்தமாக துடைக்க முடியும். ஒருவேளை கடுமையான கறை இருந்தால், மெதுவாக துடைக்க வேண்டும். குறிப்பாக அதற்கு கொஞ்சம் சோடா பைகார்பனேட் அல்லது பேக்கிங் சோடா பயன்படுத்தவும். கீறல்கள் இல்லாமல் துடைக்க வேண்மெனில், ஒரு மென்மையான ஸ்பாஞ்ச் கொண்டு துடைக்கவும்.

டோஸ்டரை சுத்தமாக வைத்திருப்பது, டோஸ்டரை நீண்ட நாள் உழைக்க உதவுகின்றது. டோஸ்டரில் துணுக்குகள் தங்காமலும், துரு பிடிக்காமலும், குப்பை சேராமலும் பார்த்து கொள்வது நல்லது.

English summary

Tips To Clean Your Electric Toaster

How often you need to clean your toaster depends on the how much you use it. However you should clean it at least once in week. Follow these tips and keep your toaster free of dirt and debris.
Desktop Bottom Promotion