For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

By Maha
|

அனைவருக்குமே வீடானது சுத்தமாக பளிச்சென்று இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். அதற்காக வீட்டை சுத்தப்படுத்துவதற்கு, மார்கெட்டில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். இருப்பினும், வீட்டில் உள்ள அழுக்குகள் முற்றிலும் போகாமல் இருப்பதோடு, கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்தியப் பின், அந்த கெமிக்கலானது உடலுக்குள் சென்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே பலர் இயற்கைப் பொருட்களைக் கொண்டு, வீட்டை சுத்தப்படுத்த விரும்புவார்கள்.

அத்தகையவர்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை, ஒருசில எளிமையான பொருட்களைக் கொண்டு எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று கொடுத்துள்ளது. மேலும் இத்தகயை பொருட்களைப் பயன்படுத்தினால், வீட்டில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்குவதோடு, மணம் நிறைந்திருக்கும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காற்றூட்டப்பட்ட பானம்

காற்றூட்டப்பட்ட பானம்

வீட்டின் கழிவறையில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு, விலை அதிகமாக இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காற்றூட்டப்பட்ட பானங்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் கழிவறையை பளிச்சென்று மின்னச் செய்யலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், காற்றூட்டப்பட்ட பானத்தை கழிவறையில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பின் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை, சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டுமின்றி, பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை போக்குவதிலும் சிறந்தது. அதற்கு எலுமிச்சை துண்டை, பாத்திரங்களில் உள்ள கறைகளின் மீது தேய்த்தால், கறைகள் நீங்குவதோடு, பாத்திரம் மணத்துடன் இருக்கும்.

உப்பு

உப்பு

உணவிற்கு சுவையைக் கொடுக்கும் உப்பைக் கொண்டும் வீட்டை சுத்தப்படுத்தலாம். அதிலும் பாத்திரங்களில் உள்ள துருக்களை சுத்தப்படுத்த உப்பு பெரிதும் உதவியாக உள்ளது.

காட்டன் பட்ஸ்

காட்டன் பட்ஸ்

தற்போது அனைவரது வீட்டிலும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் இருக்கிறது. அத்தகைய சாதனங்களில் உள்ள கீ போர்ட்டை சுத்தப்படுத்துவதற்கு, பிரஷ் அல்லது வேறு ஏதாவது கடினமான பொருட்களை உபயோகிக்கக்கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் பட்ஸ் இருந்தால், அதனைக் கொண்டு சுத்தப்படுத்தலாம்.

வினிகர்

வினிகர்

ஃபர்னிச்சர்களில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால், அதனைப் போக்குவதற்கு வினிகரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஃபர்னிச்சர்களின் மீது தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியில் ஊற்றினால், அங்கு ஏற்பட்ட அடைப்பை எளிதில் போக்கலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

கதவுகளில் உள்ள அழுக்குகளை போக்க, பேக்கிங் சோடாவை, வினிகருடன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு துடைத்தால், எளிதில் கறைகள் போய்விடும்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ

ப்ளாக் டீயை, ஜன்னல் கதவுகளில் உள்ள க்ரீஸைப் போக்குவதற்கு பயன்படுத்தினால், டீயில் உள்ள டானிக் ஆசிட் எளிதில் கதவுகளில் உள்ள க்ரீஸை போக்கிவிடும்.

பப்பளிமாஸ் (Grapefruit)

பப்பளிமாஸ் (Grapefruit)

பப்பளிமாஸ் என்னும் கிரேப் ஃபுரூட், பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்குவதற்கு மட்டுமின்றி, அசைவ உணவு சமைத்த பாத்திரங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவியாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get A Dirt Free Home By Natural Ingredients

Lets take a look at some of these easy ways for women to use natural ingredients and achieve a dirt free home. These natural ways to get a dirt free home may look easy but its a challenge as it is time consuming.
Desktop Bottom Promotion