For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துணிகளில் படிந்துள்ள மெஹந்தி கறைகளை நீக்க சில டிப்ஸ்...

By Maha
|

பண்டிகை காலங்களில் ஆசையாக கைகளில் வைக்கும் மெஹந்தி மிகவும் விருப்பமான துணிகளில் தெரியாமல் படிந்தால், எப்படி இருக்கும். பொதுவாக இந்த மாதிரியான சம்பவங்கள் மெஹந்தி வைக்கும் போது எதிர்பாராமல் நடைபெறக்கூடியவை தான். அதிலும் திருமண உடைகளில் மெஹந்தி படிந்துவிட்டால், எவ்வளவு கஷ்டமாக இருக்கும். ஏனெனில் இந்த கறைகள் படிந்தால் எளிதில் போகாது என்பதால் தான், அனைவரும் பதறுகிறோம். ஆனால் இந்த மெஹந்தி கறைகளை எளிதில் நீக்க முடியும்.

அதிலும் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டு, ஈஸியாக மெஹந்தி கறைகளை நீக்கிவிடலாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில முறைகளை பின்பற்றினால் போதும். நிச்சயம் மெஹந்தி கறைகளை நீக்கிவிடலாம். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கும் போது நிறம் மங்குமாறு தெரிந்தால், அதனை தவிர்த்து, வேறொரு முறையை பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முறை: 1

முறை: 1

மெஹந்தியானது துணியில் பட்டால், உடனே ஈரமான துணி கொண்டு துடைக்க வேண்டும். குறிப்பாக தேய்த்து விடாதீர்கள்.

முறை: 2

முறை: 2

துணிகளில் படிந்துள்ள மெஹந்தி கறைகளை நீக்க, சோப்பு கொண்டு கறை படிந்துள்ள இடத்தில் வட்டமாக, கறை போகும் வரை தேய்த்து, குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை கறை நீங்கும் வரை செய்யவும். வேண்டுமெனில், வீட்டில் பழைய டூத் பிரஷ் இருந்தால், அதனைப் பயன்படுத்தி தேய்த்தாலும், மெஹந்தி கறைகள் நீங்கிவிடும்.

முறை: 3

முறை: 3

பால் கொண்டும் மெஹந்தி கறைகளைப் போக்கலாம். அதற்கு கறை படிந்த துணியை பாலில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை சோப்பு கொண்டு வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். ஒருவேளை நீங்கா கறை போல் படிந்திருந்தால், அந்த கறை போகும் வரை இந்த முறையை திரும்ப செய்யலாம்.

முறை: 4

முறை: 4

மெஹந்தி கறை படிந்த இடத்தின் மேல், ஒரு துளி ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றி தேய்த்தால், கறை உடனே போய்விடும். ஆனால் ஹைட்ரஜன் பெராக்ஸைடு துணியை ப்ளீச் செய்துவிடும். ஆகவே அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

முறை: 5

முறை: 5

வினிகர் கூட மெஹந்தி கறையைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு வெள்ளை வினிகரை கறை படிந்த இடத்தில் ஊற்றி தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். நீங்கா கறையாக இருந்தால், இந்த முறையை கறை மங்கும் வரை செய்ய வேண்டும்.

குறிப்பாக, மேற்கூறியவற்றை மெஹந்தி படிந்த உடனே செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Removing Mehendi Stains From Clothes

Here are some of the ways in which you can remove mehendi stains from your clothes. These are the most easy ways to remove the orange henna stains. Take a look.
Story first published: Tuesday, October 22, 2013, 19:07 [IST]
Desktop Bottom Promotion