For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளிங்குத் தரைகளை பராமரிக்க சில டிப்ஸ்...

By Super
|

வீடு கட்டுவதே ஒரு கலை என்பார்கள். இப்பொழுதெல்லாம் சிறிய அளவில் வீடு கட்டினாலும் கூட எடுப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்றே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அவ்வாறு வீட்டை அழகாய் அலங்காரப்படுத்த பயன்படுத்துவதே பளிங்கு கற்கள். வீட்டின் உள்ளரங்கில் பளிங்குகளைப் பயன்படுத்தி அலங்காரம் செய்வது, வீட்டுக்கு அழகு சேர்க்கிறது.

அந்த மாதிரி வீட்டில் தரை மற்றும் அலங்கார கட்டமைப்புகளுக்கு பளிங்குகளைப் பயன்படுத்தும் அளவுக்கு பணத்தை செலவு செய்திருப்பவராயின், அந்த பளிங்கு கற்களின் அழகை பராமரிக்க சிறிது கவனம் எடுக்க வேண்டும். இப்படியான பளிங்கு கற்களை வீட்டில் பதித்து இருப்பவர்களுக்கு, இதோ சில முன் எச்சரிக்கைகள்...

Take care of your marble flooring

- அமிலத்தன்மை நிறைந்த திரவம் அல்லது உணவுகள், பளிங்கு கற்களில் கொட்டி விட்டால், அது பளிங்கு கற்களை பாதித்து மந்தமான தடயங்களை ஏற்படுத்தி விடக்கூடும். அம்மாதிரி தடயங்கள் ஒரு நாணயம் அளவு பெரியதாக அல்லது பல பளிங்கு ஓடுகள் மீது பரவக் கூடும். எனவே பழச்சாறு, மது, டீ போன்றவை பளிங்கு தரையில் கொட்டி விட்டதென்றால், அந்த கரையை ஹைட்ரஜன் பெராக்சைடு (Hydrogen Peroxide) உடன் அம்மோனியா (Ammonia) கலந்த கலவையில் மூழ்கி எடுத்த துணியை கொண்டு துடைக்க வேண்டும். பளிங்கு மீண்டும் அதன் பளபளப்பு தன்மையை பெறும் வரையில் துடைக்க வேண்டும்.

- கரைகள் மற்றும் தடயங்கள் ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணம் அமிலத்தன்மை நிறைந்த சோப்புத் தூளைப் பயன்படுத்தி தரையை கழுவி விடுவதாகும். ஆகவே தரையை சுத்தப்படுத்த வினிகர் அல்லது அமிலத்தன்மை நிறைந்த பொருட்களைப் பயன்படுத்த கூடாது. ஏனெனில் பளிங்கு மென்மையானது. எனவே pH சமநிலையில் உள்ள திரவங்கள் கொண்டே பளிங்கு கற்களை மென்மையாக சுத்தப்படுத்த வேண்டும். மேலும் மலிவில் கிடைக்கக்கூடிய சுத்தப்படுத்தும் திரவங்களை கொண்டு தரையை சுத்தப்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. அவ்வாறு செய்தால் பளிங்குகள் அதன் பளபளப்பை நிரந்தரமாக இழந்துவிடும்

- பளிங்கு தரை ஓடுகள் சிறிய துகள்களை உடையவை. உணவு, தரையில் வைக்கும் பானைகள், உலோகத்தால் ஆன நாற்காலியின் கால்கள், எண்ணெய், மை போன்றவை பளிங்கு கற்களின் நிறத்தை மங்க செய்துவிடும். சமையல் எண்ணெய் மற்றும் க்ரீஸ் போன்ற பொருட்களும் பளிங்கு கற்களின் நிறத்தை மங்க செய்து, கறைகளை ஏற்படுத்திவிடும். எனவே சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு, அத்தகைய கறைகளை உடனே சுத்தப்படுத்தி விட வேண்டும்.

- தினமும் பளிங்கு தளங்களை சரியாக துடைத்து பராமரித்தால், நீண்ட காலம் வரை அதன் பளபளப்பு தன்மையை இழக்காமல் இருக்கும். அதிலும் டெர்ரி துணியை பயன்படுத்தி துடைப்பது சிறந்த வழியாகும். மேலும் சுடுநீரை விட வெதுவெதுப்பான நீரை கொண்டு சுத்தப்படுத்துவதே சிறந்தது. பளிங்கு கற்களில் கடினமான அழுக்குகள் இருந்தால் மட்டுமே, அதை தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. பளிங்கு கற்களை சுத்தப்படுத்திய பின் பாலிஷ் பூசி மெருகூட்டலாம்.

English summary

Take care of your marble flooring

If you have spent a good amount of money on installing marble as flooring or for decorative structures at home, you need to take special care to maintain the beauty of this stone. There are some precautions you need to take when working with marble.
Desktop Bottom Promotion