For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒயின் டம்ளரை சுத்தப்படுத்துவதற்கான 8 வழிகள்!!!

By Maha
|

தற்போது ஆல்கஹால் குடிப்பது ஒரு ஃபேஷனாகிவிட்ட நிலையில், பலர் தங்கள் வீடுகளிலேயே மருந்து போன்று ஆல்கஹாலில் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும் ஒயினை குடித்து வருகிறார்கள். மேலும் அதனை குடிப்பதற்கு என்று தனியாக ஒரு டம்ளரையே வைத்திருப்பார்கள். ஆனால் ஒயினில் பல வெரைட்டிகள் இருப்பதால், அவற்றில் சில ஒயின்கள் டம்ளரில் கறையை உண்டாக்கிவிடும்.

ஆகவே ஒயின் டம்ளரை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு உடனே சுத்தப்படுத்தினால், ஒயின் டம்ளர் புதிது போன்று மின்னும். அதுமட்டுமின்றி, சில ஒயின்கள் டம்ளரில் வாசனை போகாதவாறு இருக்கும். அத்தகைய வாசனையையும், கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால் நீங்கிவிடும்.

சரி, இப்போது அந்த ஒயின் டம்ளரை சுத்தப்படுத்துவதற்கு உதவும் சில பொருட்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்து கலந்து ஒயின் டம்ளரை கையாலேயே தேய்த்து கழுவினால், டம்ளரில் உள்ள கறைகள் நீங்குவதோடு, துர்நாற்றமும் போய்விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அதனைக் கொண்டு டம்ளரை தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலசினால், டம்ளர் பளிச்சென்று இருக்கும்.

உப்பு

உப்பு

உப்பு கூட ஒரு சிறப்பான பொருள். அதற்கு உப்பை ஒயின் டம்ளரில் போட்டு தேய்த்து கழுவ வேண்டும்.

வினிகர்

வினிகர்

வினிகர் மற்றும் தண்ணீரை ஒன்றாக கலந்து, அதனை ஒயின் டம்ளரில் ஊற்றி நிரப்பி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், அதில் உள்ள துர்நாற்றம் நீங்கிவிடும்.

சுடுநீர்

சுடுநீர்

ஒயின் டம்ளரில் சுடுநீரை நிரப்பி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் டிஷ் வாஷ் கொண்டு தேய்த்து கழுவினாலும், டம்ளர் மின்னும்.

டிஷ் வாஷ் நீர்மம்

டிஷ் வாஷ் நீர்மம்

சிம்பிளான முறையில் ஒயின் டம்ளரை கழுவ வேண்டுமென்றால், டிஷ் வாஷ் நீர்மம் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். குறிப்பாக சோப்பு கொண்டு டம்ளரை கழுவிட வேண்டாம். ஏனெனில் அது டம்ளரின் வாழ்நாளை குறைத்துவிடும்.

காட்டன்

காட்டன்

காட்டனை நீரில் நனைத்து, ஒயின் டம்ளரை நன்கு துடைத்துவிட்டு, பின் சோப்பு தண்ணீர் கொண்டு கழுவினால், டம்ளர் மணத்துடன் இருப்பதோடு, சுத்தமாகவும் இருக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, அதனை ஒயின் டம்ளரில் கொஞ்சம் போட்டு, பின் தண்ணீரை நிரப்பி 5 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cleaning Wine Glasses In 8 Ways

As a lover of this beverage, you need to take ample care for your wine glasses. Wine which stains the glasses should be washed immediately with these home remedies we have lined up for you. Take a look at some of the easy and simple ways to wash your wine glasses.
Desktop Bottom Promotion