For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காண்டாக்ட் லென்ஸை சுத்தம் செய்யும் வழிமுறைகள்!!!

By Super
|

காண்டாக்ட் லென்ஸை மிகவும் கவனமாக பாதுகாத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்ய தவறினால் உங்கள் கண்களை வெளிப்புறமாகவும் சரி, உட்புறமாகவும் சரி, அது வெகுவாக பாதித்துவிடும். அதே போல் காண்டாக்ட் லென்ஸை சரியாக கண்களில் பொருத்தவில்லை என்றாலும் கண்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொருந்தாத காண்டாக்ட் லென்ஸ், சுத்தமில்லாத காண்டாக்ட் லென்ஸ் அல்லது ஒழுங்காக கழுவாத காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்தினாலும், அவை கண்களையும், பார்வையையும் பாதிக்கும். அதனால் காண்டாக்ட் லென்ஸை அதன் தயாரிப்பாளர் மற்றும் மருத்துவர் கூறிய முறைப்படி அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

காண்டாக்ட் லென்ஸை வெறும் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. தண்ணீரில் கழுவினால் அதிலுள்ள பாக்டீரியாக்களால் உங்கள் கண்களுக்கு தொற்று ஏற்படலாம். சந்தையில் பல ப்ராண்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் விற்கப்படுகிறது. அதனை பராமரிப்பதற்காக பல சுத்தப்படுத்தும் பொருட்களும் கிடைக்கின்றன. இந்த பொருட்களை அல்லது சொல்யூஷன்களை பயன்படுத்த குறிப்பிட்ட சில வழிமுறைகள் உள்ளது. அதனை பின்பற்றினால் தான் நல்ல பயனை பெறலாம். லென்ஸை சுத்தப்படுத்த எவ்வளவு நேரம் அதனை துடைக்க வேண்டும், லென்ஸை சுத்தப்படுத்தும் நீரில் எப்படி போட வேண்டும், எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் போன்றவைகளை பற்றி அந்த வழிமுறைகளில் விளக்கப்பட்டிருக்கும்.

சில நேரம் லென்ஸை தேய்க்க கூடாது என்று கூட அறிவுறுத்தப்பட்டிருக்கும். எச்சிலை கொண்டும் காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்த கூடாது. எச்சிலில் உள்ள கிருமிகள் கண்களுக்கு தொற்றுக்களை ஏற்படுத்தி விடும். காண்டாக்ட் லென்ஸ் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதனால் அதனை வறட்சி அடைய செய்கிற சுத்தப்படுத்தும் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்துவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Steps To Clean Contact Lenses

1. கைகளை கழுவ வேண்டும்:

காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்தும் முறையில் இது தான் முதல் படி. முடிந்த வரை கைகளை ஆண்டி-பாக்டீரியல் சோப்பு அல்லது க்லென்சரை கொண்டு கழுவுங்கள். கை கழுவ வேண்டாம் என்று எண்ணினால் கைக்கு பயன்படுத்தும் சானிடைஸைரை கொண்டு கைகளை துடைக்கவும். கைகளை கொண்டு காண்டாக்ட் லென்ஸை கண்களில் மாட்டும் போது, கைகளில் இருந்து கிருமிகள் கண்களை பாதிக்ககூடாது அல்லவா? அதற்கு தான் இந்த முன் ஏற்பாடு.

2. தரமுள்ள சொல்யூஷன்ஸ்:

உங்கள் காண்டாக்ட் லென்ஸை கழுவ எப்போதுமே தரமுள்ள க்லென்சிங் சொல்யூஷனை பயன்படுத்துங்கள். குறைவான விலைக்காக தரத்திற்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை மறந்து விடாதீர்கள். நீங்கள் வாங்கும் சொல்யூஷன் மருத்துவர் அல்லது அதன் தயாரிப்பாளரால் பரிந்துரைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அனைத்து சொல்யூஷங்களும் அனைத்து காண்டாக்ட் லென்ஸ்கலுக்கும் ஒத்துப் போவதில்லை.

3. லென்ஸை சுத்தப்படுத்துதல்:

உங்கள் கண்களில் இருந்து லென்ஸை கழற்றி பரிந்துரைக்கப்பட்ட சொல்யூஷனில் மருத்துவர் அல்லது அதன் தயாரிப்பாளர் கூறியதை போல் கழுவவும். கண்ணில் இருந்து வெளிவந்த எச்சம், கண்களை சுற்றி பயன்படுத்திய மேக்-அப் பொருட்களில் இருந்து வெளிவந்த எச்சம், மற்றும் இதர தூசிகள் உங்கள் காண்டாக்ட் லென்ஸில் தேங்கியிருக்கும். காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்த வேண்டும் என்றால் இந்த எச்சங்களை நீக்குவதென்பதே. இந்த அழுக்குகளை நீக்கவில்லை என்றால் அது உங்கள் பார்வையை மங்கச் செய்யும். லென்ஸை உங்கள் உள்ளங்கையில் வைத்து கொஞ்சம் சொல்யூஷனை ஊற்றி கழுவ பரிந்துரைக்கப்படுகிறது.

4. ஊற வைக்கும் நேரம்:

காண்டாக்ட் லென்ஸை சொல்யூஷனில் ஊற வைக்க பல வழிமுறைகள் உள்ளது. குறைந்தது எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்பதை நீங்கள் லென்ஸை வாங்கும் கடைக்காரரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் லென்ஸ் டப்பாவில் சொல்யூஷனை ஊற்றி அதில் உங்கள் லென்ஸை கழற்றி வையுங்கள். காண்டாக்ட் லென்ஸை தண்ணீர் மற்றும் எச்சிலில் கழுவவோ ஊற வைக்கவோ கூடாது என்பதை மறந்து விடாதீர்கள்.

5. லென்ஸ் டப்பாவை சுத்தப்படுத்துங்கள்:

லென்ஸை கழற்றி அதன் டப்பாவில் வைக்கும் போது அதன் உட்புறத்தை கைகளால் தொடாதமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் மீண்டும் முதலில் இருந்து, அதாவது கைகளை கழுவதில் இருந்து தொடங்க வேண்டும். டப்பாவில் இருந்து லென்ஸை எடுத்து உங்கள் கண்களில் மாட்டிய பிறகு டப்பாவை சொல்யூஷன் ஊற்றி கழுவி காய விடுங்கள். அதனை பழைய சொல்யூஷன் அல்லது தண்ணீரை கொண்டு கழுவி விடாதீர்கள்.

இந்த வழிமுறைகளை பின்பற்றும் போது இதையும் மறந்து விடாதீர்கள்:

* லென்ஸில் சொல்யூஷனை தடவும் போது, அதனை திடமாக முன் மற்றும் பின் அசைவுகளால் நேராக செய்ய வேண்டும்.
* கை நகங்கள் குட்டையாகும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
* காண்டாக்ட் லென்ஸ் டப்பாவில் உள்ள சொல்யூஷனை தினமும் மாற்ற வேண்டும்.
* உங்கள் கண் மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், சுத்தப்படுத்தும் நீர்மத்தை கண்டிப்பாக மாற்றக்கூடாது.

English summary

Steps To Clean Contact Lenses

Contact lens must be kept moist at all times. Hence care must be taken not to clean contact lens with agents that dry the lens beyond permissible limit. Following are a few steps need to be taken to clean contact lens.
Desktop Bottom Promotion