For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபங்களால் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்ற சில டிப்ஸ்...

By Super
|

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படும் கார்த்திகை தீபமானது அனைத்து பகுதிகளிலும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எப்படி அதனை கொண்டாட நாம் தயார் ஆகிறோமோ, அதேப் போல கொண்டாட்டங்களுக்கு பின் நடக்கும் விஷயங்களுக்காகவும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டாமா? இந்த நாளில் இந்தியாவின் அனேக வீடுகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு ஜக ஜோதியாக இருக்கும். அதுமட்டுமின்றி, தீபத்திருநாளான இந்நாளில் ஆலயங்களில் விமரிசையாக தீபங்கள் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபம் என்றாலே தீபங்களின் அணிவகுப்பு என்பது தான். இந்த நன்னாளில் நம் வீட்டில் விதவிதமான பல தீபங்களை ஏற்றுவோம். அப்படி ஏற்றுவதால் தீபங்களில் உள்ள எண்ணெய் தரையில் சிந்தாமல் இருக்குமா என்ன? கண்டிப்பாக சிந்தும் வாய்ப்புகள் அதிகம். நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சரி எண்ணெய் சிந்துவதற்கான வாய்ப்புகள் அதிகமே. தீபங்கள் எரிய எரிய எண்ணெய் மெதுவாக தரையில் படரும். இதுவே தரையில் கறையை ஏற்படுத்திவிடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பல வழிகள் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த கறையை நீக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் அமிலங்கள் கலக்கப்பட்டுள்ளது. அவைகளை பயன்படுத்தி கரைகளை சுலபமாக நீக்கினாலும் கூட, அது தரையை பாழாக்கி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.

ஆகவே பாதுகாப்பான முறையில் தரையில் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்றுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூனை கூட உங்களுக்கு உதவலாம்

பூனை கூட உங்களுக்கு உதவலாம்

பூனையை போலவே அதன் சிறுநீரும் கூட உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எண்ணெய் சிந்தி சிறிது நேரம் தான் ஆனது என்றால், உங்கள் பூனையின் சிறுநீரை அதன் மீது தெளியுங்கள். ஒரு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, மறுநாள் கழுவி விடுங்கள். கறையை நீக்க இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.

மரத்தூளும் பெயிண்ட் தின்னரும் கூட கை கொடுக்கும்

மரத்தூளும் பெயிண்ட் தின்னரும் கூட கை கொடுக்கும்

பெயிண்ட் தின்னர் மற்றும் மரத்தூளை ஒன்றாக கலந்து கறை படிந்த இடத்தில் தடவவும். அதனை எண்ணெய் கறையின் மீது ஒரு 20 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இந்த கலவையை தடவலாம். தீபங்களினால் ஏற்படும் கறையை நீக்க இது ஒரு சுலபமான வழியாக தோன்றுகிறதா?

பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்

பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்

பேக்கிங் சோடாவை சமையலுக்கு எப்படி பயன்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியும். அதை எண்ணெய் கறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கார்த்திகை தீபத்தன்று தீபங்களால் ஏற்பட்டுள்ள எண்ணெய் கறையை எப்படி நீக்குவது என்ற கவலை ஏற்படுகிறதா? ஒன்றே ஒன்றை செய்யுங்கள். கடைக்கு செல்லும் போது கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் கறையின் மீது கொஞ்சம் பேக்கிங் சோடாவை தெளித்து பின் வெந்நீரில் அந்த இடத்தை கழுவுங்கள்.

பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட்

பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட்

தீபங்களினால் ஏற்படும் எண்ணெய் கறையை நீக்க மற்றொரு சுலபமான வழியாக விளங்குகிறது பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்ட். அதனை கறை படிந்த இடத்தில் தூவி கொஞ்ச நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அந்த நேரத்தில் கொஞ்சம் நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்த பின் கறை படிந்த இடத்தில் அதனை ஊற்றி நன்றாக கழுவவும்.

TSP உதவி செய்யுமா என்று பாருங்கள்

TSP உதவி செய்யுமா என்று பாருங்கள்

TSP என்றால் ட்ரை சோடியம் பாஸ்பேட்டாகும். இது அடர்த்தியான கறைகளை நீக்க உதவும். அதனால் தீபங்களினால் ஏற்படும் எண்ணெய் கறைகளை நீக்கவும் அதனை பயன்படுத்தலாம். அதற்கு அதனை ஒரு வாளி தண்ணீரில் கலந்து கறை படிந்த இடத்தில் தெளிக்கவும். 20-30 நிமிடங்கள் வரை அதை ஊற வையுங்கள். பின்பு தரையை நன்றாக கழுவுங்கள்.

WD40 பயன்பாட்டின் விளைவு

WD40 பயன்பாட்டின் விளைவு

WD40 என்பது வீட்டில் இருக்கும் பொதுவான லூப்ரிகண்ட்டாகும். தீபங்களினால் ஏற்படும் எண்ணெய் கறையை அகற்ற இந்த லூப்ரிகண்ட்டையும் நீங்கள் பயன்படுத்தலாம். அதற்கு இதனை கறை மீது தெளித்து, 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்பு நன்றாக கழுவவும்.

நீக்க முடியாத கறை

நீக்க முடியாத கறை

கறை மிகவும் அடர்த்தியாக இருந்தால், அதனை நீக்க முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றலாம். அப்படியானால் அடர்த்தி மிக்க டீக்ரீசரை (degreaser) பயன்படுத்தலாம். அடர்த்தி மிக்க இந்த அல்கலைன் சோப்பை, கறை படிந்த இடத்தில் அழுத்தி தேய்க்கவும். இதுவும் கறையை நீக்க உதவும் ஒரு வழிமுறையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remove Oil Stains Of Diya From Floor

If you are looking some of the safest remedies to remove oil stains this Karthikai Deepam, and then read on.
Story first published: Monday, November 18, 2013, 15:53 [IST]
Desktop Bottom Promotion