For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில் உள்ள அலமாரிகளை ஒழுங்கமைப்பதற்கான வழிகள்!!!

By Ashok CR
|

சமையலறை அலமாரிகளில் பொருள்களை அடுக்கி வைத்தல் என்பது ஒரு பரபரப்பான விஷயம். சமயலறையில் பாத்திரங்கள், சமையலுக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் கொள்கலன்கள் போன்றவற்றை பார்ப்பதற்கு அழகாகவும், முறையாகவும் அடுக்கி வைத்தல் அவசியம். சமையலறை அலமாரிகளில் பொருட்களை அடுக்கும் போது, பொதுவாக சமையலுக்கு தேவையான பொருட்களை எளிதாக எடுப்பதற்கு ஏற்பவும், சுத்தமாகவும், முறையாகவும் அடுக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு சமையலறை அலமாரிகளை, சுத்தம் செய்து, மீண்டும் ஒழுங்கமைக்க வேண்டும். அவற்றை ஒழுங்காக பராமரிக்காவிடில், சமையலறை தட்டுகள் எளிதில் அசுத்தமாகவும், பிசுபிசுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிடும்.

சமையலறை அலமாரிதட்டுகளை சுத்தம் செய்வதும், ஒழுங்குபடுத்தி அடுக்கி வைப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும், எடுப்பதற்கு ஏதுவாக கைக்கு வசதியாக இருப்பின் சமையல் எளிதாக முடியும். இதனால் சமையலுக்குத் தேவையான பொருட்களைத் தேடும் நிலையை குறைக்கலாம். அனைத்து பொருட்களையும் தேடுவதில் காலதாமதம் ஏற்படாமல், எளிதில் கண்டறியலாம். இதற்காகவே சமையலறை அலமாரிகள் ஒழுங்காக அடுக்கப்பட வேண்டும்.

Steps To Organise Your Kitchen Shelf

ஒழுங்கமைக்கப்படாத மற்றும் சுத்தமற்ற சமயலறையால் குளறுபடியே விளையும். இதனால் சமையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்து, அதற்குரிய இடங்களில் இருந்து பொருட்கள் மாறிவிடும். அசுத்தமான சமையலறை, கரப்பான் பூச்சிகள் மற்றும் சுண்டெலிகளின் இனபெருக்கதிற்கான இடமாக மாறி விடும். இது போன்ற காரணங்களால் சுத்தமற்ற சமையலறை, நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சமையலறையை சுத்தம் செய்வதில், முறையான சில வழிகளை வரிசையாக பின்பற்ற வேண்டும். இதன் மூலம் சமையலறை அலமாரித் தட்டுகளை சுத்தமாகவும், ஒழுங்காகவும் எளிதில் அடுக்கி விடலாம்.

பட்டியலிடுதல்

முதலில் சமைக்க தேவையான பொருட்கள், பாத்திரங்கள், கொள்கலன்கள் மற்றும் வெட்டு கருவிகள்(அரிவாள் மனை, கத்தி, அரிவாள்) போன்றவற்றை பட்டியலிட வேண்டும். இந்த பட்டியலில் உள்ள பொருட்களை வைப்பதற்கு, தேவையான இடங்களை முதலில் நாம் நிர்ணயிக்க வேண்டும். இந்த பட்டியலில் நாம் சமயலறையில் வைப்பதற்கு விரும்பும் அனைத்து பொருட்களும் இடம் பெற வேண்டும். பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், பொருட்களை பிரித்து தனித்து வைக்க வேண்டும். மசால் பொருட்கள், உணவு தானியங்கள், பேக் செய்யப்பட்ட பொருட்கள் என வகைகளுக்கு ஏற்ப பிரித்து அடுக்க வேண்டும். ஒரே வகையான பொருட்களை, ஒரே பகுதியில் அடுக்க வேண்டும்.

சமையலறை அலமாரி தட்டுகளை சுத்தப்படுத்துதல்

சமயலறைத் தட்டுகளில் பொருட்களை அடுக்குவதற்கு முன், அவற்றை முழுவதும் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். முதலில் உறுதியான துணி அல்லது துடைப்பத்தை வைத்து, சுத்தப்படுத்த வேண்டும். தட்டுகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசிகளை நன்கு துடைத்து, எடுத்து விட வேண்டும். திரவ நிலையிலுள்ள சோப் ஆயில் அல்லது தரை துடைக்கும் அலுக்ககற்றியை வைத்து நன்கு தூய்மைப் படுத்த வேண்டும். பின் சுத்தமான உலர்ந்த துணியை வைத்து, துடைத்து பளபளப்பாக வைக்க வேண்டும்.

சமையல் பொருட்களை அடுக்குதல்

சமையல் பொருட்கள் அனைத்தையும் அதற்குரிய பொருத்தமான கொள்கலன்களில், நிரப்பி வைக்க வேண்டும். கொள்கலன்களில் சமையல் பொருட்களை முறையாக அடைத்து வைக்க வேண்டும். கொள்கலன்களை திறந்த நிலையிலோ அல்லது பொருட்கள் சிந்தும் நிலையிலோ வைக்க கூடாது. இல்லையெனில், உணவு பொருட்கள் பாதிப்பதோடு, அலமாரி தட்டுகளும் அசுத்தமாகும். இதனால் பொருட்களுக்கு பொருத்தமான மற்றும் ஏற்ற கொள்கலன்களை உபயோகிப்பதே சிறந்தது. கொள்கலன்களில் அதில் நிரப்பப்பட்ட பொருட்களின் பெயர்களை, லேபில் செய்து ஒட்டி விடுவது நல்லது. இதனால் நமது சமையலறையை யார் உபயோகித்தாலும், பொருட்களை கண்டறிவது எளிது. மேலும் இதனால் சமையலறையும் ஒழுங்கடையும்.

கொள்கலன்களை அதற்குரிய இடங்களில் அடுக்கி வைத்தல்

சமையலறை ஒழுங்கமைப்பு வேலையில் இந்த நான்காவது படியே, மிகவும் யோசித்து செய்ய வேண்டிய பணியாகும். அனைத்து சாமான்களையும் முறைப்படி சரியான இடத்தில் , அடுக்கி வைப்பதே சமையலறை ஒழுங்கமைப்பில் மிகவும் முக்கியமான விஷயம். கொள்கலங்களும், பாத்திரங்களும் பார்ப்பதற்கு ஒழுங்காக வரிசையான முறையில் அடுக்கப்பட வேண்டும். இது தேவையான சாமான்களை தேடி எடுப்பதற்கு எளிதாக அமையும். ஒரே வகையான பொருட்களை ஒரே இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அடிக்கடி தேவைப்படும் பொருட்களை எளிதில் எடுக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

பராமரித்தல்

சமையலறையை ஒரு முறை அடுக்கி விட்டு போதும் என்று அமர்ந்து விட கூடாது. தினசரி சமையலறை அலமாரித் தட்டுகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் தூசி மற்றும் அழுக்குகளை அகற்றி விட வேண்டும். கொள்கலன்களையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். கொள்கலன்களில் இருந்து பொருட்கள் சிந்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதனால் சமையலறை அசுத்தமடையாமல் தவிர்க்கலாம். இவ்வாறாக சமையலறை அலமாரித் தட்டுகளை சுத்தமாகவும், முறையாகவும் பராமரிக்க வேண்டும்.

English summary

Steps To Organise Your Kitchen Shelf

To clean kitchen shelf, you should follow a proper series of steps. These steps make it easier to clean and arrange kitchen shelf. Some general steps that one can follow to clean their kitchen shelf are:
Desktop Bottom Promotion