For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இல்லத்தரசிகளுக்கு வீட்டைப் பராமரிக்க சில புத்திசாலித்தனமான டிப்ஸ்...

By Super
|

பொதுவாக வேலைக்குச் செல்பவர்கள், தாங்கள் மட்டும் தான் அதிக வேலை பார்க்கிறோம் என்று நினைத்து கொள்வர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அவ்வளவு வேலை பார்ப்பதில்லை என்பது அவர்களின் எண்ணம். திருமணம் ஆகாத பல பெண்களும் இப்படி நினைக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் திருமணமான இல்லத்தரசியா? அப்படியானால் வீட்டை பராமரிக்கும் வேலை என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது கண்டிப்பாக உங்களுக்கு புரிந்திருக்கும். திருமணமாகி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக வேலையே கிடையாது, மிகவும் சுலபமான வாழ்க்கை என்று தான் பல பேரின் எண்ணங்களாக இருக்கும். ஆனால் அவர்கள் செய்யும் கஷ்டமான வேலை ஒன்று இருக்கிறது. அதாங்க, வீட்டைப் பராமரிப்பது. இதற்காக எத்தனை பாதுகாவலர்களை வேலையில் அமர்த்தினாலும் சரி, இதை ஒரு இல்லத்தரசியாலேயே சரிவர செய்ய முடியும். அவர்களுக்கே அதற்கான தகுதியும் உள்ளன. வீட்டை பராமரிக்க பல குறிப்புகள் உள்ளன. ஒரு இல்லத்தரசியாக அதை நீங்கள் பின்பற்றி வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் எல்லா வகையான ஆபத்துகளில் இருந்தும் பாதுக்காக்கலாம்.

Clever Housekeeping Tips for Housewives

வீட்டை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதே வீடு பராமரித்தலுக்கு தேவையான மிக முக்கியமான குறிப்பு. வீடு சுத்தமாக இருந்தால் அதனை பராமரிப்பதும் சுலபமாகிவிடும். இதற்கு மேலாக, ஒரு ஆய்வின்படி, குப்பையும் அழுக்கும் அடைந்த வீட்டை விட, சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கும் வீட்டை பாதுகாப்பதே சுலபம். இதனை பல பேர் ஒப்புக் கொண்டும் உள்ளனர். அதனால் வீட்டை தினசரி அல்லது எல்லா வாரமும் சுத்தம் செய்வது ஒரு இல்லத்தரசியின் தலையாய கடமை. வீட்டில் இருக்கும் மற்றவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப வீட்டை பராமரிக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக குழந்தைகளுக்கு அவர்களின் தேவையை சொல்லத் தெரியாவிட்டாலும், அவர்களின் ஆசை பூர்த்தியாக வேண்டும் என்று எண்ணுவர். எனவே அவர்களின் தேவையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப நடந்துக் கொள்ளுங்கள்.

எப்போதுமே ஒரு பொருளை அதற்கு உண்டான இடத்தில் வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைவரையும் அறிவுறுத்த வேண்டும். இது வீட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைக்க உதவும். இதில் எதாவது ஒழுங்கீனத்தை பார்த்து, அதை சரி செய்யாவிட்டால் பின்னர் வீட்டை சுத்தமாக வைக்க முடியாது. எப்படியானாலும் அதை நீங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும். எனவே காலத்தைக் கடத்தாமல், அதை உடனே சுத்தம் செய்யுங்கள். வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல், அதை அன்பு குடியிருக்கும் கோவிலாக பார்க்க வேண்டும்.

அடுத்து, பொருட்களை அதற்குரிய இடத்தில் வைப்பதை பற்றி பார்க்கலாம். வீட்டை பராமரிப்பதில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எப்போதுமே வீட்டிலுள்ள அறைகளில், தேவையான பொருட்களை வருங்காலத்தில் சேமித்துக் கொள்ள சீரான முறையில் வடிவமைக்க வேண்டும். குப்பைகளையும், தேவையற்ற பொருட்களையும் தூக்கி எறிய சோம்பேறித்தனப் பட்டு, சிலர் அதை ஒரு மூலையில் அடைத்து வைப்பர். ஆனால் தேவையற்ற பொருட்களை எப்போதுமே வீட்டில் சேர்த்து வைக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் இல்லத்தரசிகள் பின்பற்றி வந்தால், வீட்டை எந்த ஒரு கஷ்டமும் இன்றி சுத்தமாக பராமரிக்கலாம்.

English summary

Clever Housekeeping Tips for Housewives | இல்லத்தரசிகளுக்கு வீட்டைப் பராமரிக்க சில புத்திசாலித்தனமான டிப்ஸ்...

There are various house keeping tips which you can use as a house wife, in order to protect your house from all types of dangers.
Desktop Bottom Promotion