For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துணிகளில் படியும் இரத்தக் கறைகளைப் போக்க சில டிப்ஸ்...

By Maha
|

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஏற்கனவே மனநிலையானது, இந்த நேரத்தில் மிகவும் மோசமாக, அழுத்தத்துடன், ஒருவித டென்சனுடன் இருக்கும். அத்துடன், உடுத்தும் உடைகளில் இரத்தக் கறைகள் படிந்துவிட்டால், சொல்லவே வேண்டாம். அதிலும் பிடித்த ஆடைகளில் படிந்து விட்டால், அதனை நீக்குவது கடினமாக இருப்பதோடு, மீண்டும் அதனை உடுத்த முடியாது.

எனவே பெண்களுக்காக, இத்தகைய கறைகளை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. அத்தகைய பொருட்களைப் பயன்படுத்தி, அந்த இரத்தக் கறைகள் உள்ள துணிகளைத் துவைத்தால், பளிச்சென்று துணிகள் மாறிவிடும். சரி, அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு

உப்பு

நீரில் உப்பைக் கலந்து, கறை உள்ள துணியை ஊற வைத்து துவைத்தால், துணியில் உள்ள இரத்தக் கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

வீட்டை சுத்தம் செய்யப் பயன்படும் ஹைட்ரஜன் பெராக்ஸைடும், இரத்தக் கறைகளை எளிதில் போக்குவதற்கு உதவும் பொருட்களில் ஒன்றாகும். அதற்கு நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து, கறை உள்ள துணியை ஊற வைத்து துவைத்தால், கறைகள் எளிதில் அகலும்.

டிடர்ஜெண்ட் சோப்பு

டிடர்ஜெண்ட் சோப்பு

இந்த கறையைப் போக்குவதற்கு, துணியை ஊற வைத்து துவைக்கப் பயன்படும் டிடர்ஜெண்ட் பவுடர் எந்த ஒரு பலனையும் தராது. ஆனால் டிடர்ஜெண்ட் சோப்பை கறை உள்ள இடத்தில் தேய்த்து, சூடான நீர் கொண்டு துவைத்தால், கறைகள் போய்விடும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

இரத்தக் கறையானது படிந்ததும் உடனே குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால், கறையானது சுத்தமாக போய்விடும். அதிலும் அந்த கறை உள்ள இடத்தில் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், கறைகள் நீங்கும். இந்த முறையைப் பயன்படுத்தினால், துணியின் தரம் குறையாமல் நீண்ட நாட்கள் இருப்பதோடு, கறையும் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

துணியில் படியும் கடினமான கறைகளைப் போக்குவதற்கு பேக்கிங் சோடா பெரிதும் உதவும். அதிலும் பேக்கிங் சோடாவை, வினிகருடன் சேர்த்து கலந்து, இரத்தக் கறை இருக்கும் துணியைத் துவைத்தால், எளிமையாக அகன்றுவிடும்.

வினிகர்

வினிகர்

வினிகரைப் பயன்படுத்தியும் இரத்தக் கறைகளை போக்கலாம். அதற்கு கறையுள்ள துணியை தண்ணீர் மற்றும் வினிகர் கலவையில், இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து துவைக்க போய்விடும். ஒருவேளை கறை போகவில்லையெனில், அப்போது டிடர்ஜெண்ட் சோப்பு பயன்படுத்தி தேய்த்து துவைத்தால், போய்விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை ஒரு நேச்சுரல் ப்ளீச்சிங் பொருள் என்பதால், துணிகளில் உள்ள இரத்தக் கறைகளை போக்குவதற்கு பெரிதும் உதவும். குறிப்பாக எலுமிச்சையை, உப்புடன் சேர்த்து கறையுள்ள இடத்தில் தேய்த்தால், கறைகள் நிச்சயம் அகலும். மேலும் வெள்ளை நிறத் துணியில் உள்ள கறையை போக்குவதற்கு பயன்படுத்தினால், துணியின் நிறம் மாறாமல் இருக்கும். எனவே வெள்ளை நிறத் துணியில் கறை படிந்தால், மறக்காமல் எலுமிச்சையை பயன்படுத்தவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Remove Blood Stains From Clothes? | துணிகளில் படியும் இரத்தக் கறைகளைப் போக்க சில டிப்ஸ்...

Women often face embarrassing situations during their periods. Already, you feel low and mood swings attack you, getting blood stains on your clothes is just an addition! Getting rid of the blood stains is really difficult as it leaves a yellowish stain on the fabric. Here are a few simple washing tips to remove blood stains from clothes.
Story first published: Monday, April 8, 2013, 16:24 [IST]
Desktop Bottom Promotion