For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெட் ஒயின் கறைகளை எளிதில் போக்க சில வழிகள்!!!

By Super
|

விருந்தினர்களுக்கு என்னதான் சரியாக உணவுகளைப் பரிமாறினாலும், சில நேரங்களில் தவறுதலாக அவை கீழே சிந்திவிடும். ரெட் ஒயின் எனப்படும் சிகப்பு மதுவானது துணிகளிலோ அல்லது கம்பளத்திலோ அல்லது மரச்சாமான்கள் மீதோ சிந்திவிட்டால், அவற்றின் கறையைப் போக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கறையைப் போக்க செய்யும் முயற்சிகள் சில நேரங்களில் அக்கறைகளை, மேலும் மோசமாக்கலாம். மதுக்கறையை போக்க பல வழிமுறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். சில வழிகள் கறையை போக்கினாலும், சில வழிகள் துணிகளின் சாயத்தையே போக்கிவிடுகிறது.

துணிகளின் நிறம் மாறாமல் மதுக்கறையை போக்க வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட வேண்டும். அதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை கண்டறிந்து, அவ்வாறே செய்து எளிதில் கறையை அகற்றிவிடலாம். பலர் இன்னமும் கறையை நீக்க தெளிவான திரவமாக இருக்கும் சோடா நீரைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்பொழுது எத்தனையோ புதுப்புது வழிமுறைகள் கறைகளை அகற்ற வந்துவிட்டன. அப்படிப்பட்ட வழிமுறைகளை இப்பொழுது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காகிதங்கள்

காகிதங்கள்

ஒயின் சிந்தியவுடனேயே கொஞ்சம் காகிதத் துண்டுகளை சிந்திய இடத்தில் போட்டு அழுத்தி தேய்த்து விடவும். இதனால் மதுவின் ஈரத்தை காகிதத் துண்டுகள் இழுத்துக் கொள்ளும். மேலும் முடிந்த அளவு மதுவை சிந்திய இடத்திலிருந்து எடுத்துவிடலாம். இப்படிச் செய்வதனால் மதுவானது துணிகளிலோ அல்லது மற்ற கம்பள வகையிலோ பரவாது தடுக்க முடியும். பின்னர் வழக்கமான முறையில் துணிகளை துவைத்தால், கறை அகன்றுவிடும்.

பாத்திரங்களை சுத்தம் செய்யும் திரவங்கள்

பாத்திரங்களை சுத்தம் செய்யும் திரவங்கள்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பாத்திரங்களை சுத்தப்படுத்தும் திரவம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு 8 அவுன்ஸ் எடுத்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது காட்டனை எடுத்துக் கொண்டு, அதனை அந்த கலவையில் நனைத்து, கரையுள்ள இடத்தில் தேய்க்க கறை நீங்கி விடும். பின்னர் குளிர்ந்த தண்ணீரில் அலசி விடவும். ஆனால் அதிக பெராக்சைடு பயன்படுத்தினால் துணியின் நிறம் நீங்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வோட்கா

வோட்கா

சில சமயங்களில் ஒரு மதுக்கறையை போக்க, மற்றொரு மதுவை பயன்படுத்த வேண்டும். அனுபவமிக்கவர்கள் சிகப்பு மதுக்கறையை போக்க வெள்ளை மதுவை பயன்படுத்துவர். இது பொதுவாக எல்லா நிற வண்ணங்களையும் போக்கி, கறையை லேசான நிறத்துக்கு கொண்டு வந்து விடும். பிறகு துணிகளை வழக்கம் போல துவைக்க கறை நீங்கிவிடும்.

உப்பு

உப்பு

மதுக்கறையை நீக்க உப்பை ஒரு பொதுவான பொருளாக பயன்படுத்தலாம். துணிக்கறையை நீக்க ஒரு கடினமான சிகிச்சை தேவைப்படும் என்றால், கரையுள்ள இடத்தில் உப்பை வைத்து பல நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் துணியை விரித்து கறையுள்ள இடத்தில் சூடான நீரை ஊற்ற வேண்டும். பொதுவாகவே கடினமான கறையை நீக்க சூடான நீரில் ஊற வைத்தால், பலவகையான கறைகள் நீங்கிவிடும்.

வாஷிங் பொடி

வாஷிங் பொடி

சில சந்தர்ப்பங்களில், சோஃபாக்களை எந்த முறையைப் பயன்படுத்தினாலும் அவற்றிலிருந்து கறைகள் போகாது. அம்மாதிரியான நேரத்தில் உற்பத்தியாளர்களின் பரிந்துரை மற்றும் வழிகாட்டுதலின் படி, வாஷிங் பொடிகளைப் பயன்படுத்தலாம். வாஷிங் பொடிகளைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு, மதுக்கறையை போக்க வேண்டும். வாஷிங் பொடிகளை நீரில் கரைத்து பயன்படுத்தும் முறைகளை, அதற்குரிய அட்டவணையில் கூறியுள்ளபடி செய்யலாம்.

சோதனை

சோதனை

கறையை நீக்க பலவகையான முயற்சிகளை நாம் எடுக்கும் போது, முதலில் துணிகள் அல்லது கம்பளங்கள் அல்லது சோபாக்கள் போன்றவற்றில் உள்ள உபயோகமில்லாத பகுதியில் குறிப்பிட்ட சோதனையை சிறிது செய்து பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் சோதனையில் துணிகள், கம்பளங்கள் போன்றவற்றின் நிறம் மாறாமல் இருந்தால், கறை நீக்கிகளை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Method to Get Red Wine Stains | ரெட் ஒயின் கறைகளை எளிதில் போக்க சில வழிகள்!!!

As every fabric reacts to stains differently, no stain removal method is guaranteed to remove red wine 100 percent of the time. A quick reaction, however, and knowing which products to use helps improve the likelihood of the couch coming clean.
Desktop Bottom Promotion