For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூயிங் கம் துணிகளில் ஒட்டிருச்சா? ஈஸியா போக்கலாம்!!!

By Maha
|

மிகவும் பிடித்த உடைகளில் ஏதேனும் கறை படிந்தாலே கஷ்டமாயிருக்கும். அதிலும் சூயிங் கம் ஒட்டியிருந்தால், அதனை முற்றிலும் போக்குவது என்பது கடினமான ஒன்று. ஆனால் அவற்றை ஒருசில கடினமான கெமிக்கல் மூலம் போக்கலாம். அவ்வாறு கெமிக்கல்களை துணிகளில் பயன்படுத்தினால், அதன் தரம் மற்றும் நிறம் குறைந்துவிடும். ஆகவே அவற்றை தூக்கிப் போடுவது தான் சிறந்த வழி என்று நினைக்க வேண்டாம்.

ஏனெனில் அந்த மாதிரியான சூயிங் கம் துணிகளில் ஒட்டிக்கொண்டால், அப்போது அவற்றை நீக்குவதற்கு ஒரு சில எளிய வழிகளைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அத்தகைய வழிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, எளிதில் சூயிங் கம்மை போக்கிவிடுங்கள்.

Remove Chewing Gum From Cloth?

* துணிகளில் சூயிங் கம் ஒட்டிக் கொண்டால், அப்போது அதனை ஃப்ரீசரில் வைத்தால், சூயிங் கம்மானது உறைந்துவிடும். பின் அதனை கத்தி அல்லது நகங்களால் எடுத்தால், அவை எளிதில் துணிகளில் இருந்து முற்றிலும் வந்துவிடும். வேண்டுமெனில் ஐஸ் கட்டிகள் வைத்து தேய்த்தாலும், சூயிங் கம் வந்துவிடும்.

* வினிகரை வெதுவெதுப்பாக சூடேற்றி, சூயிங் கம் ஒட்டியுள்ள இடத்தைச் சுற்றி ஊற்றினால், பின் அதனை எடுத்தால், அவை துணிகளில் இருந்து எளிதில் வந்துவிடும்.

* நெயில் பாலிஷ் ரிமூவர், நெயில் பாலிஷை மட்டும் நீக்குவதற்கு பயன்படுவதில்லை. துணிகளில் சூயிங் கம்கள் ஒட்டிக் கொண்டாலும், அதனை நீக்குவதற்கும் தான் பயன்படுகிறது. இவ்வாறு இதனைப் பயன்படுத்தி சிறிது தேய்த்தாலும், சீக்கிரம் கம்மானது வெளியேறிவிடும்.

* துணிகளை ஐயர்ன் செய்வதன் மூலமும் நீக்கலாம். அதற்கு சூயிங் கம் ஒட்டியுள்ள இடத்தில் ஒரு ப்ரௌன் பேப்பரை வைத்து, அதன் மேல் இஸ்திரிப் பெட்டியை உயர் வெப்பநிலையில் வைத்து இஸ்திரி செய்யும் போது, சூயிங் கம்மானது மென்மையாகி, பேப்பரில் ஒட்டிக் கொள்ளும். இந்த முறையை சூயிங் கம் போகும் வரை செய்ய வேண்டும்.

* ஆல்கஹாலைப் பயன்படுத்தி நீக்குவதும் நல்ல பலனைத் தரும். அதற்கு காட்டன் சிறிதை ஆல்கஹாலில் நனைத்து, சூயிங் கம் ஒட்டியுள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கத்தியை வைத்து எடுத்தால், கம் எளிதில் வந்துவிடும்.

* ஹேர் ஸ்ப்ரேயை சூயிங் கம் உள்ள இடத்தில் தெளித்தால், அவை சற்று கடினமாகிவிடும். பின் அதனை கத்தியை வைத்து எடுத்தால், எந்த ஒரு பிரச்சனையுமின்றி அவை வந்துவிடும்.

English summary

Remove Chewing Gum From Cloth? ~ சூயிங் கம் துணிகளில் ஒட்டிருச்சா? ஈஸியா போக்கலாம்!!!

It is an embarrassing moment when you notice a chewing gum sticking on your cloth. Nobody prefers to damage their favourite clothes by treating it with strong chemicals. But, why not trying some easy methods to remove it before thinking of throwing it off? If you are looking for easy home tips to remove chewing gum from your clothes, here are some.
Story first published: Wednesday, April 10, 2013, 16:55 [IST]
Desktop Bottom Promotion