For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...

By Super
|

நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்கான கிரீம்கள், மருந்துகளை வாங்கி வைத்தல் என ஏகப்பட்ட வழிமுறைகளில் நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே குளிர்காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது.

குளிர்காலத்திற்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதைப் போலவே, நாம் வசிக்கும் வீட்டையும் தயார் செய்வது அவசியம். குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வீட்டை நாம் தயார் செய்ய வேண்டும். வழக்கமாகவே வீட்டை வெப்பமாக வைத்திருக்கவும், குளிருக்கு இதமாக வைத்திருக்கவும் இந்த வேலைகளை நாம் செய்வோம். அதற்காக நீங்கள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை, சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.

Preparing Home For Winter

குளிர்காலத்திற்கு உங்களுடைய வீட்டை தயார் செய்வதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

சூடுபடுத்துங்கள் - மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாகவும் மற்றும் கதகதப்பாகவும் வைத்திருக்கும் வகையில், ஹீட்டர் அல்லது நெருப்பு மூட்டும் இடத்தை தயார் செய்து வைக்கவும். ஹீட்டர்களுக்கு போதுமான அளவு கேஸ் வைத்திருக்கவும் அல்லது மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர்களை பயன்படுத்தவும். உங்கள் வீட்டு சீலிங் ஃபேனை எதிர் திசையில் சுழலுமாறு இணைப்புகளை மாற்றிக் கொடுத்தால் போதும், வீட்டுக்குள் கதகதப்புக்கு நிறைய வழி கிடைத்து விடும்.

திரைகள் - உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு மொத்தமான திரைகளை பொருத்தவும். இதன் மூலம் வீட்டுக்குள் குளிரான ஊதைக்காற்று வருவதை பெருமளவு தவிர்த்திட முடியும். எனவே, குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் மொத்தமான மற்றும் ஃபேன்ஸியான திரைகளை ஜன்னல் மற்றும் கதவுகளில் பொருத்தி அலங்கரித்து வைக்கவும். மேலும், மொத்தமான பாய்கள் மற்றும் சோபா குஷன்களை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் டல்லாக இருக்கும் பருவநிலையை, பளிச் நிற திரைகளால் உற்சாகமான பொழுதுகளாக மாற்றுங்கள.

பர்னிச்சர்கள் - வீட்டின் முக்கிய அங்கமாக இருப்பது அங்கிருக்கும் பர்னிச்சர்கள் தான். குளிர்காலத்திற்கு உங்கள் வீட்டை தயார் செய்யும்போது, பர்னிச்சர்களை முறையாக வைத்து, பராமரிப்பதும் முக்கிய பங்கு வகிக்கும். உட்காரும் இருக்கைகளை காலியான இடங்களில் வைக்காமல், ஹீட்டருக்கு சற்றே அருகில் இருக்குமாறு அமையுங்கள. மேலும், ஜன்னல்களை இறுக்கமாக மூடும் போது, காற்று உள்ளே வராமல் இருப்பதை உறுதி செய்யவும். இதன் மூலம் வீடு கதகதப்பாக இருக்கும். பெரிய பர்னிச்சர்களையும் மற்றும் மித வெப்பமாக இருக்கும் பொருட்களையும் பயன்படுத்தினால் வீடு வெப்பமாக பராமரிக்கப்படும்.

ஒழுகல்களை அடைத்தல் - குளிர்காலம் வருவதற்கு முன்னர் ஓழுகும் குழாய்கள் மற்றும் குளியலறை சாமன்களை பழுதுபார்த்து தயார் செய்து விடவும். ஏனெனில், குளிரான நீர் உங்கள் வீட்டு குழாய் வழியாக வெளியேறும் போது, வீட்டின் வெப்பநிலை குறைந்து விடும். குளிர்காலத்தில் வீட்டை வெப்பமாக வைத்திருக்க வேண்டியிருப்பதால், இது போன்ற ஒழுகும் குழாய்களை தவிர்ப்பது நல்லது.

காப்பு வேலைகள் (இன்சுலேசன்) - உங்களுடைய பகுதியில் கடுங்குளிர் நிலவினால், பரண் மீதும், பிற இடங்களிலும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இன்சுலேசன் செய்யுங்கள். இதன் மூலம் வீட்டுக்குள் வெப்பம் நிலைநிறுத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் முறையான டி-ஹைட் ப்ரீ இன்சுலேட்டர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் உண்டு. மேலும், குழாய்களை பாதுகாத்து வைத்திருந்து, அவை உறைந்து போவதையும் தவிர்த்திடவும். நாளுக்கு ஒருமுறை சூடான தண்ணீரை நிரம்பி ஓடச் செய்வதன் மூலமாக உங்களுடைய குழாய் உறைந்து போவதை தவிர்க்க முடியும்.

குளிர்காலத்தில் உங்கள் வீட்டை வெப்பமாகவும், வசதியாகவும் வைத்திருக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். இவை மட்டுமல்லாமல் வெப்பமான குஷன்களையும் மற்றும் பாய்களையும் பயன்படுடுத்தியும், எல்லா மின்சாதனங்களையும் சோதித்து பார்த்தும், கூரைகளில் தண்ணீர் ஓடும் இடங்களை சுத்தம் செய்தும் இதமான குளிரை அனுபவித்திட முடியும்.

நீங்கள் முன்கூட்டியே தயாராகி இருந்தால் குளிர்காலம் உங்களுக்கு இதமானதாக இருக்கும். உங்களுக்கு எதிரில் நெருப்பை மூட்டி விட்டு, போர்வையை போhத்திக் கொண்டு, ஈஸி சேரில் அமர்ந்தபடி காபியை குடித்து அனுபவிக்கும் குளிர்காலத்தை எண்ணிக் கனவு காணத் தொடங்குங்கள். எனவே, குளிரை தொந்தரவாக கருதுவதை விட்டு விட்டு, வீட்டை தயார் செய்யும் பணியை விரைந்து செய்யுங்கள்.

English summary

Preparing Home For Winter

Home preparations for winter are as necessary and important as personal preparations are. Home arrangements should be made suitable to winter. It is usually done to keep the home warm and comfortable during winters. A lot of changes aren't required, just a few tips and the home is ready for winter. A few of winter preparation tips are as described below.
Desktop Bottom Promotion