For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்ல பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரம் இருக்கா? அப்ப இப்படி சுத்தம் செய்யுங்க...

By Maha
|

கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் சாண்டா கிளாஸை வரவேற்க மிகவும் அழகாக வீட்டை அலங்கரித்துக் கொண்டிருப்போம். அப்படி அலங்கரிக்கும் போது, ஒவ்வொரு வருடமும் புதிய கிறிஸ்துமஸ் மரத்தை வாங்க முடியாது. ஆகவே நிறைய மக்கள், முந்தைய வருட கிறிஸ்துமஸ் மரத்தை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி, வீட்டின் ஒரு பகுதியில் பத்திரமாக வைத்திருப்பார்கள்.

அப்படி வீட்டில் வைத்துள்ள பழைய கிறிஸ்துமஸ் மரத்தை மீண்டும் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால், அந்த மரத்தை சுத்தப்படுத்துவது தான். ஆம், கிறிஸ்துமஸ் மரத்தில் உள்ள இலைகளில் தூசிகளானது தங்கிக் கொண்டு, போகாமல் இருக்கும். எனவே பலர் அந்த மரத்தை தண்ணீர் ஊற்றி நன்கு தேய்த்து கழுவி விடலாம் என்று திட்டம் தீட்டியிருப்பார்கள். ஆனால் அப்படி செய்தால், அந்த மரம் தான் பாழாகும். பின் புதியது தான் வாங்க வேண்டும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை அந்த தூசிப் படிந்த பழைய கிறிஸ்துமஸ் மரத்தை எப்படியெல்லாம் சுத்தம் செய்தால், தூசிகள் எளிதில் நீங்குவதோடு, புதிது போன்று மின்னும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி சுத்தம் செய்து, பின் கிறிஸ்துமஸ் மரத்தை அழகாக அலங்கரியுங்கள்.

Tips To Clean An Artificial Christmas Tree

ஈரமான பஞ்சுருண்டைகள்

கிறிஸ்துமஸ் மரத்தில் தூசிகளானது கிளைகளின் முனைகளில் தங்கிக் கொண்டிருக்கும். ஆகவே அப்படிப்பட்ட தூசிகளை நீரில் நனைத்த ஈரமான பஞ்சுருண்டையைக் கொண்டு துடைத்து எடுத்து, பின் சுத்தமான துணியால் துடைத்து எடுத்தால், தூசிகளானது முற்றிலும் வெளிவந்துவிடும்.

வாக்யூம் க்ளீனர்

வீட்டில் உள்ள பழைய கிறிஸ்துமஸ் மரம் பெரியதாக இருந்தால், அதில் உள்ள தூசிகளை வாக்யூம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். அதிலும் மரத்தின் கீழ் பகுதியில் சுத்தம் செய்யும் போது, வாக்யூம் க்ளீனரில் பிரஷ்ஷைப் பொருத்திக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக வாக்யூம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யும் போது மிகுந்த பொறுமை தேவை. அதிலும் கிளைகளை சுத்தம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிளைகளானது வாக்யூம் க்ளீனரினுள் சென்று, மிஷினை பாழாக்கிவிடும்.

சோப்புத் தண்ணீர்

மேற்கூறியவற்றால் மரத்தில் இருந்து தூசிகள் நீங்காவிட்டால், மைல்டு சோப்பு அல்லது நீர்மத்தை நீரில் கலந்து, அந்த நீரை சுத்தமான காட்டன் துணியில் நனைத்து, துடைத்து எடுக்கலாம். இதனால் கிறிஸ்துமஸ் மரத்தில் தங்கியுள்ள நீங்கா தூசிகளும் எளிதில் நீங்கும். முக்கியமாக கெமிக்கல் கொண்டு மரத்தை சுத்தம் செய்யும் போது, அதிக வீரியம் உள்ள கெமிக்கல்களை பயன்படுத்தினால், மரத்தின் நிறமானது மங்கும். ஆகவே பயன்படுத்தும் பொருட்களில் கவனம் தேவை. மேலும் சுத்தம் செய்த பின்னர், இறுதியில் ஈரமான துணி கொண்டு துடைத்து விட்டு, பின் ஈரமில்லாத துணியால் துடைத்துவிட வேண்டும். இதனால் மரமானது புதிது போன்று மின்னும்.

English summary

Tips To Clean An Artificial Christmas Tree

Here are some of the best tips to clean an artificial Christmas tree and make it look like new. Make sure you remove all the decorating items from the tree before cleaning.
Story first published: Wednesday, December 11, 2013, 16:52 [IST]
Desktop Bottom Promotion