For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங் மெஷினில் துணியை துவைக்கிறவங்களா? இதெல்லாம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க...

By Maha
|

அனைவரும் வாஷிங் மெஷினில் துணியை துவைப்பது ஈஸியானது என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி வாஷிங் மெஷினில் துணியை துவைக்கும் போது, அலட்சியமாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அது வேறொன்றும் இல்லை, வாஷிங் மெஷினில் அனைத்து துணிகளையும் ஒன்றாக சேர்த்து போடுவதால், சில நேரங்களில் சாயம் போகும் துணிகளையும் அத்துடன் போட வேண்டிவரும். இதனால் மற்ற துணிகளில், சாயம் பட்டு துணியே பாழாகும்.

அதுமட்டுமின்றி, சில துணிகளில் எண்ணெய் பசை அதிகம் இருக்கும். அத்தகைய துணிகளை போட்டால், மற்ற துணிகள் பிசுபிவென்று இருக்கும். இதுப்போன்று சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே வாசிங் மெஷினில் துணியை போடும் முன், சில விஷயங்களை மனதில் கொண்டு, அதன் படி துணியை துவைத்து வந்தால், நிச்சயம் எந்த பிரச்சனையுமின்றி துணியைத் துவைக்கலாம்.

Easy Laundry Tips For You To Follow

போர்வை

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால், போர்வைகளை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு போர்வையை வாஷிங் மெஷினில் போட்டு, சோப்பு தூள் சேர்த்து நன்கு துவைத்து, பின் அதனை தவறாமல் சூரிய வெப்பத்தில் உலர வைக்க வேண்டும். அதிலும் இறுதியில் நீரில் அலசும் போது, நீரில் சிறிது வினிகர் சேர்த்துக் கொண்டால், நீண்ட நாட்கள் நறுமணம் நிலைக்கும்.

ஜீன்ஸ்

ஜீன்ஸ் வாஷிங் மெஷினில் போடும் முன், அவற்றை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் துவைக்க வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் 1 கப் உப்பு சேர்த்து ஊற வைத்தால், அதில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, ஜீன்ஸின் தரமும் குறையாமல் இருக்கும்.

எண்ணெய் கறை படிந்த துணிகள்

கறைகள் படிந்த துணிகளை வாஷிங் மெஷினில் போடும் முன், கறை படிந்த இடத்தில் சிறிது டால்கம் பவுடர் தூவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், துணியில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

உள்ளாடைகள்

உள்ளாடைகளை வாஷிங் மெஷினில் போடும் முன், அதனை ப்ளாக் டீயில் அலசி, பின் மெஷினில் போட்டால், உள்ளாடைகள் மென்மையாக இருக்கும். அதிலும் லேஸ் உள்ளாடைகளுக்குத் தான் இந்த டிப்ஸ் உதவும்.

ஸ்வெட்டர்

ஸ்வெட்டரை துவைக்கும் முன், அதனை வினிகர் கலந்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் வாஷிங் மெஷினில் போட்டு, 10 நிமிடம் அலசி எடுத்தால், ஸ்வெட்டர் பளிச்சென்று மின்னும்.

சாயம் போகும் துணிகள்

முக்கியமாக சாயம் போகும் துணிகளை சிறிது நாட்களை தனியாக துவைப்பது நல்லது. மேலும் சாயம் போவதை சீக்கிரம் தடுத்து நிறுத்த உப்பு மற்றும் வினிகர் கலந்து நீரில் சாயம் போகும் துணியை 15 நிமிடம் ஊற வைத்து, பின் மெஷினில் போட்டு அலசினால், விரைவில் சாயம் வெளியேறுவது நின்று விடும்.

மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாஷிங் மெஷினில் துணியைத் துவைத்தால், நிச்சயம் துணி நன்கு பளிச்சென்று புதிதாக மின்னும்.

English summary

Easy Laundry Tips For You To Follow

If you are wondering what else precautions you need to take while doing your laundry, here are some of the best laundry tips Boldsky has put together for you. By following these laundry tips, you can now have sweet smelling, non bleeding clothes.
Story first published: Monday, November 25, 2013, 19:29 [IST]
Desktop Bottom Promotion