For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மளிகைப் பொருட்களை ஷாப்பிங் செய்யப் போறீங்களா? அப்ப இத படிச்சுட்டு போங்க...

By Super
|

ஆரோக்கியம் என்று வரும் போது, பெரிதும் நம்பியிருப்பது உணவைத் தான். நமக்கு நல்லது நடப்பதும் அந்த உணவாலே, தீமை நடப்பதும் அந்த உணவாலே. அப்படி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டியது மிகவும் அவசியம்.

பொதுவாக மளிகை பொருட்கள் வாங்கும் அங்காடியில் ருசியான உணவுகள் பல விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானது கிடையாது. ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமானால், மளிகை பொருட்கள் வாங்கச் செல்லும் போது கீழ்கூறிய அனைத்தையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள்

பழங்கள்

உணவு பழக்கங்களில் பழங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சரியான பழங்களை தேர்வு செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது உடனடி சக்தி தேவைப்பட்டால் வாழைப்பழங்கள் மற்றும் திராட்சை பழங்களை உண்ணலாம். மேலும் பதப்படுத்தப்பட்ட பழங்களுக்கு பதிலாக நற்பதமான பழங்களையே வாங்குங்கள். புது வகை பழங்கள் என்றால் சுவைத்து பார்க்க தவறவிடாதீர்கள்.

காய்கறிகள்

காய்கறிகள்

காய்கறிகளை பல விதமாக சமைத்து உண்ணலாம். அதில் அவித்தல், வதக்குதல், பொரித்தல் போன்றவைகள் பொதுவாக அனைவரும் செய்வதாகும். அதேப்போல் காய்கறிகளை சரியான கலவையில் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம். அதிலும் துரிதமான மதிய உணவு, இரவு உணவு அல்லது நொறுக்கு தீனிக்கு சரியான உணவாக விளங்குகிறது பச்சை காய்கறி சாலட். குறிப்பாக அவற்றில் கீரை மற்றும் பீட்ரூட் போன்ற சத்துள்ள காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.

 புரதம்

புரதம்

இறைச்சி, கோழி மற்றும் மீன்களில் புரதச்சத்து நல்ல அளவில் நிறைந்துள்ளது. ஆனால் சைவ உணவாளராக இருந்தால், உப்பு சேர்க்காத நட்ஸ் மற்றும் பீன்ஸ் வகைகளை வாங்குங்கள்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

உணவில் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். அதிலும் குறைந்த அளவு கொழுப்பு நிறைந்த சீஸ் மற்றும் பாலை காலை உணவிற்கு தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

தானியங்கள்

தானியங்கள்

மளிகை கடைக்கு செல்லும் போது பிரட் மற்றும் அரிசி வாங்காமல் வரமாட்டோம். அப்படி வாங்கும் போது, முழுமையாக கோதுமையால் செய்யப்பட்ட பிரட்களையும், பழுப்பு நிற அரிசியையும் வாங்குங்கள். இவை இரண்டும் உடலுக்கு ஆரோக்கியமானவை. பிரட் வாங்கும் போது, அதன் லேபிளைப் பார்க்க தவறவிடாதீர்கள். அதற்கு காரணம் மாவை வெண்மையாக்க ப்ளீச்சிங் மாவு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அது உடலுக்கு நல்லதல்ல.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

ஆரோக்கியமில்லாத பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக வாங்காதீர்கள். அதிலும் சோடா, சிப்ஸ், கேக் மற்றும் வறுத்த நொறுக்குத் தீனிகள் கண்டிப்பாக உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தாது. மாறாக கூடுதல் கலோரிகளை தான் உண்டாக்கும். அப்படி நொறுக்குத் தீனி உண்ண வேண்டுமானால், வெப்பத்தில் வாட்டிய உணவுகளை உண்ணுங்கள். இவைகளை எப்போதாவது உண்ணலாம். ஆனால் எப்போதுமே உண்ணும் பழக்கம் இருந்தால், அதனை முதலில் நிறுத்துங்கள்.

முன் கூட்டியே திட்டமிடுதல்

முன் கூட்டியே திட்டமிடுதல்

வீட்டிற்கு தேவையான உணவுகளை வாங்க மளிகை கடைக்கு செல்லும் போது, முதலில் நேரத்தை முடிவு செய்துக் கொள்ளுங்கள். பின் உணவு பழக்கங்களை திட்டமிடுங்கள். இதனால் உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் உணவை மட்டுமே வாங்க முற்படுவீர்கள். மேலும் வாங்கப் போகும் பொருட்களையும் பட்டியலிடுங்கள். குறிப்பாக கடைக்குச் செல்லும் போது, அந்த பட்டியலையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள். அதில் எழுதியதை தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என்று உங்களுக்கு நீங்களே சத்தியம் செய்து கொள்ளுங்கள்.

உணவு பொருட்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிளை படியுங்கள்

உணவு பொருட்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிளை படியுங்கள்

உணவு பொருட்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் உள்ள ஊட்டச்சத்தின் விவரங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த உணவை எத்தனை பேருக்கு பரிமாறலாம், கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் எந்தளவு அடங்கியுள்ளது போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். வாங்கும் உணவு ஆர்கானிக் உணவா, இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். லேபிளில் காணப்படும் இரண்டு வார்த்தைகள் நம்மை குழப்பம் அடைய செய்யலாம். அவைகள் "நேச்சுரல்" மற்றும் "ப்யூர்". எனவே எதுவானாலும், கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Tips For Grocery Shopping

There are some very delicious foods on the racks of the food mart but they all aren't necessarily healthy. If you are committed to healthy eating, here's what to keep in mind when shopping for grocery.
Desktop Bottom Promotion