For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...

By Maha
|

அனைவருக்குமே வீட்டு நன்கு சுத்தமாகவும், நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதிலும் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை விட, நம் வீடு அழகாக இருக்க வேண்டுமென்று பலர் நிறைய பணத்தை செலவழிப்பதுண்டு. குறிப்பாக வீட்டில் நல்ல மணம் வர வேண்டுமென்று, பல நறுமணப் பொருட்களை வாங்கி, வீட்டில் பயன்படுத்துவோம்.

இருப்பினும் அது தற்காலிகமாக, 1 அல்லது 2 மணிநேரம் மட்டும் இருக்குமே தவிர, நிரந்தரமாக இருக்காது. ஆகவே வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், அதிக பணம் செலவழித்து கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு எளிதான முறையில் நறுமணத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

சரி, இப்போது வீட்டை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் பொருட்களையும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதையும் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் வீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சரிசமமாக கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, காற்றாடியை நோக்கி தெளித்தால், அது வீட்டில் நல்ல மணத்தை தக்க வைக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை பிழிந்து, அறையின் மூலைகளில் வைத்தால், அது அறைகளில் நல்ல மணத்தை பரவச் செய்வதோடு, மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தின் நறுமணம் பிடிக்கும் என்றால், அன்னாசிப்பழத்தை நறுக்கி, டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, கதவுகளின் முனையில் தேய்த்து விட்டால், ஜன்னல் கதவுகளை திறக்கும் போது, வெளிக்காற்று வீட்டின் உள்ளே வரும் போது நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

சிவப்பு வெங்காயம்

சிவப்பு வெங்காயம்

சமையலறையில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க வேண்டுமெனில், சிவப்பு வெங்காயத்தை நறுக்கி, சமையலறையில் வைத்தால், துர்நாற்றம் நீங்கிவிடும்.

பட்டை

பட்டை

பட்டை உணவில் மட்டும் நல்ல மணத்தைக் கொடுப்பதோடு, வீட்டின் அறையிலும் நல்ல நறுமணத்தை தக்க வைக்கும். அதற்கு பட்டையை ஜன்னல் கதவுகளின் அருகே வைத்தால், நல்ல மணத்துடன் இருக்கும். பட்டையின் வாசனை பிடிக்கும் என்பவர்கள் இந்த முறையை மேற்கொள்ளலாம்.

மூலிகைகள்

மூலிகைகள்

நல்ல மணம் கொண்ட மூலிகைகளை வீட்டின் உள்ளே வளர்த்தாலும், நல்ல நறுமணம் வீட்டை சுற்றும். அதிலும் துளசி மற்றும் ஜின்செங் போன்றவை நல்ல நறுமணமிக்க மூலிகைகளாகும்.

மலர்கள்

மலர்கள்

வீட்டின் பூ ஜாடியில் நல்ல நறுமணமிக்க பூக்களை வைத்து, வீட்டை வீட்டை அலங்கரித்தால், வீடு நறுமணத்துடன் இருப்பதோடு, வீட்டிற்கு அழகு சேர்த்தது போன்றும் இருக்கும். குறிப்பாக ரோஜா மற்றும் மல்லிகையை வைத்தால் நல்ல மணம் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து கதவுகளின் விளிம்புகளில் வைத்து, கதவுகளை திறந்து விட்டால், அது வீட்டில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

சிட்ரஸ் ஆசிட் நிறைந்த அனைத்துப் பொருட்களும், வீட்டை நறுமணத்துடன் வைத்துக் கொள்ளும். அதிலும் ஆரஞ்சு பழத்தை ஊசியால் குத்தி, அதனை சமையலறையில் வைத்துவிட்டால், அது சமையலறையில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி, நல்ல நறுமணத்தை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways To Make Home Smell Good

When it comes to making your home look the best when compared to your neighbours, you will be ever ready to spend out of your pocket. Isn't it? But what if your home looks great, but smells awful! So, Here are some of the best ways to make your home smell good. Take a look at some of these natural ways to make your home smell good.
Story first published: Monday, September 16, 2013, 18:57 [IST]
Desktop Bottom Promotion